அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள்

Posted By: Sathya Karuna
Subscribe to Boldsky

உலகெங்கிலும் 15 நாடுகள் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. உலகின் பழமையான வேலை, இப்போது ஒரு நீண்ட காலமாக, ஒரு வெறுப்பூட்டும் மற்றும் சீர்கெட்ட வேலையாக கருதப்படுகிறது.

15 Countries Around The World That Have Legalized Prostitution

வறுமை அல்லது எதிர்பாரா சூழ்நிலைகள் போன்ற காரணங்களால், விபச்சாரமானது தடை செய்யப்பட்டாலும் அல்லது சட்டபூர்வமானதாக இருந்தாலும், விபச்சாரம் நிலவுகிறது மற்றும் தொடருகிறது. சில நாடுகள் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சில நாடுகளில் நடைமுறையில் தடை விதிக்கின்றன ஆனால் சில நாடுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு, சுகாதார மற்றும் சமூக நலன்களை வழங்கி நெறிப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூசிலாந்து

நியூசிலாந்து

2003-ஆம் ஆண்டு முதல் இங்கு விபச்சாரம் சட்டத்திற்கு உட்பட்டுள்ளது. பொது சுகாதார மற்றும் வேலைவாய்ப்பு சட்டங்களின் கீழ் இயங்கும் உரிமம் வழங்கப்பட்ட விபச்சாரங்களும் கூட உள்ளன. நிச்சயமாக இது ஒரு முற்போக்கான நடவடிக்கை.

 ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விபச்சாரத்தின் சட்டபூர்வ நிலைமை மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு வேறுபடுகிறது. இது சில பகுதிகளில் சட்டப்பூர்வமானதாகவும், மற்ற பகுதிகளில் சட்டவிரோதமானதுமாக உள்ளது. விபச்சார உரிமைக்கும் இதே நிலைமை இங்கு காணப்படுகிறது.

 ஆஸ்திரியா

ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமானது. பதினாறாம் வயதிற்கு மேற்பட்ட வயதினர் பதிவு செய்ய வேண்டும். காலவரையற்ற சுகாதார பரிசோதனைகளில் ஈடுபட வேண்டும். மேலும் வரி செலுத்த வேண்டும். இருந்தபோதிலும், இங்கு நிறைய கடத்தல் மற்றும் வன்கொடுமைகள் நிகழ்கிறது.

 வங்காளம்

வங்காளம்

இங்கு ஆண் விபச்சாரம் சட்டவிரோதமானது, ஆனால் மற்ற எல்லாவற்றிற்கும் சட்டபூர்வமானதாகும். வங்காளதேசத்தில் கடுமையான கடத்தல் சூழல் உள்ளது. இது ஊழல் மூலம் நிலைத்திருக்கிறது. தரகு வேலையும், விபச்சாரத்தை உரிமையாக்குவதும் இங்கு சட்டமாகும்.

 பெல்ஜியம்

பெல்ஜியம்

அவர்கள் குற்றம்,வன்முறை மற்றும் விபச்சாரத்தோடு தொடர்புடைய பயத்தை அகற்ற விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கிய தோடல்லாமல், மேலும் கைரேகை (fingerprint) மற்றும் கீகார்டு(keycart) தொழில்நுட்பங்களைக் கொண்டு விபச்சாரத்தினை சரியான முறையில் நெறிப்படுத்துகின்றனர்.

பிரேசில்

பிரேசில்

இங்கே விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமாக இருக்கிறது. நீங்கள் பாரம்பரியம், சுய ஒழுக்கம், சமூகக்கேடு என்றெல்லாம் யோசித்தீர்களானால் அந்த பகுதியில் வாழவும் முடியாது. சமூகத்தை விட்டு வெளியே புறம் தள்ளுப்படுவீர்கள். அந்த அளவுக்கு அந்தப் பகுதிகளில் விபச்சாரம் பரந்து விரிந்து, மக்கள் மற்றும் அரசின் ஆதரவோடு நடந்து வருகிறது.

 கனடா

கனடா

தன்னைத்தானே விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் சட்டபூர்வமானதாகும். ஆனால் 2014-இன் இறுதியில் செக்ஸிற்கு விலை வைத்தல் சட்டவிரோதமானது. இதுஇங்கு மிக உறுதியாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆழமான குறைபாடுள்ள அமைப்பு பாலியல் தொழிலாளர்களை மிக ஆபத்தான நிலையில், இன்னும் வறுமையில் தான் வைத்திருக்கிறது.

 கொலம்பியா

கொலம்பியா

கொலம்பியாவில் பாலியல் தொழிலில் வேலை செய்வது சட்டபூர்வமானது. இங்கு பாலியல் தொழிலாளிகள் தாங்களாகவே இந்த பணிக்கு முன் வருகிறார்கள். தரகர் மூலம் தொழில் செய்யும் பழக்கம் இங்கு கிடையாது. (pimping) இல்லை. விபச்சாரம் குறிப்பாக கார்டேஜீனா மற்றும் பரான்குயிலா போன்ற நகரங்களில் பரவலாக உள்ளது.

டென்மார்க்

டென்மார்க்

விபச்சாரம் இங்கே சட்டமாகும். இன்னும் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், யாரால் பாலியல் தொழிலாளிகளுக்கு பணம் அதிகமாகத் தர முடியவில்லை என்றாலும், அந்த தொழிலாளியின் நிலையை கருத்தில் கொண்டு, அரசாங்கமே நிதியுதவி செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற அரச வழிவகை செய்கிறது.

 ஈக்வடார்

ஈக்வடார்

பாலியல் வேலை தொடர்பான எல்லாமே இங்கு சட்டபூர்வமானதாகும். நீங்கள் உங்கள் உடலை விற்கலாம், விபச்சாரத் தொழில் செய்யலாம் அல்லது தரகர் மூலமும் விபச்சாரத் தொழில் செய்யலாம். ஆனால் எவரேனும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில்ஈடுபடுத்த முடியாது. அப்படி செய்தால் நிச்சயம் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். அது சட்ட விரோத செயலாகக் கருதப்படுகிறது.

 பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்சில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் பொதுமக்கள் மீது விசாரணை நடத்துவது இன்னும் சட்டத்திற்கு புறம்பானது. தரகுவேலையும் சட்டவிரோதமானது. போரின் பின்னர் 1946-இல் பிரான்சில் விபச்சாரமும் சட்டவிரோதமானது.

 ஜெர்மனி

ஜெர்மனி

விபச்சாரம் 1927 ல் சட்டப்பூர்வமாக்கப்பட்டது மற்றும் முறையான விபச்சாரங்கள் உள்ளன. தொழிலாளர்கள் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டு, வரி செலுத்த வேண்டும் மற்றும் அவர்கள் ஓய்வூதியம் போன்ற சமூக நலன்களை பெறுகின்றனர்.

கிரீஸ்

கிரீஸ்

கிரேக்கமும் ஜேர்மன் முறையை பின்பற்றி, சமுதாயத்தில் விபச்சாரம் என்பதும் உண்மையான ஒரு வேலை என்கிறது. எனவே பாலியல் தொழிலாளர்கள் சம உரிமைகள் பெற்று, ஆரோக்கியமான சோதனைகளுக்கு செல்ல வேண்டும்.

இந்தோனேசியா

இந்தோனேசியா

விபச்சாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது சட்டத்தில் எந்த தெளிவான வடிவத்திலும் கூட இல்லை. இது பாலியல் வர்த்தகம் சட்டபூர்வமானது என்று எளிமையாக கூறுகிறது. இது கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறார்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

 நெதர்லாந்து

நெதர்லாந்து

இது சிவப்பு-சாளர (red-window) பாலியல் தொழிலாளர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். மற்ற நிறைய விஷயங்களை போல, இங்கே விபச்சாரம் வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உள்ளது. அவர்கள் எப்போதும் மற்ற இடங்களில் தடை செய்யப்பட்டதாக கருதப்படும் செயல்களைச் சற்று வெளிப்படையாகவே கையாளுகிறார்கள்.

இந்தியாவில் சட்டங்கள் எங்கே நிற்கிறது?

இந்தியாவில் சட்டங்கள் எங்கே நிற்கிறது?

விபச்சாரம் என்பது நம் நாட்டில் சட்டவிரோதமானதல்ல. ஆனால் வழக்குரைத்தல் மற்றும் பொது விபச்சாரம் சட்டவிரோதமானது. ஒரு விபச்சாரத்தை உரிமையாக்குவது சட்டத்திற்கு எதிராகவும் இருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் மிகவும் அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஜி.பி. ரோட் மற்றும் காமத்திபுரா போன்ற இடங்கள் நிரூபிக்கும் விதமாக உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: world உலகம்
English summary

15 Countries Around The World That Have Legalized Prostitution

Some countries choose to outright ban the practise, while other countries have tried regulating prostitution, providing sex workers with health and social benefits.
Story first published: Monday, April 9, 2018, 9:10 [IST]