மெர்சல் 250 கோடி வசூல் செய்து என்ன பயன், இந்த ஃபோர்ப்ஸ் லிஸ்டில் அஜித் முந்திவிட்டரே!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட, 2017ல் இந்திய பிரபலங்களில் அதிக ரூபாய் சம்பாதித்த நபர்கள் என்ற பட்டியலில் சல்மான் கான் 232.83 கோடிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இவரைத் தொடர்ந்து 170.50 கோடிகளுடன் ஷாருக்கான் இரண்டாவது இடத்திலும், 100.72 கோடிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து அக்ஷய் குமார், சச்சின், அமீர்கான், பிரிங்கா சோப்ரா, டோனி, ஹ்ரிதிக், ரன்வீர் சிங் போன்றவர்கள் முறையே நான்காவது இடத்தில் இருந்து பத்தாவது இடம் வரை இடம்பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட இந்த 2017ன் அதிக சம்பாத்தியம் பார்த்த நூறு பிரபலங்களில் 9 தமிழ் பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர்.

இசைப் புயல் ரகுமான் முதல் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் வரை 9 தமிழ் பிரபலங்கள் இந்த இடங்களை நிரப்பியுள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏ.ஆர். ரகுமான்!

ஏ.ஆர். ரகுமான்!

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிகமாக சம்பாதிக்கும் டாப் 100 பிரபலங்களின் பட்டியலில் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் இந்திய சினிமா இசையமைப்பாளர் ரகுமான் 57.63 கோடிகளுடன் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 12

வேலை / தொழில்: இசை, தயாரிப்பு.

சம்பாத்தியம்: 57.63 கோடி

வயது: 50

ரவிச்சந்திரன் அஸ்வின்!

ரவிச்சந்திரன் அஸ்வின்!

உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பட்டியலில் 34.67 கோடி ரூபாயுடன் 23 இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 23

வேலை / தொழில்: கிரிக்கெட் மற்றும் மாடலிங்

சம்பாத்தியம்: 34.67 கோடி

வயது: 31

சூர்யா!

சூர்யா!

எந்த பாத்திரமாக இருந்த கனகச்சிதமாக நடிக்கும் திறன் கொண்டவரும், நல்ல திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் தயாரிப்பாளருமான சூர்யா இந்த பட்டியலில் 34 கோடி ரூபாயுடன் 25 இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 25

வேலை / தொழில்: நடிப்பு, தயாரிப்பு

சம்பாத்தியம்: 34 கோடி

வயது: 42

அஜித் குமார்!

அஜித் குமார்!

உழைப்பால் உயர்ந்தவர் என புகழப்படும் ஜென்டில்மேன் ஹீரோ அஜித் குமார் அவர்கள் இந்த பட்டியலில் 31.75 கோடி ரூபாயுடன் 27வது இடதைப்பிடித்துள்ளார்.

இடம்: 27

வேலை / தொழில்: நடிப்பு

சம்பாத்தியம்: 31.75 கோடி

வயது: 46

விஜய்!

விஜய்!

தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி மார்கெட் கொண்டிருப்பவர். மெர்சல் படத்தின் மூலமாக இந்தியா அளவில் பேசப்பட்ட நடிகர் விஜய் அவர்கள் இந்த பட்டியலில் 29 கோடி ரூபாய் சம்பாத்தியத்துடன் 31வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 31

வேலை / தொழில்: நடிப்பு

சம்பாத்தியம்: 29 கோடி

வயது: 43

ஜெயம் ரவி!

ஜெயம் ரவி!

தனது ஒவ்வொரு படத்திலும் கதைக் களத்தில் இருந்து, ஏற்கும் பாத்திரம் வரை என அனைத்திலும் வித்தியாசம் காட்டி அசத்தும் நடிகர் ஜெயம் ரவி இந்த பட்டியலில் 18 கோடி ரூபாய் சம்பாத்தியத்துடன் 39 இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 39

வேலை / தொழில்: நடிப்பு

சம்பாத்தியம்: 18 கோடி

வயது: 37

விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி!

தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் சிறந்த கருத்தை பெரும் தற்கால கிளாஸ் ஹீரோ விஜய் சேதுபதி இந்த வருடம் 14.08 கோடி சம்பாதித்து இந்த பட்டியலில் 54வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 54

வேலை / தொழில்: நடிப்பு

சம்பாத்தியம்: 14.08 கோடி

வயது: 39

தனுஷ்!

தனுஷ்!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றவர், பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று ஒரு படமும் நடித்து முடித்துவிட்டார். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என தான் எடுத்த அனைத்து அவதாரத்திலும் வெற்றிக் கொடி நாட்டிய தனுஷ் இந்த பட்டியலில் 11.25 கோடிகளுடன் 70வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 70

வேலை / தொழில்: நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர்.

சம்பாத்தியம்: 11.25 கோடி

வயது: 34

முரளி விஜய்!

முரளி விஜய்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய்-க்கு இந்த ஆண்டு டபிள் டமாக்கா. இரண்டு மாதங்களுக்கு முன் தான், இவருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இது இவருக்கு மூன்றாது குழந்தை ஆகும். மேலும், கிரிக்கெட் மற்றும் மாடலிங் மூலம் 4.2 கோடி ரூபாய் சம்பாதித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்த டாப் 100 பட்டியலில் 87வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இடம்: 87

வேலை / தொழில்: கிரிக்கெட் மற்றும் மாடலிங்

சம்பாத்தியம்: 4.2 கோடி

வயது: 33

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamilians Who Got Placed in 2017 Forbes Top 100 Celebrities!

Tamilians Who Got Placed in 2017 Forbes Top 100 Celebrities!
Story first published: Friday, December 22, 2017, 17:29 [IST]