For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மிக கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் உலகின் டாப் சீக்ரெட் இடங்கள்!

  |

  கூகுள் மேப்பில் கூட காட்ட முடியாத, சேட்டிலைட்கள் கூட ஊடுருவ முடியாத இடங்களும் உலகில் இருக்கின்றன. மிகவும் பாதுகாப்பாக பல இரகசிய கோப்புகளை பராமரித்து வருகிறார்கள்.

  இயற்கை சீற்றங்கள் மூலம் அழிந்துவிட்டால் மீட்டெடுக்க விதைகள் காக்கும் வால்ட் முதல், பல ஆயிரம் கிலோ தங்கங்களை காக்கும் கோல்ட் வால்ட் வரை நமது காலடிக்கு கீழ் பல நூறடியில் பல வால்ட்கள் புதையுண்டு கிடக்கின்றன.

  இவற்றை பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

  All Image Credit: KickAssFacts

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  1. ADX புளோரன்ஸ் சிறைச்சாலை!

  1. ADX புளோரன்ஸ் சிறைச்சாலை!

  குற்றவாளிகளில் மிகவும் கடுமையான, கட்டுப்படுத்த முடியாத, முரட்டுத்தனமான குற்றவாளிகளை அடைக்க இந்த சிறையை பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா. இந்த சிறையில் பணியாற்றி வந்த முன்னாள் வார்டன் இச்சிறைக்கு "Alcatraz of the Rockies" என புனைப்பெயர் வைத்துள்ளார். இதற்கு பொருள் சுத்தமான நரகம் என்பதாகும்.

  இந்த சிறையில் பாதுகாப்பு பணியில் நாய்களும் அமர்த்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு சுவரும் 12 அடி உயரமாகும். மேலும் அதன் மேல் ரேசர் போன்ற கூர்மையான வேலிகள் மேயப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் 1400 இரும்பு கதவுகள் இங்கே இருக்கிறது. மேலும், மோஷன் டிடக்ட் செய்யும் லேசார் பீம்களும் இங்கே இருக்கிறது. இது போக பிரசர் பேடுகள், கேமராக்கள் என கைதிகளை கண்காணிக்க பல கருவிகள் பயனப்டுத்தப்படுகிரார்கள்.

  2. ஏர் ஃபோர்ஸ் ஒன்

  2. ஏர் ஃபோர்ஸ் ஒன்

  ஏர் ஃபோர்ஸ் ஒன் உலகின் மிகவும் பாதுகாப்பான விமானம். உலகின் பாதுகாப்பான நகரும் இடம் என்ற பெயரும் இது பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர்கள் சிறிய மாற்றங்கள் கொண்ட போயிங் 747-200B ரக விமானங்களில் பயணிக்கின்றன. இது மிகவும் அட்வான்ஸ்டு விமானம். இதில் இருக்கும் எலக்ட்ரானிக் டெக்னாலஜி உலகின் எந்த இடத்தையும் தொடர்புக் கொள்ள இயலும் வகையில் அமைந்திருக்கிறது. அனைத்து வகையிலான பாதுகாப்புகளும் கொண்டிருக்கிறது.

  3. ஈராக் தலைவரான சதாம் ஹுசைனின் பாக்தாத் பங்கர்!

  3. ஈராக் தலைவரான சதாம் ஹுசைனின் பாக்தாத் பங்கர்!

  ஈராக் அதிபர் சதாம் ஹூசைன் பதுங்கியிருந்த பதுங்குக்குழி. 2150 சதுரடி பரப்பளவு கொண்டிருக்கிறது இந்த பதுங்குக்குழி. நிலத்தில் இருந்து நூறு அடி கீழே அமைந்திருக்கிறது. ஐந்தடி தடிமன் கொண்ட சுவர்கள், ஆறடி தடிமன் கொண்டு இரும்பாலான கான்க்ரீட் சீலிங் மற்றும் இங்கிருந்து தப்பிக்க இரண்டு சுரங்கங்களும் இருக்கின்றன.

  4. பக்ஹோஃப் மற்றும் விக்கிலீக்ஸ் ஸ்டாக்ஹோம்.

  4. பக்ஹோஃப் மற்றும் விக்கிலீக்ஸ் ஸ்டாக்ஹோம்.

  இந்த ஸ்டாக்ஹோம் நிலத்தில் இருந்து நூறடி கீழே இருக்கிறதாம். இது முன்னாளில் அணு ஆயுத பரிசோதனை பதுங்குக்குழியாக இருந்தது, இப்போது அனைத்து தேட்டாக்களின் சென்டராக இயங்கி வருகிறது. விக்கிலீக்ஸ்-ன் சர்வர் இங்கே தான் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இங்கிருக்கும் கதவுகளின் தடிமன் 1.5 அடி, மேலும் அவை இரும்பால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

  5. இங்கிலாந்து வங்கி கோல்ட் வால்ட்

  5. இங்கிலாந்து வங்கி கோல்ட் வால்ட்

  இது ஏதோ இந்தியானா ஜோன்ஸ் படத்தில் வரும் க்ளைமேக்ஸ் இடம் போல இருக்கலாம். ஆனால், இது ஐரோப்பாவின் பெரிய கோல்ட் வால்ட் ஆகும். இங்கே 5152 டன் தங்கம் இருக்கிறது. குரல் மூலம் லாக் கொண்டுள்ளது இந்த வால்ட். இந்த வால்ட்டை திறக்க மூன்று அடி நீளமுள்ள சாவி ஒன்றும் இருக்கிறதாம். இந்த வால்ட் எத்தனை அடி கீழே புதைக்கப்பட்டுள்ளது என்பதும் கூட யாருக்கும் தெரியாது. நாற்பதற்கும் மேற்பட்ட தளங்கள் கொண்டுள்ளது இந்த வால்ட் இருக்கும் கட்டிடம்.

  6. தி 1960's பார்.

  6. தி 1960's பார்.

  பிரிட்டனின் இரகசியமான பர்லிங்டன் பதுங்கு குழியில் பெற்றிருக்கிறது இந்த இடம். The 1960's bar என அழைக்கப்படும் இந்த பார், பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்த பப் என கூறப்படுகிறது.

  7. டூம்ஸ்டே விதை வால்ட்

  7. டூம்ஸ்டே விதை வால்ட்

  டூம்ஸ்டே சீட் வால்ட் என்பது ஒரு விதை வங்கி. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் விளையும் செடி, மரங்கள், காய்கறி, பழங்களின் விதைகளை இங்கே பாதுகாத்து வருகிறது. ஒருவேளை ஏதேனும் உலக அழிவுகள், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் இங்கிருந்து விதைகளை எடுத்து மீண்டும் அந்த செடிகளை வளர செய்ய முடியும் என்பதற்காக இங்கே பாதுகாத்து வருகிறார்கள்.

  8. அயர்ன் மவுண்டைன் (Iron Mountain)

  8. அயர்ன் மவுண்டைன் (Iron Mountain)

  ஃப்ளைட் 93, ஐன்ஸ்டீனின் நாக்கு தொங்கவிட்ட படம், எடிசன் கண்டுபிடித்த குண்டு பல்பு என பலவன இந்த அயர்ன் மவுண்டைனில் தான் அடைத்து வைத்துள்ளனர். பூமியில் இருந்து இருநூறு அடி கீழே இது இருக்கிறது. இந்த வால்ட் 1.7 மில்லியன் சதுரடி கொண்டுள்ளது. இந்த வால்ட்டில் இருக்கும் பொருட்களின் 95% உரிமையாளர்கள் யார், யார் என்பது மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  9. டீகோகு வங்கி, ஹிரோஷிமா

  9. டீகோகு வங்கி, ஹிரோஷிமா

  ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் போது சேதமடையாமல் தப்பித்த இடம் டீகோகு வங்கி. வெளிப்புறம் தீக்கிரையான போதிலும், உட்புறம் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. ஆகையால், இதை ஒரு வியாபார உக்தியாக பயன்படுத்தி பாதுகாப்பான இடமாக விளம்பரம் செய்ய துவங்கினர்.

  10. வத்திக்கான் (Vatican) இரகசிய ஆவணங்கள்!

  10. வத்திக்கான் (Vatican) இரகசிய ஆவணங்கள்!

  வெகு சிலரை தவிர இங்குள்ள கோப்புகளை கையாள யாருக்கும் அனுமதி இல்லை. இங்கே பல தியரிகளின் கோப்புகள் உள்ளன. ஆரம்பக் காலத்த்தல் இங்கே பார்னோகிரபி தொகுப்புகள் தான் உள்ளன என புரளிகள் பரவின. உலகை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு மிக முக்கியமான கோப்புகள் இங்கே இருப்பதாக கூறுகிறார்கள். பைபிளில் இருந்து தவறவிடப்பட்ட சில புத்தகங்களும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Most Secured and Heavily Guarded Places in World!

  The Most Secured and Heavily Guarded Places in World!
  Story first published: Saturday, October 14, 2017, 11:23 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more