பக்ரீத் பண்டிகையன்று ஏன் குர்பானி கொடுக்கப்படுகிறது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகம் முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இஸ்லாமியர்கள் மத்தியில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாக பக்ரீத் பார்க்கப்படுகிறது. இப்பண்டிகை ஒவ்வொரு வருடமும் அரேபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது.இதனை ஹஜ் பெருநாள் என்றும் அழைப்பார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அரேபியாவில் ஒன்று கூடி அல்லாஹ்ஹை வணங்கி தங்களது கடமையை நிறைவேற்றுவார்கள்.

இந்த புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது அல்லாவிற்கு பலியிடுவதாகும். பெருநாள் தொழுகை நடைப்பெற்ற பின்னர் ஆடு,மாடு,ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு :

வரலாறு :

இறைவனின் கொள்கையை முழங்கிய நபி இப்ராஹிம். இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.பின்னர் அவரின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு நபி இஸ்மாயில் பிறந்தார்.

இறைவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இப்ராஹிமிற்கு பல சோதனைகள் வந்தது அவை எல்லாவற்றையும் கடந்து வந்த இப்ராஹீம் நபிக்கு இறுதியாக மிகப்பெரிய சோதனை வந்தது.

கனவு :

கனவு :

ஒரு நாள் இரவு இப்ராஹிம் உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது கனவில் பால்ய பருவத்தை அடைந்திருந்த மகன் இஸ்மாயிலை தனக்கு பலியிடுமாறு கடவுள் கட்டளையிடுகிறார்.

இதைப்பற்றி மகனிடம் கூற, இஸ்மாயிலும் உடனே அந்த கடமையை நிறைவேற்றுமாறு கூறுகிறான்.

மகனுக்கு பதிலாக ஆடு :

மகனுக்கு பதிலாக ஆடு :

இறைவனுக்கு மகனையே பலி கொடுக்க துணிந்த இப்ராஹிமை பார்த்து மகிழ்ந்த இறைவன் சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி அதனை தடுத்துவிட்டார். மேலும் இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறும் கட்டளையிட்டார்.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாகத்தான் பக்ரீத் திருநாளன்று ஆடு வெட்டப்படுகிறது.

விதிமுறைகள் :

விதிமுறைகள் :

வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போகையில் ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறது ஷரிஅத்.

உற்றார், உறவினர், ஏழைகளை இந்நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது.

குர்பானி கொடுக்கும் பிராணியின் இறைச்சியை மூன்று பங்குகளாக்க வேண்டும். ஒன்றை தனக்கும், இரண்டாவது பங்கை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும்.

பிராணிகள் :

பிராணிகள் :

குர்பானி கொடுக்கப்படும் பிராணி நன்கு கொழுத்ததாக இருக்கவேண்டும். நோய், அல்லது சிலபகுதி வெட்டப்பட்டிருப்பது போன்ற குறைகள் இருக்கக்கூடாது. குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் பிறை 1லிருந்து குர்பானி கொடுக்கும் வரை தன் உடலிலிருந்து உரோமங்களைக் களைவதும், நகம் வெட்டுவதும் கூடாது.

குர்பானி கொடுப்பவரே அறுப்பது நல்லது. இயலாதவர்கள் வேறு ஒருவரை நியமித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

பக்ரீத் :

பக்ரீத் :

பக்ரி என்றால் ஆடு. இந்தியாவில் பெரும்பாலும் ஆட்டை குர்பானி கொடுப்பதால் தான் பக்ரீத் என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னால் இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறுவது தான் சிறப்பானதாகும்.

இந்த நாளின் முக்கிய அம்சமாக சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படும். பெரும்பாலும் இந்த தொழுகை திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life, spiritual
English summary

Story about Bakrid festival

Story about Bakrid festival
Story first published: Friday, September 1, 2017, 13:35 [IST]
Subscribe Newsletter