For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மனசுல இந்த 6 விஷயமும் பிரம்ம மாதிரி வந்துபோகுதா?... இல்லைன்னு பொய் மட்டும் சொல்லாதீங்க...

நம் வாழ்வில் சில தருணங்களில் நாம் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும். சில சமயங்களில் முன் கூட்டியே அறியும் சக்தியை பெற்று இருப்பது போன்று நமக்கு தோன்றும். அப்படி மனதின் அசைவில் நடக்கும் சில ஆச்சரியமூட்ட

By Suganthi Rajalingam
|

நம் வாழ்வில் சில தருணங்களில் நாம் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும். இந்த டெலிபதி நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தது என்ற ஆச்சர்யம் கூட நமக்கு இருக்கலாம். சில சமயங்களில் முன் கூட்டியே அறியும் சக்தியை பெற்று இருப்பது போன்று நமக்கு தோன்றும்.

6 signs of physic

இப்படி ஏன் நடக்கிறது என்றாவது நாம் யோசித்து இருக்கோமா. அப்படி மனதின் அசைவில் நடக்கும் சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள், நுண்ணுனர்வு இவற்றை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பேச உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொலைபேசி அழைப்பு

தொலைபேசி அழைப்பு

நமக்கு அடிக்கடி வரும் நபரின் தொலைபேசி அழைப்பை நாம் எளிதாக கண்டறிந்து விடுவோம். யார் கால் செய்வது என்று நமக்கு முன் கூட்டியே தெரியும். ஏனெனில் அவர்கள் அடிக்கடி சரியான நேரத்தில் அழைப்பதால் இது நடக்கிறது. இது ஒரு சாதாரண விஷயம் மட்டுமே. ஆனால் நீங்கள் பல வருடங்களாக தொடர்பில் இல்லாத ஒரு நபர் உங்களை அழைக்கும் போது அதை முன்கூட்டியே கண்டறிவது சாதாரண விஷயம் அல்ல. இதைத் தான் முன்னறியும் திறன் என்கின்றனர். இது அடிக்கடி நிகழ்வது ஒரு விதமான உள நோய் என்கின்றனர்.

அன்பானவர்களுக்கு ஆபத்து

அன்பானவர்களுக்கு ஆபத்து

சில சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரும் விபத்து போன்றவைகளை முன் கூட்டியே அறிந்து அதீத கவலை கொள்வது போன்றவை சாதாரண விஷயம் கிடையாது. இது ஒரு உளம் சார்ந்த இணைப்பு.

பெற்றோர்கள் - குழந்தைகள், உடன் பிறப்புகள் இடையே, இரட்டை சகதோரர்கள் இடையே, கணவன் - மனைவி இடையே போன்ற அன்பான உறவுகளுக்கு இடையே இது நிகழ்கிறது.

தேஜாவு

தேஜாவு

நீங்கள் இதுவரை செல்லாத ஒரு நபரின் வீட்டிற்கு செல்ல இருக்கிறீர்கள். அவரின் வீடு எப்படி இருக்கும் என்று கூட உங்களுக்கு தெரியாது. ஆனால் அவரின் வீட்டின் அறை எங்கே இருக்கும் என தெரியும், எப்படி அலங்கரிக்கப்பட்டு உள்ளது, என்ன பெயிண்ட், என்ன விளக்குகள் உள்ளன போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட முன்கூட்டியே தெரிவது தான் தேஜாவு என்கின்றனர். இதுவும் ஒரு உளம் சார்ந்த நிகழ்வு தான்.

தீர்க்கதரிசன கனவுகள்

தீர்க்கதரிசன கனவுகள்

நாம் எல்லாரும் கனவு காண்போம். நம் எதிர்காலத்தை பற்றி, தெரிந்த நபர்களை பற்றி, உலகத்தை பற்றி இப்படி ஏராளமான கனவுகள் நமது மனதில் நிகழ்கின்றன. இது ஒரு சாதாரண கனவுகள். ஆனால் நடக்கப் போவதை முன்கூட்டியே கனவாக காணும் அதிசயம் தான் இந்த தீர்க்கதரிசன கனவுகள் என்பது. உங்களைப் பற்றி இருக்கலாம், ஏன் உங்கள் நண்பருக்கு நடக்கப் போகும் நிகழ்வை பற்றி இருக்கலாம், ஏன் உலகிற்கு நிகழப் போகும் ஆபத்தை பற்றிய கனவாக கூட இருக்கலாம். இந்த கனவுகள் எல்லாம் தெளிவான, விரிவான, கட்டாயமாக நடக்கும் பார்வையுடன் நிகழும். இந்த மாதிரியான கனவு நிகழ்ந்ததும் ஒரு பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள் அல்லது பதிவு செய்து கொள்ளுங்கள் . ஏனென்றால் இது உடனடியாக மறையக் கூடிய கனவுகள். இது உங்கள் உளம் சார்ந்த நிகழ்வுக்கு ஒரு சாட்சியாக அமையும்.

உள்ளுணர்வு

உள்ளுணர்வு

நீங்கள் ஒரு பொருளையோ அல்லது நபரையோ இதற்கு முன்னாடி பார்த்து இருக்க மாட்டீர்கள். ஏன் அறிந்து கூட இருக்கமாட்டீர்கள். ஆனால் அந்த பொருளையோ அல்லது நபரையோ தொட்டாலோ அல்லது பார்த்தாலே போதும் அவர்களை பற்றிய முழுவிவரங்களையும் உங்களால் கூற இயலும். இதைத் தான் அதீத பகுத்தறிவு உணர்வு என்று கூறுகின்றனர். உங்கள் உள்ளுணர்வு அவர்களை பற்றி கூறுவதும் சரியாக அமையும். இதுவும் ஒரு உளம் சார்ந்த நிகழ்வு.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பர்களிடமோ அல்லது குடும்ப உறுப்பினர்களிடமோ நடக்கவிருக்கும் அபாயத்தை கண்டு முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை விட்டுள்ளீர்களா. ஆமாம் அவர்களின் செயல், பழக்க வழக்கங்கள், திட்டம் இவற்றை கொண்டு முன்கூட்டியே உங்கள் யூகங்களை பிரதிபலிப்பீர்கள்.ஆனால் இது ஒரு இயல்பான உணர்வு. ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு நபர், அறியாத ஒரு நபர் இவர்களுக்கு நடக்கவிருக்கும் அபாயத்தை முன்கூட்டியே வலிமையாக அறிவது தான் சக்தி வாய்ந்த உணர்வு என்கின்றனர். இதை அறிந்து அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுவிப்பீர்கள். இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்தால் அதுவும் ஒரு உளம் சார்ந்த நிகழ்வு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Signs That You Might Be Psychic

Those who have made a lifetime of the study of psychic phenomena suspect that most, if not all of us are psychic to one degree or another. I'm sure most of us can point to events in our lives that indicate instances of telepathy (communication of thoughts) or precognition (knowing what is going to happen). Perhaps it's only happened once or a few times. So we have discuss about precognition, extrasensory perception, deja vu, strongest feelings and so on.
Desktop Bottom Promotion