தமிழசை, எச்.ராஜா'க்கே அசந்துட்டா எப்பூடி, இதோ! உலகளவில் அவதிக்குள்ளான டாப் 18 ட்ரால்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த ஒரு வாரமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான தமிழிசை மற்றும் எச். ராஜா போன்றவர்கள் நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தை பற்றி கூறிய கருத்துக்களை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த மீம் கிரியேட்டர்கள் முதல் பலதரப்பட்ட நபர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என எந்த புறம் திரும்பினாலும், இவர்களை பற்றிய ட்ரால் மீம்ஸ் தான் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. ட்ரால் என்பது யாருக்கும் பொருந்தும், தனக்கு பிடிக்காத, செயல், நபர், நிகழ்வு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு பத்து மீம் போட்டு ட்ரால் செய்துவிட்டு தான் ஓய்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

மீம்ஸ் என்பது புகைப்படத்தை தாண்டி வீடியோ வடிவிலும் அதிகம் இப்போது உருவாக்கி வெளியிடுகிறார்கள். மீம்ஸ் தவிர, ஒரு சில பக்கங்கள் வீடியோ வடிவில் குறும்படம் எடுத்தும் கலாய்த்து வருகிறார்கள். இவர்களிடமாவது ஒரு காரணம் இருக்கிறது.

ஆனால், யூடியூபில் உலகளவில் ஏன், எதற்கு என காரணமே இல்லாமல் ஒருசில நபர்கள் ட்ரால் செய்வதையே தங்கள் வேலையாக, வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை பற்றிய ஒரு சிறு தொகுப்பு தான் இங்கே காணவுள்ளோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாஸிடி பூன் (Cassidy Boon)

சாஸிடி பூன் (Cassidy Boon)

சாஸிடி பூன் எனும் இவர் ஒரு பெண்ணியவாதி. இவர் எப்போதுமே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பற்றி கீழ்த்தரமான கருத்துக்கள் மற்றும் இந்த இரு நாடுகளை மட்டம்தட்டியே பேசி யூடியூபில் வீடியோக்கள் பதிவு செய்பவர்.

Image Credit: Youtube

ஐ-போன் யூசர்!

ஐ-போன் யூசர்!

AndroidPhonesSucks என்ற பெயரில் இந்த ஐ-போன் பயன்படுத்தும் யூசர், ஆண்ட்ராயிடு மொபைகளை பயன்படுத்தும் நபர்களை ட்ரால் செய்து வீடியோபதிவுகள் செய்து வருகிறார்.

ஆணிஷன்!

ஆணிஷன்!

அவ்வப்போது இவரை யூடியூபில் உலாவும் மிகவும் தொல்லைக் கொடுக்கும் ஸ்டார் என்றும் அழைப்பதுண்டு. இவர் மிகவும் சர்ச்சைக்குரிய நபர், இவர் எப்போதுமே தற்கொலை, சுயமாக சித்திரவதை செய்துக் கொள்வது பற்றியே வீடியோக்கள் பதிவு செய்பவர்.

Image Credit: Youtube

மிஷ்டி.செயின்ட் கிளாரி (Misty St. Claire)

மிஷ்டி.செயின்ட் கிளாரி (Misty St. Claire)

மிஷ்டி.செயின்ட் கிளாரி எனும் இந்த பெண்மணி, போலி கணக்குகள் துவக்கி, அதன் மூலம் உடல் பருமமான நபர்களுடன் நட்பு பாராட்டி, பிறகு அவர்களை யூடியூபில் கேலிக்குள்ளாக்குவதை தனது தொழிலாக வைத்துள்ளார்.

Image Credit: Youtube

எரிக் டக்லஸ்!

எரிக் டக்லஸ்!

எரிக் டக்லஸ் எனும் இந்த நபர் ஜஸ்டின் பைபரின் தீவிர ரசிகர். இவர் ஜஸ்டின் பைபர் பாடல்களை யாரேனும் லைக் செய்யவில்லை எனில், உங்கள் கணினியை, அக்கவுண்டை ஹேக் செய்துவிடுவேன் என அச்சுறுத்தி வருகிறார்.

Image Credit: Youtube

சி.எம் பூக் 101

சி.எம் பூக் 101

சி.எம் பூக் 101 எனும் இந்த நபரின் வேலையே, அனைத்து யூடியூப் வீடியோக்களையும் பார்த்து, அதில் அனைவரையும் கலாய்த்து கமெண்ட்டுகள் இடுவது தான். அங்குள்ளவர்களை வம்பிழுத்து, உசுப்பேற்றி, அதில் குளிர் காய்வதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த சி.எம் பூக் 101.

Image Credit: Youtube

சிண்டிபின் 2001!

சிண்டிபின் 2001!

சிண்டிபின் 2001 எனும் இந்த சிறுமி அவதூறு, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி, பிறகு நான் அவ்வாறு பேசவில்லை என சத்தியம் செய்வதை தனது வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Image Credit: Youtube

குயின் கிரேக் ஜாக்!

குயின் கிரேக் ஜாக்!

குயின் கிரேக் ஜாக் எனும் இந்த கிறுக்குத்தனமான பெண்மணி, மக்களுடன் பேசி, அவர்களை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டி ட்ரால் செய்யும் நபர். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கேலிக்கு உண்டாக்குபவர்.

Image Credit: Youtube

சில்வர்நைட்171!

சில்வர்நைட்171!

சில்வர்நைட்171 எனும் இந்த நபர் இன்டர்நெட் மூலமாக போரை விரும்பும் ஒரு பாசிச கருத்துடைய நபராக காணப்படுகிறார்.

Image Credit: Youtube

சூப்பர் மைன் கிராப்ட் கிட்!

சூப்பர் மைன் கிராப்ட் கிட்!

சூப்பர் மைன் கிராப்ட் கிட் எனும் இந்த நபர் இளம் வயது கேமர் ஆவார். இவர் தான் பதிவு செய்யும் வீடியோக்களில் நடுநடுவே கத்தி கூச்சலிட்டு எரிச்சலடைய செய்வதை தனது வழக்கமாக கொண்டுள்ளார்.

Image Credit: Youtube

லைப் இன் எ டென்ட்!

லைப் இன் எ டென்ட்!

LifeInATent என்ற பெயர் கொண்டு இயங்கி வரும் இந்த நபர், அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என, ஜப்பானில் நிகழும் பூகம்பங்களை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார்.

Image Credit: Youtube

ஜாரட்

ஜாரட்

ஜாரட் எனும் இந்த நபர் ஒவ்வொரு முறையும் வார்த்தைகளை தவறாக உச்சரித்து மக்களை அசௌகரியமாக உணர வைப்பதை தனது வழக்கமாக கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நம்ம ஊரில் மண்ணை சாதிக் (Fraands புகழ்) என்ற பெயரில் ஒருவர் செய்து வந்த அதே எரிச்சலூட்டும் நச்சரிப்பு வேலை தான்.

Image Credit: Youtube

பிப்வீட் (Pipweed)

பிப்வீட் (Pipweed)

பிப்வீட் என்ற பெயரில் யூடியூபில் இயங்கி வரும் இந்த கணக்கில், புற்றுநோய் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்களை கேலி, கிண்டல் செய்து, கலாய்த்து வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

Image Credit: Youtube

க்ளிகர்13வீடியோஸ் (gligar13vids)

க்ளிகர்13வீடியோஸ் (gligar13vids)

க்ளிகர்13வீடியோஸ் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த இளம் வயது கேமர் செய்வது வீடியோ கேம் விளையாடும் நபர்களை எரிச்சல் அடைய வைக்கிறது. இவருக்கு வீடியோ கேம்ஸ் பிடிக்காது என்பதால், அதை விரும்பி விளையாடும் நபர்களுக்கு இது சரியில்லை, அது நொட்டை என அப்சட் அடைய செய்யும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்.

Image Credit: Youtube

பி.ஜி. கும்பி!

பி.ஜி. கும்பி!

பி.ஜி. கும்பி எனும் இந்த சிறுவன், மற்ற சிறுவர், குழந்தைகளை அப்செட் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வான். இவனது ஒவ்வொரு வீடியோவின் முக்கிய குறிக்கோளே அந்த பதிவின் மூலம் யாரை எல்லாம் புண்படுத்தலாம் என்பது தான்.

Image Credit: Youtube

பைலோ பில்ம்ஸ்!

பைலோ பில்ம்ஸ்!

எல்லா விதமான வீடியோ கேம்களையும் கலாய்கும் நபர். அதிலும், சூப்பர் ஹீரோ வீடியோ கேம்களை கலாய்ப்பது எனில் இவருக்கு மிகவும் விருப்பமாம். ஆனால், இவர் சிம் சிட்டி (Sim City) எனும் வீடியோ கேமை மட்டும் கலாய்ப்பது இல்லை.

Image Credit: Youtube

மேரியோடெப்ளம்பர் (mariotehplumber)!

மேரியோடெப்ளம்பர் (mariotehplumber)!

மேரியோடெப்ளம்பர் எனும் இந்த நபர் கனடாவை சேர்ந்தவர். கனடாவை சேர்ந்தவராக இருந்துக் கொண்டு, அமெரிக்காவை சேராத அனைவரையும் கேலி செய்து வருகிறார். இதனால், இவரது செய்கையால், பதிவு செய்யும் வீடியோக்களை காணும் நபர்களுக்கு அமெரிக்கா மீதான பார்வை மோசமாக மாறுகிறது.

Image Credit: Youtube

பிரான்சிஸ் (Durham Francis)!

பிரான்சிஸ் (Durham Francis)!

பிரான்சிஸ் எனும் இவர் சுழற்காற்று (tornadoes) என்பது இல்லவே இல்லை, என ட்ரால் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இது போல இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஏன், எதற்கு இப்படி வீடியோக்கள் எந்த பயனும் இன்றி பதிவு செய்து வருகிறார்கள் என்பது யூடியூபிற்கே தெரியாது.

Image Credit: Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 18: The Biggest Trolls of Youtube!

Top 18: The Biggest Trolls of Youtube!
Subscribe Newsletter