For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை ஆண்ட மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் - டாப் 25!

உலகை ஆண்ட மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் - டாப் 25!

|

உலகின் பல காலக்கட்டங்களில் தங்கள் ஆதிக்கத்தை பெருமளவு செலுத்தி வந்த பேரரசர்கள், சாம்ராஜ்ஜியங்கள் பலவன உள்ளன. பொதுவாக இந்த உலகை ஆண்ட சாம் ராஜ்ஜியங்கள் பட்டியலில் நமது தமிழ் பேரரசு சோழர்களின் பெயர் இடம்பெறாது. காரணம் பெருமபாலான ஆய்வுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆராய்ந்து திரட்டப்பட்ட தகவல்களின் படி தான் இந்த பட்டியல்கள் அமைந்துள்ளன.

பெரும்பாலும் பலரும் உலகை ஆண்ட பெரிய பேரரசு என்றால் அது ரோமானியர்கள் என கருதி வருகிறார்கள். ஆனால், செங்கிஸ்கான் என ஒரு மங்கோலிய பேரரசு இருந்தான், இன்று உலகில் வாழும் ஒவ்வொரு 27 ஆண்களில் ஒருவர் அவனது வம்சாவளியை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. பார்த்துக் கொள்ளுங்கள், அப்படியானால் அவன் எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்?

வாருங்கள் காலம் வாரியாக உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்திய சாம்ராஜ்ஜியங்கள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#25 அகேமனிட் பேரரசு

#25 அகேமனிட் பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 500 கி.மு

18ம் நூற்றாண்டில் வரலாற்றின் பெரும் சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்தவர்கள் அகேமனிட் பேரரசு . இவர்களை முதல் பெர்ஷியன் சாம்ராஜ்ஜியம் என்றும் அழைப்பதுண்டு. கி.மு 550 களில் இவர்கள் 2.2 மில்லியன் சதுரடி கொண்ட பெரும் சாம்ராஜ்ஜியத்தை மத்திய கிழக்கு பகுதிகளிலும், ரஷ்யாவிலும் கொண்டிருந்தனர். இவர்களது சமூக கட்டமைப்பு பெரும் புகழ் பெற்று விளங்கியது.

Image Courtesy : commons.wikimedia

#24 மாசிடோனியன் பேரரசு

#24 மாசிடோனியன் பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 323 கி.மு

மாசிடோனியன் பேரரசை முன்னெடுத்து சென்றவர் அலக்சாண்டர் தி கிரேட். உறுதியான கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை அமைத்தவர் என்ற பெருமை இவருக்கு என்றுமே உண்டு. ஒட்டுமொத்த உலகில் 3.5% நிலப்பரப்பை ஆட்சி செய்த பெரும் ஆரசு.

Image Courtesy : commons.wikimedia

#23 மௌரிய பேரரசு

#23 மௌரிய பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 250 BC

அலக்சாண்டர் மறைவிற்கு பிறகு, இந்தியாவும் அதை சுற்றி இருந்த பெரும் இடங்களையும் மௌரிய பேரரசு தன்வசம் படுத்திக் கொண்டது. இதனால் இந்தியாவின் மாபெரும் பேரரசு என்ற பெயர் கொண்டனர். மௌரிய பேரரசு அசோகா இந்த சாம்ராஜ்ஜியத்தை பெருமளவில் வெற்றிகரமாக வழிநடத்தினார். இந்த அரசின் கீழ் இருந்த நிலப்பரப்பின் அளவு 1.93 மில்லியன் சதுரடி.

Image Courtesy : commons.wikimedia

#22 ஜியோன்க்கு பேரரசு

#22 ஜியோன்க்கு பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 209 கி.மு.

கி.மு நான்காம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டில் சீனாவின் ஆதிக்கமும் பெரிதாக இருந்தது. ஜியோன்க்கு பேரரசு தனது ஆதிக்கத்தை வடக்கு புறம் செலுத்தியது. அந்த காலத்தில் மொத்த உலகில் 6% நிலப்பரப்பை இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். பெரும் சக்தி கொண்டு திகழ்ந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#21 மேற்கு ஹான் வம்சம்

#21 மேற்கு ஹான் வம்சம்

ஆட்சி: ஏறத்தாழ 50 கி.மு.

ஹான் வம்சம் பற்றி பேச வேண்டும் என்றால், ஜியோன்க்கு பேரரசுக்கு பிறகு இவர்கள் 2.3 மில்லியன் சதுரடி கொண்ட இடத்தை ஆட்சி செய்து வந்தனர். ஜியோன்க்கு பேரரசை கடந்து இவர்கள் வியட்நாம் மற்றும் கொரியன் பகுதிகளையும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ரோமர்களுடன் இவர்கள் பட்டு வர்த்தகம் செய்ததாகவும் வரலாற்று தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

Image Courtesy : commons.wikimedia

#20 கிழக்கு ஹான் வம்சம்

#20 கிழக்கு ஹான் வம்சம்

ஆட்சி: ஏறத்தாழ 100 கி.மு.

ஏறத்தாழ இருநூறு வருடங்கள் கிழக்கு ஹான் வம்சம் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். பல்வேறு ஆட்சியாளர்களை கடந்து, கிளர்ச்சிகள், உறுதியற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி என பலவற்றை கடந்து இவர்கள் உலகின் பெரும் சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு கீழ் 190 ஆயிரம் சதுரடி நிலம் இருந்தது.

Image Courtesy : commons.wikimedia

#19 ரோமானிய சாம்ராஜ்ஜியம்

#19 ரோமானிய சாம்ராஜ்ஜியம்

ஆட்சி: ஏறத்தாழ 117 கி.பி.

பெரும்பாலும் வரலாற்றை படிக்கும் போது அனைவரும் அறிந்த ஒரு சாம்ராஜ்ஜியம், ரோமானிய சாம்ராஜ்ஜியம். உலகின் பல நாடுகளில் வாழும் மக்களும் உலகின் பெரும் சாம்ராஜ்ஜியம் என எண்ணி வரும் பேரரசு ரோமானிய பேரரசு. ஆம், 117 கி.பி.-யில் இவர்கள் தான் உலகில் பெருமளவு ஆட்சி செய்து வந்தனர். ரோமானியர்கள் 1.93 மில்லியம் சதுரடியை ஆட்சி செய்துவந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#18 கோகூர்கர் ககனேட்

#18 கோகூர்கர் ககனேட்

ஆட்சி: ஏறத்தாழ 557 கிபி

கோகூர்கர் ககனேட்நார்த் தற்போதைய சென்ட்ரல் சீன பகுதி. இவர்களை ஒரு நாடோடி பழங்குடி என்றும் கூறுகிறார்கள். ஆசியாவின் மத்திய பகுதியில் இருந்து வளர்ந்தவர்கள். ஜியோன்க்கு பேரரசு போல பெரும் மக்கள் கூட்டம் கொண்டிருந்தனர். ஆசியாவில் பெருமளவில் இவர்கள் பட்டு வர்த்தகம் செய்து வந்ததாக அறியப்படுகிறது.

Image Courtesy : commons.wikimedia

#17 ரஷீதுன் கலிபாட்

#17 ரஷீதுன் கலிபாட்

ஆட்சி: ஏறத்தாழ 655 கிபி

ரஷீதுன் கலிபாட் தான் முதல் இஸ்லாமிய பேரரசாக கூறப்படுகிறது. முகமதுவின் மரணத்திற்கு பிறகு இஸ்லாம் சமுதாயத்தை முன்னிறுத்த அரபுடன் இணைந்து இவர்கள் எகிப்து, சிரியா மற்றும் பெர்ஷியன் பேரரசு போன்றவர்களை ஆதிக்கம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Image Courtesy : commons.wikimedia

#16 உமய்யாத் கலிபாட்

#16 உமய்யாத் கலிபாட்

ஆட்சி: ஏறத்தாழ 720 கி.பி.

நான்கு முக்கிய களிபாட்களில் இரண்டாவது உமய்யாத் கலிபாட். உமய்யாத் கலிபாட்முதல் இஸ்லாம் உள்நாட்டு போரில் ஈடுபட்டார், இவர் மத்திய கிழக்கு பகுதிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தினார். வடக்கு ஆப்ரிக்கா மற்றும் தென் ஐரோப்பியாவில் உமய்யாத் கலிபாட் தனது ஆதிக்கத்தை பரப்பினார். 720 கி.பியில் உலக ஆண்ட பெரும் சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#15 அப்பாஸித் கலிபாட்

#15 அப்பாஸித் கலிபாட்

ஆட்சி: ஏறத்தாழ 750 AD

உமய்யாத் கலிபாட்டின் முப்பது ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு கிளர்ச்சி ஏற்படுத்தி அப்பாஸித் கலிபாட் தனது ஆதிக்கத்தை துவக்கினார். முகமதுவின் இரத்தவழி உறவில் மிகவும் நெருக்கமானவர் என அறியப்படுகிறது. கி.மு 750 இவரது ஆட்சியை கோல்டன் ஏஜ் என அழைக்கிறார்கள்.சீனாவின் வலிமையான உறவை ஏற்படுத்தி கொண்டு ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார் அப்பாஸித்.

செங்கிஸ் கான் வருகை வரை, இவர்களது ஆட்சி தான் தலைதூக்கி இருந்துள்ளது.

Image Courtesy : commons.wikimedia

#14 திபெத்திய சாம்ராஜ்ஜியம்

#14 திபெத்திய சாம்ராஜ்ஜியம்

ஆட்சி: ஏறத்தாழ 800 AD

கி,மு 800களில் திபெத்திய சாம்ராஜ்ஜியம், உலகின் மூன்று சதவீத பகுதியில் வசித்து வந்தது. மேற்கு பகுதியில் இந்த காலத்தில் அரபு சாம்ராஜ்ஜியம் தலைதூக்கி இருந்தது. இந்த சாம்ராஜ்ஜியம் இருநூறு ஆண்டுகள் வரை தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது.

Image Courtesy : commons.wikimedia

#13 டங் வம்சம்

#13 டங் வம்சம்

ஆட்சி: ஏறத்தாழ 820 கிபி

சீன கலாச்சாரத்தில் ஒரு கோல்டன் ஏஜ் என டங் வம்சத்தினை குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். சீனா, ஆசியாவில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டிருந்த காளத்தில் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

Image Courtesy : commons.wikimedia

#12 மங்கோலிய பேரரசு

#12 மங்கோலிய பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1270 கிபி

மங்கோலிய பேரரசு எனும் போது, செங்கிஸ்கான் என்ற பெயரை மறந்துவிட முடியாது. உண்மையில் இவரது பெயர் சிங்கிஸ்கான் என்றும் கூறுகிறார்கள். ஏறத்தாழ 9.27 மில்லியன் சதுரடியை ஆண்ட மாமன்னன். இவரது சாம்ராஜ்ஜியம் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை விட நன்கு மடங்கு பெரியது. தற்போதைய யூ.எஸ் உடன் ஒப்பிட்டால் மூன்று மடங்கு பெரியது.

Image Courtesy : commons.wikimedia

#11 தி கோல்டன் ஹார்டே கான்னேட்

#11 தி கோல்டன் ஹார்டே கான்னேட்

ஆட்சி: ஏறத்தாழ 1310 கி.மு

செங்கிஸ்கான் முட்டாள் அல்ல, தனது தலைமை அல்லாமல் உலகில் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைப்பது இன்றியமையாத செயல் என்பதை அவன் அறிந்திருந்தான். தனது சாம்ராஜ்ஜியத்தை நன்கு பங்குகளாக பிரித்து தனது மகன்களை ஆள செய்தான். இதனால் செங்கிஸ்கானின் சாம்ராஜ்ஜியம் இன்னும் வலிமையானது. மங்கோலிய பேரரசான செங்கிஸ்கானுக்கு பிறகு தி கோல்டன் ஹார்டே கான்னேட் தனது தனி ஆட்சியை நிறுவினான். 1310 கி.மு.வில் இது உலகின் பெரிய சாம்ராஜ்ஜியமாக விளங்கியது.

Image Courtesy : commons.wikimedia

#10 யுவான் வம்சம்

#10 யுவான் வம்சம்

ஆட்சி: ஏறத்தாழ 1310 கிபி

சீனாவின் வடக்கு பகுதிகள் ஏற்கனவே செங்கிஸ்கானின் பேரனின் கட்டுப்பாடில் தான் இருந்தது. யுவான் வம்சம் 1310கிபியில் தன்னை ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக உருவாக்கி கொண்டது. மங்கோலிய பேரரசின் மிகபெரிய பகுதியாக அமைந்தது. 14ம் நூற்றாண்டில் இவர்கள் உலகின் பெரும் பேரரசாக திகழ்ந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#09 மிங் வம்சம்

#09 மிங் வம்சம்

ஆட்சி: ஏறத்தாழ 1450 கிபி

யுவான் வம்சத்தின் வீழ்ச்சிக்கு பிறகே, மிங் வம்சம் உருவானது. இவர்களால் வடக்கில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் இருந்தனர். ஆயினும் கூட உலக நிலப்பரப்பில் 4.36% தங்கள் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்தனர். சீனாவின் முதல் கப்பற்படை இவர்களுடையது என்பதில் பெருமைக் கொண்டார்கள். இவர்கள் கப்பற்படை கொண்டு நிறைய வர்த்தகம் செய்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#08 ஒட்டோமான் பேரரசு

#08 ஒட்டோமான் பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1683 கிபி

இஸ்தான்புல் கான்ஸ்டண்டினோபிலாக இருந்த போது, ஒட்டோமான் பேரரசு (துருக்கிய பேரரசு என்றும் அழைக்கப்படுகிறது) அதன் தலைமை பகுதியாக இருந்தது. இவர்கள் ஆண்ட நிலப்பரப்பு குறைவு எனினும், வெற்றியில் சிறந்தவர்களாக இருந்தனர். ஏறத்தாழ கிழக்கு மற்றும் மேற்கிற்கு நடுவே ஆறு நாடுகளை தங்கள் வசம் வைத்திருந்தனர். முதலாம் உலக போர் வரை தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#07 கியுங் வம்சம்

#07 கியுங் வம்சம்

ஆட்சி: ஏறத்தாழ 1790 கிபி

சீனாவின் கடைசி ஏகாதிபத்தியம் கியுங் வம்சம். இவர்கள் பல விஷயங்களை சரியாக செய்தனர். இவர்கள் கொரியா, தைவான் போன்றவ நாடுகளை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். தங்கள் ராஜ்ஜியத்தை இழக்கும் வரை ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். இதன் பிறகே சீன குடியரசு பிறந்தது.

Image Courtesy : commons.wikimedia

#06 ஸ்பானிஷ் பேரரசு

#06 ஸ்பானிஷ் பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1810 AD

ஸ்பானிஷ் சாம்ராஜ்ஜியம் 15ம் நூற்றாண்டிலேயே உலக வரலாற்றில் பெரும் பேரரசாக திகழ்ந்தனர். இவர்கள் 5.92 மில்லியன் சதுரடி நிலபரப்பை தங்கள் ஆட்சிக்குக் கீழ் வைத்திருந்தனர். வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் பெரும் ஆதிக்கம் செலுத்தினர். மேலும், கரீபியன் தீவுகளிலும், ஆப்ரிக்கா, தென் பசுபிக் பகுதிகளில் பெரும்பாலான இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#05 போர்த்துகீசிய பேரரசு

#05 போர்த்துகீசிய பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1820 கிபி

உலகை ஆண்ட முதல் சாம்ராஜ்ஜியம் என்ற பெருமையை உடையது போர்த்துகீசியம் பேரரசு. இவர்கள் ஸ்பானிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மீதும் ஆதிக்கம் செல்லுத்தினர். 19ம் நூற்றாண்டின் பெரும் சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்தனர். 1999 டிசம்பர் 20 வரை போர்த்துகீசியம் பேரரசு இருந்தது என அறியப்படுகிறது.

Image Courtesy : commons.wikimedia

#04 பிரேசில் பேரரசு

#04 பிரேசில் பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1889 AD

உண்மையில் இவர் போர்த்துகீசிய பேரரசின் ஒரு அங்கம். இவர்களுக்கு 1822ல் விடுதலை பெற்றனர். பிறகு சிறிது காலம் கழித்து இவர்கள் ஒருநிலை பெற்றனர். கிரேட் பிரிட்டன் உடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் இவர்கள் கொஞ்சம் நிலைதடுமாறி போயினர். 1880களில் இவர்கள் தென்னாப்பிரிக்காவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது.

Image Courtesy : commons.wikimedia

#03 ரஷ்ய பேரரசு

#03 ரஷ்ய பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1895 கி.மு.

1721 - 1917 வரை பெரும் புரட்சியை செய்த பேரரசு ரஷ்ய பேரரசு. ஆரம்பத்தில் இருந்தே தனது ஆட்சிக்கு கீழான பகுதிகளை விரிவுப்படுத்திக் கொண்டே சென்றது இந்த பேரரசு. தங்கள் ஆட்சிக்கு கீழ் 15.5 மில்லியன் மக்களை கொண்டிருந்தது ரஷ்ய பேரரசு. கிட்டத்தட்ட 9 மில்லியன் சதுரடி நிலப்பரப்பையும் தன்வசம் கட்டுக்குள் வைத்திருந்தது.

Image Courtesy : commons.wikimedia

#02 இரண்டாம் பிரஞ்சு காலனிபேரரசு

#02 இரண்டாம் பிரஞ்சு காலனிபேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1920 AD

போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் என பலருடன் போட்டியிட்டுக் கொண்டிருந்த காலனி பேரரசு.தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்காவின் பெரும்பகுதி என தனது ஆட்சிக்கு கீழ் பெரும் பகுதியை கொண்டிருந்தனர்.

Image Courtesy : commons.wikimedia

#01 - பிரிட்டிஷ் பேரரசு

#01 - பிரிட்டிஷ் பேரரசு

ஆட்சி: ஏறத்தாழ 1920 கி.மு.

இது யாருக்கும் பெரும் ஆச்சரியத்தை தரப்போவதில்லை. ஒட்டுமொத்த உலகையும் தனது ஆட்சிக்கு கீழ் வைத்திருந்த பேரரசு. இவர்கள் பேரரசு என்பதை காட்டிலும், உலகையே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர் என கூறலாம்.

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் சூரிய அஸ்தமனமே இல்லை என புகழும் அளவிற்கு இவர்கள் உலகை ஆண்டுவந்தனர். உலக மக்கள் தொகையில் 23% பேரை தங்கள் ஆட்சிக்கு கீழ் வைத்திருந்தனர். உலகின் பல கலாச்சாரங்களை மேம்படுத்தினர்.

கடைசியாக இவர்கள் ஹாங்காங் மாற்றத்தின் வரையில், அதாவது 1997 வரை அதிகாரப்பூர்வமாக ஆட்சி செய்து வந்தனர் என கூறப்படுகிறது. இன்றளவிலும் இவர்களது ஆதிக்கம் உலகில் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

Image Courtesy : commons.wikimedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World's Most Greatest Empires In History!

World's Most Greatest Empires In History!
Desktop Bottom Promotion