உங்களால் நம்ப முடியாத, பலரும் பார்த்திடாத இந்தியாவின் அசத்தல் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky
உங்களால் நம்ப முடியாத, பலரும் பார்த்திடாத இந்தியாவின் அசத்தல் படங்கள்!- வீடியோ

இது நீங்கள் காணாத இந்தியாவின் புகைப்படத் தொகுப்பு!

சுதந்திரத்திற்கு முன்னும், சுதந்திரத்திற்கு பின்னும் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் புகைப்படங்கள் இவை. சிலவன இந்தியாவின் சிறப்பம்சங்களை குறிக்கும் படங்களாகவும். சிலவன இந்தியாவில் நடந்த சில விசித்திரமான வழக்கங்களை குறிக்கும் படங்களாகவும் இருக்கின்றன.

இந்தியாவில் முதன் முதலில் நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக விளங்கும் புகைப்படங்களும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, முதல் கார், முதல் ஏர் இந்தியா பணிப்பெண், முதல் விளம்பர பதாகைகள் என உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த புகைப்படங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரிக்குதிரை வண்டி!

வரிக்குதிரை வண்டி!

கார்கள், டாக்ஸி அதிகமாக புழக்கத்திற்கு வரும் முன்னர், குதிரை வண்டிகள் தான் பயன்படுத்தி வந்தனர். இது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், 1930களில் கொல்கத்தாவில் பணக்காரர்கள் வரிக்குதிரையை வண்டி இழுக்க பயன்படுத்தியுள்ளனர். இதை தங்களது ஆடம்பரத்தை, அந்தஸ்தைப் பகட்டாக காண்பித்துக் கொள்ள செய்துள்ளனர்.

Image Credit:pinimg

முதல் இந்திய அணி!

முதல் இந்திய அணி!

1932ல் இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. இந்த அணிக்கு ஆல்-இந்தியா அணி என பெயர் வைத்திருந்தனர். கிரிக்கெட்டின் புகழ்பெற்ற மைதானமான லார்ட் கிரவுண்டில் இந்த போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முறையே 259 மற்றும் 257/8d செய்தது இங்கிலாந்து அணி. இந்தியா 189, 187 ரன்களுக்கு ஆட்டமிழந்து போட்டியை 158 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் சி.கே நாயுடு சிறந்த ஆட்டாக்காரராக திகழ்ந்தார். இந்த அணியை மகாராஹா ஆப் போர்பந்தர் கேப்டனாக தலைமை தாங்கினார்.

Image Credit: fusion.werindia

முதல் ஜனாதிபதி!

முதல் ஜனாதிபதி!

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தான் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி. இந்த புகைப்படத்தில் ராஜேந்திர பிரசாத் அவர்கள் குதிரை வண்டியில் பயணிப்பதை காண முடியும். இவர் 1950-1962 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பணியாற்ற்னார். இரண்டு முறை இப்பதவிக்கு தேர்வான ஒரே ஜனாதிபதி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credit:wikimedia

பிரிட்டிஷ் ஆட்சி!

பிரிட்டிஷ் ஆட்சி!

பிரிட்டிஷ் ஆட்சியன் போது, ஆங்கிலேயே அதிகாரிக்கு இந்திய சேவகர் ஒருவர் கால் நகங்களை வெட்டி சுத்தப்படுத்தும் படியான படம். இந்த படத்தை த்ரோ-பேக் ஆப் ராஜ் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.

Image Credit:blogspot

பிரிவினை!

பிரிவினை!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை மக்களை மட்டுமல்ல, அரசையும் நிலைகுலையச் செய்தது. அதுவரை ஒன்றாக பராமரிக்கப்பட்ட கோப்புகள் அனைத்தையும், பிரிவினைக்கு பிறகு ஒவ்வொரு ஊர் வாரியாக, மாநிலங்கள் வாரியாக இந்தியா - பாகிஸ்தான் என பிரித்து இரு நாடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அந்த தருணத்தில் கோப்புகளை பிரிக்கும் போது அதிர்ச்சியில் உறைந்து போன அதிகாரியின் படம்.

Image Credit: Quora

முதல் இந்திய கார்!

முதல் இந்திய கார்!

இது மெர்சிடிஸ் பென்ஸ் கார் தான் என்றால் சிலரால் நம்ப முடியாது. பார்ப்பதற்கு அந்த காலத்து லாரி போல தோற்றமளிக்கும் இது 1954ல் வெளியான மெர்சிடிஸ் பென்ஸ் டெல்கோ கார் ஆகும். இது தான் இந்தியாவிற்கு வந்த முதல் கார் என்றும் கூறப்படுகிறது. இதை டாடா மோட்டார் நிறுவனம் மும்பையில் வாங்கியது.

Image Credit:twimg

ஹுமாயூன் கல்லறை!

ஹுமாயூன் கல்லறை!

விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டிருப்பதை வைத்து பார்க்கையில் இந்தியாவின் முதல் கல்லறை பூங்கா என ஹுமாயூனின் கல்லறை தான் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லறை 1565ல் தொடங்கி 1572ல் முடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Credit:wikimedia

இரு ராணிகள்!

இரு ராணிகள்!

நாம் சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வந்தோம் என்பதை தான் நாம் அறிவோம். ஆனால், ஓர் இந்திய ராணியும், ஆங்கிலேய ராணியும் ஒன்றாக சேர்ந்து வேட்டைக்கு சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

ஆம்! மகாராணி காயத்திரி தேவி மற்றும் எலிசபெத் ராணி இருவரும் வேட்டைக்கு சென்று, புலியை கொன்று திரும்பிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Credit:wordpress

தாஜ்மகால்!

தாஜ்மகால்!

இந்த புகைப்படத்தை கிழக்கிந்தியக் கம்பெனியை சேர்ந்த டாக்டர் ஜாம் மூர் என்பவர் எடுத்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த புகைப்படம் 167 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது புலப்படவில்லை.

Image Credit:kapilsharmafc

முதல் இந்திய சட்டமன்ற கூட்டம்!

முதல் இந்திய சட்டமன்ற கூட்டம்!

சில தகவல்களின் படி காண்கையில், இந்த படத்தை இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. அதாகப்பட்டது இந்த படம் டிசம்பர் 9, 1946ல் எடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

Image Credit:werindia

மும்பை ட்ராம்!

மும்பை ட்ராம்!

பி.ஈ.எஸ்.டி எனப்படும் மும்பையின் போக்குவரத்து கழகம் 1907ல் முதல் எலக்ட்ரிக் ட்ராம் இயக்கியது போது எடுக்கப்பட்ட படம். இந்தியாவில் இன்றுவரை ட்ராம் இயக்கப்படும் ஒரே நகராக இருப்பது கொல்கத்தா தான். சென்னையில் 1954ல் இருந்து, மும்பையில் 1960 முதலும் ட்ராம் இயக்கம் நிறுத்தப்பட்டது.

Image Credit:team-bhp

முதல் ஏர் இந்தியா பணிப்பெண்!

முதல் ஏர் இந்தியா பணிப்பெண்!

இந்த படம் 1963ல் எடுக்கப்பட்ட ஒன்று. இப்படத்தில் ஏர் இந்தியாவின் முதல் பணிப்பெண், விமானங்களின் நேரங்களை குறித்து அட்டவணையில் மாற்றம் செய்து வருகிறார்.

Image Credit:licdn

பெயர் பதாகைகள்!

பெயர் பதாகைகள்!

பெஷ்வார் எனும் பகுதியில் உருது மற்றும் பஞ்சாப் மொழிகளில் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கும் சாலை. இந்த படம் 1940-களில் எடுக்கப்பட்டதாகும். இப்போது இந்த பகுதி பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ளது.

Image Credit:jodh

டைம்ஸ் ஆப் இந்தியா!

டைம்ஸ் ஆப் இந்தியா!

1898ல் டைம்ஸ் ஆப் இந்தியாவின் அலுவலகம். இந்த ஆண்டில் தான் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தனது வைரவிழாவை கொண்டாடியது. ஏறத்தாழ 179 ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ஆசிய அளவில் பெரும் செய்தி நிறுவனமாக திகழ்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.

Image Credit:kapilsharmafc

நட்சத்திர வீரர்கள்!

நட்சத்திர வீரர்கள்!

பாலிவுட் கிங் கான் ஷாருக்கானும், இந்திய கிரிக்கெட் அணியின் கிங் கேப்டனாக கருதப்படும் கபில் தேவும் கால்பந்தாட்டம் விளையாடும் புகைப்படம்.

Image Credit:quoracdn

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unseen Pics From Indian History!

Unseen Pics From Indian History!