பிங்க் தவிர்த்து பெண்களுக்கு எந்த நிறம் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

நாம் குழந்தைகளுக்கு ஆடைகள் அல்லது பரிசு பொருட்கள் வாங்க கடைக்கு செல்கிறோம். அங்கு பெரும்பாலும் பிங்க் நிறத்தில் பெண் குழந்தைகளுக்கும், நீலம் அல்லது மற்ற நிறத்தில் ஆண் குழந்தைகளுக்கும் பொருட்களை தேர்வு செய்கிறோம். இது ஏன் என்று யோசித்ததுண்டா?

இதனை கண்டறிய ஒரு ஆராய்ச்சியே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பெண்கள் உயிரியியல் ரீதியாக பிங்க் கலரை தேர்வு செய்கிறார்கள் என்று கூறப்டுகிறது. சரியாக பிங்க் நிறமில்லாமல் போனாலும், சிவப்பு மற்றும் அதை சார்ந்த நிறங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறங்களுக்கான ஆய்வு:

நிறங்களுக்கான ஆய்வு:

நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 20 வயது முதல் 26 வயது வரை உள்ள 208 பேர் இந்த சோதனையில் கலந்து கொண்டனர்.

அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் பல நிறங்கள் கொண்ட செவ்வகங்களில் அவர்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் அந்த சோதனை. சோதனை முடிந்த பின், 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் அதே சோதனை நிகழ்த்தப்பட்டது.

ஆய்வின் முடிவுகள்:

ஆய்வின் முடிவுகள்:

சராசரியாக, எல்லோரும் தேர்வு செய்த நிறம் நீலம் . நீல நிறம் தான் அனைவராலும் கொண்டாடப்படும் நிறம் என்பது ஏற்கனவே பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பிடித்த நிறம் நீலம் என்றும், குறிப்பாக அதிகமான பெண்கள் தேர்வு செய்தது நீலத்தில் சிவப்பு கலந்த நிறங்கள், சிவப்பு, மற்றும் ஊதா போன்ற நிறங்களை தான். ஆண்கள் அதிகமானோர் தேர்வு செய்த நிறம் நீலம் மற்றும் பச்சை கலந்த நீலம் .

மற்றோர் ஆய்வு :

மற்றோர் ஆய்வு :

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்த நிறங்களின் தேர்வு மாறுபடலாம் என்று கருதி, இதே குழுவினர் மற்றொரு பரிசோதைக்கு ஏற்பாடு செய்யதனர்.

37 சீன போட்டியாளர்களும் 171 ஆங்கிலேயே போட்டியாளர்களும் இந்த போட்டியில் பங்கு பெற்றனர். இந்த முடிவுகளும் இதற்கு முந்தைய முடிவுகளை ஒத்திருந்தன . சீனர்கள் அதிகபட்சமாக சிவப்பு நிறங்களை தேர்வு செய்திருந்தனர்.

சிவப்பு நிறம் புனிதமான நிறமாக சீனர்களிடையே கருதப்படுவது தான் இதற்கு காரணம். சீன பெண்கள் மற்றும் ஆண்களின் தேர்வு சிவப்பு பச்சை நிறங்களாக இருந்தது.

ஆய்வின் புரிதல்:

ஆய்வின் புரிதல்:

இந்த சோதனையின் முடிவுகள் ஒரு வலுவான ஆதாரத்தை கொடுத்தன. நிறங்களின் தேர்வில் , கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எந்த வினையையும் புரியவில்லை. பாலியல் வேறுபாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறங்களின் தேர்வில் வேறுபாடு வருவதற்கு காரணம், ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆரம்ப காலங்களின் வேலை பிரிவுகளை சார்ந்து இருந்தது.. பழங்காலத்தில், ஆண்கள் வேட்டையாடி பழங்களை கொண்டு வந்து பெண்களிடம் கொடுப்பர் .

பெண்கள் அதனை சரிபார்த்து, கணிந்தது, காயாக இருப்பது என்று தரம் பிரித்து வைப்பது வழக்கம். கணிந்த பழங்களின் நிறம் பெரும்பாலும் சிவப்பு நிறத்தை ஒத்து இருப்பதால் பரிணாம வளர்ச்சியிலும், இந்த நோக்கம் அல்லது பார்வை மாறாமல் அப்படியே இருக்கின்றது.

இந்த நிற தேர்வுக்கு மற்றொரு காரணம், பெண்கள் எப்போதும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாவலர்களாக இருக்கின்றனர் . குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது சளி தொல்லை ஏற்படும்போது உடல் சிவந்து காணப்படும்.

இந்த சூழ்நிலைகளுக்கு பெண்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டதால் இயற்கையாகவே சிவப்பு கலந்த நிறங்களை அவர்கள் மூளை தேர்வு செய்கின்றது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Which color do women like most

The most favorite color of women and reasons why they like.
Story first published: Monday, September 4, 2017, 15:33 [IST]
Subscribe Newsletter