மதுரை மீனாட்சியம்மன் கோவில் இடியும் அபாயம்!-எச்சரிக்கும் யுனெஸ்கோ

Posted By:
Subscribe to Boldsky

தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை யுனெஸ்கோ ஆய்வு செய்து வருகிறது. அதன் முதற்கட்ட அறிக்கையில் அறநிலைத்துறையைப் பற்றியும் புனரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட பழமையான கோவில்களைப் பற்றியும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழமையான கோவில்கள்

பழமையான கோவில்கள்

யுனெஸ்கோவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் ஆய்வின் முதற்கட்டமாக பத்து கோவில்களை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அறநிலையத்துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.

Image Courtesy

மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில்

மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில்

பதினோறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானம்படி நாகநாத ஸ்வாமி கோவில் முறையான காரணங்களின்றி, அறநிலையத்துறையின் தவறான அணுகுமுறையால் இடிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ கண்டுபிடித்துள்ளது.

Image Courtesy

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமைரைக் குளத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்ப சாஸ்திர விதியை பின்பற்றாததால் கோவிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது யுனெஸ்கோ.

Image Courtesy

அறநிலையத்துறை :

அறநிலையத்துறை :

அறநிலையத்துறையின் வேலை, அவர்கள் வேலை செய்யும் முறை போன்றவற்றையும் ஆய்வு செய்திருக்கும் யுனெஸ்கோ, இந்த புனரமைப்பு தொடர்பாக அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடம் அனுமதி பெறவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி! :

அதிர்ச்சி! :

முதற்கட்ட அறிக்கையே இவ்வளவு அதிர்ச்சிகளை கிளப்பியிருக்கும் யுனெஸ்கோவின் முழு அறிக்கையும் வந்தால் இன்னும் பல்வேறு அதிர்ச்சிகள் வெளிவரும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync tamil nadu
English summary

unesco warning stablity of meenakshi amman temple

unesco warning stablity of meenakshi amman temple