1000 வருடங்களாக உயிர் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் யோகி பாபா!

Posted By:
Subscribe to Boldsky

இவர் எத்தனை வருடங்களாக வாழ்ந்து வருகிறார் என்பது இன்று வரை யாராலும் அறிய முடியாமல் இருக்கிறது. சிலர் இவர் 900 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார் என கூறுகிறார்கள்.

இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், இங்கே இருப்பவர்கள் இதை நம்பி தான் இவரை பின்பற்றி வருகிறார்கள்.

இந்த பூமியில் பிறக்கும் எல்லா மனித உயிர்க்கும் இறப்பு என்பது நிச்சயம் இருக்கிறது. ஆனால், இவர் எப்போது தோன்றினார் என்பது இங்கே பெரிய கேள்வியாக இருக்கிறது.

இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இவரை பற்றி 250 வருடங்களாக பேசி வருகிறார்கள், நேரில் கண்டும் வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவ்ராஹா பாபா!

தேவ்ராஹா பாபா!

இந்த யோகியின் பெயர் தேவ்ராஹா பாபா. சிலர் இவரை தியோராகா பாபா என்றும் அழைக்கின்றனர். இவர் 900 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இவரை இங்கே பலரும் வயது இல்லாத யோகி என பிரபலமாக கூறி வருகிறார்கள்.

இவர் தனக்கான சமாதியை 1990-லேயே கட்டிக் கொண்டார் என்றும், இவரது சக்தி மற்றுள் வாழ்க்கை பலரால் விவாதிக்கப்படும் பொருளாக இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

Image Credit:tourwalla.com

புரளிகள்!

புரளிகள்!

ஒருபுறம் இவரை புகழ்ந்து பேசி வந்தாலும், மறுபுறம் இவரை பற்றியும், இவரது வயது பற்றியும் பேசுவது எல்லாம் வெறும் புரளி கதைகள். இவருக்கு ஏதோ சக்தி இருக்கிறது என்பதை வேண்டுமானாலும் நம்பலாம் மற்றது எல்லாம் பொய் என்றும் கூறுகிறார்கள்.

Image Credit:devrahababa.iconosites.com

ராஜா காலங்களில் இருந்து!

ராஜா காலங்களில் இருந்து!

ஆனால், இந்த தேவ்ராஹா பாபா எனும் யோகி, ராஜா காலங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது, இவர் ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை நேரில் சந்தித்துள்ளார்.

மக்கள் கூறுவதை காட்டிலும் மிகவும் வித்தியாசமாக, வினோதமாக காணப்படுகிறார் யோகி பாபா.

Image Credit : devrahababa.iconosites.com

யமுனை தாய்!

யமுனை தாய்!

500, 400, 900 என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கை கூறி, இத்தனை ஆண்டுகளாக இந்த பாபா யோகி வாழ்ந்து வருகிறார் என கூறுவது ஒரு பக்கம் வியப்பை அளித்தால்.

மறுபக்கம், இவர் மற்ற மனிதர்களை போல தாயின் கருவறையில் இருந்து பிறந்தவர் அல்ல. தேவ்ராஹா பாபா யமுனை ஆற்றில் இருந்து பிறந்தவர் என்று ஒரு தகவலை கூறுகிறார்கள். இது வியப்புக்கெல்லாம் உச்சமாக இருக்கிறது.

கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட!

கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட!

தேவ்ராஹா பாபாவின் வாழ்க்கை கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. அவர் வாழ்ந்து வரும் கிராமம் மற்றும் அதை சுற்றி இருக்கும் மக்கள் இவரது பல திறமைகளை கண்டு வியக்கிறார்கள்.

நீருக்கு கீழே 30 நிமிடங்களுக்கு மேலாக தாக்கப்பிடிக்கும் வலிமை கொண்டுள்ளார் தேவ்ராஹா பாபா.

இவர் பல இந்திய தலைவர்களுக்கு ஆசிர்வாதம் அளித்துள்ளார். பலர் இவரை ஒரு ஜீனியஸ் என கூறுகிறார்கள். பல சக்திகள் இருக்கிறது என கூறபட்டாலும் இவர் மிக எளிமையாக வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.

Image Credit: Youtube

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி!

"மகிழ்ச்சிதான் எல்லாவற்றையும் விட பெரிய சொத்து. உலகிலேயே விலை உயர்ந்த பொருள் மகிழ்ச்சி. காலந்தவறாமை மிக முக்கியமானது" என கூறும் இவர் பிராணயாமம் எனும் மூச்சு பயிற்சி செய்வதில் வல்லவர்.

இவரது பிறப்பு தெரியாத புதிராக இருந்து வருகிறது. இதனாலேயே இவரது வயது என்ன என்பது குழப்பமாக இருந்து வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் தியோரியா (Deoria) மாவட்டத்தில் இவர் வாழ்ந்து வருகிறார். யோகினி ஏகாதசிக்கு தன் வாழ்வை அர்பணித்துக் கொண்ட இவர் 900 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என நம்புகிறார்கள்.

Image Credit: meditatondhyan.blogspot

மரணமற்ற!

மரணமற்ற!

மரணமற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த யோகி பாபா பசுக்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு வருபவர். மேலும், பசுவுன் சிறுநீர் மற்றும் மலம் மட்டுமே மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பதை அதற்கான காரணமாய் கூறுகிறார். இவர் பசுக்களை காக்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறுவாராம்.

Image Credit:ajabgjab.com

அறிவுரை!

அறிவுரை!

ஜவர்ஹலால் நேரு முதல் பல சர்வதேச தலைவர்களுக்கு தேவ்ராஹா பாபா அறிவுரை வழங்கியுள்ளார். ஒருவரிடம் ஏதும் கேட்காமலேயே அவரது மனதை அறியும் சக்தி தேவ்ராஹா பாபாவிற்கு இருக்கிறதாம்.

தன்னை சந்திக்க வரும் அனைவரையும் மிகுந்த பாசத்துடனே தேவ்ராஹா பாபா சந்தித்து வருகிறார். தன்னை காண வருபவர்களுக்கு பழங்களை பரிசாக வழங்குகிறார்.

பாபா பால் மற்றும் தேன் தவிர வேறு எந்த உணவும் சாப்பிடுவது இல்லை. இவர் விலங்குகளுடன் பேசும் மொழி கற்றவர். இவரிடம் யாரவது இவரது வயதை கேட்டால், அவர்களுக்கு கச்சாரி முத்திரையை (Kachari Mudra) காண்பிக்கிறார். இந்த முத்திரை மூலமாகவே இவர் தனது பசி மற்றும் வயதை கட்டுப்படுத்தி வருகிறார்.

யமுனை ஆற்றின் ஒரு புறத்தில் தான் தேவ்ராஹா பாபாவின் சமாதி அமைந்துள்ளது. அதுதான் அவரது ஆசிரமும் கூட.

Image Credit: Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Story Of The Yogi Who Is Believed To Have Lived For A Thousand Years!

Shocking Story Of The Yogi Who Is Believed To Have Lived For A Thousand Years
Subscribe Newsletter