For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுரோட்டில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண், கைகட்டி வேடிக்கை பார்த்த மக்கள்!

இன்னும் எத்தன நாளுக்கு கூட்டம் கூடி வேடிக்க மட்டுமே பார்க்க போறீங்க...?

|
People Who Witnessed The Crime and Did Nothing!

மறதியும், வேடிக்கைப் பார்ப்பதும் இந்தியர்களின் பிறவி நோயாக மாறிவிட்டது. அரசியல் தவறுகளில் இருந்தது, சமூகத்தில் கண்முன்னே நடக்கும் தவறுகள் வரை எது நடந்தாலும் நாம் சங்கடமே இன்று வேடிக்கைப் பார்ப்போம். அது நம்மை பாதிக்கவில்லையே, யாரோ ஒருவரை தானே பாதிக்கிறது. ஒருவேளை நாம் தட்டிக் கேட்க சென்று, அதன் தாக்கம் நம்மீதும் ஓட்டிக் கொண்டால் என்ன செய்வது? என்ற அச்சம்.

தம்பி படத்தில் "தம்பி" மாதவன் பேசும் வசனம் தான் அநீதிக்கு எதிராக நாம் அனுதினம் மறவாமல் செய்துக் கொண்டிருக்கும் வேலை. ரோட்டில் ஒருவன் சாலை விதி மீறி வந்துக் கொண்டிருப்பான். முன்னே விதிமுறைகளை பின்பற்றி சரியாக செல்லும் நபரை, வேகமாக செல்ல கூறி வசைப்பாடி செல்வான். அப்படி நாமும் வசைப்பாடி இருப்போம், அல்லது வசைபாட்டுக்கு ஆளாகியிருப்போம். என்றாவது அதை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கிறோமா?

இதை விடுங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர், பேருந்தில் பெண்கள் அருகே நின்று சில்மிஷம் செய்வோர் என எதாவது ஒரு சம்பவதிலாவது குறைந்தபட்ச மனித பிறவியாக நாம் நமது எதிர்ப்பை பதிவு செய்ததுண்டா? ஆனால், நன்கு வேடிக்கைப் பார்ப்போம்.

இதோ! மனித இனத்திற்கு முன், மனிதம் இறந்ததற்கு ஆதாரமாக நம் நாட்டில் பெரும் சான்றாக பதிவாகியுருக்கும் நிகழ்வுகள். இனிமேலாவது வெறுமென நின்று வேடிக்கைப் பார்க்காமல் தைரியமாகத் தட்டிக் கேட்க முயல்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடுரோட்டில் கற்பழிப்பு!

நடுரோட்டில் கற்பழிப்பு!

சமீபத்தில் காஞ்சி சிவா எனும் 21 வயது ஆட்டோ ஓட்டுனர் பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணெதிரே ஓர் அப்பாவி பெண்ணை பலாத்காரம் செய்தார். அந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. இன்னொரு ஆட்டோ ஓட்டுனர் இந்த சம்பவத்தை தனது போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார்.

பிறகு போலீஸ் விசாரணையின் போது அந்த வீடியோவை சரண்டர் செய்தார். இதுவே நமக்கு தெரிந்த பெண்ணாக இருந்தால், அந்த பெண் நாம் பெற்ற மகளாக இருந்தால், இப்படி வீடியோ எடுத்திருப்போமா? அல்ல வேடிக்கை பார்த்து சென்றிருப்போமா?

கார் விபத்து!

கார் விபத்து!

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு கார் விபத்து ஏற்பட்டது. மிகவும் கொடூரமான வகையில் அந்த விபத்து அமைந்திருந்தது. அந்த விபத்து நடந்த ஒருசில நிமிடங்களில் அந்த விபத்து குறித்தப் படங்கள் சமூக தளங்களில் காட்டுத்தீப் போல பரவ ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கானவார்கள் அதை வைரலாகப் பரப்பினார்கள். ஆனால், மனிதநேயம் இறந்துவிட்டது.

மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்த அந்த இளம் வயதினரை காப்பாற்றுவதை காட்டிலும், அதை படம்பிடித்து அதிக லைக்குகள் வாங்குவது தான் முக்கியமாக இருக்கிறது. அந்த விபத்தை புகைப்படம் எடுத்து பரப்பிய மக்கள் நினைத்திருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், நமக்கு சேகமான ஸ்மைலி தான் போட தெரியுமே தவிர, உண்மையான வேதனையின் வலி தெரியாது.

34 வயது பெண்...

34 வயது பெண்...

அக்டோபர் 17 அன்று ஒரு வீடியோ வெளியானது. அதில் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த 34 வயதுமிக்க நடுவயது பெண்மணி ஒருவர் கிரேன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறார். மிகவும் மோசமான நிலையில் அவர் நிலைக் குலைந்து சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை நாம் வீடியோ தான் எடுத்தோம்.

அந்த பெண் கீழே விழுந்துக்கிடந்த அதே சாலையில் பல வாகனங்கள் அந்த பெண்ணை கடந்து செல்வதை வீடியோவில் தெளிவாக காண முடிகிறது. ஆனால், அவரை காப்பாற்ற ஒரு நபர் கூட முயற்சிக்கவில்லை. கடைசியாக போலீஸார் வந்தனர், அந்த பெண்மணியை கண்டு, அவர் இறந்துவிட்டார் என கூறினார்கள்.

நிமிடத்தில் எத்தனை பணம் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நமது மனதிற்கு, இந்த உலகிலேயே விலைமதிப்பற்ற பொருள் ஓர் உயிர்தான். அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லமால் போய்விட்டது.

12 மணி நேரமாக...

12 மணி நேரமாக...

கடந்த ஆகஸ்ட் மாதம்., 35 வயதுமிக்க ஒரு நடுவயது ஆண், வேகமாக வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார். ஏறத்தாழ டெல்லியின் அந்த சாலையில் அவர் 12 மணி நேரமாக இரத்தம் வழிந்தபடியே கிடந்தார். தன்னை காப்பாற்றும்படி அவர் கெஞ்சி மன்றாவியுள்ளார். அந்த வழியில் சென்றே ஒருவரும் அவருக்கு உதவவில்லை. மாறாக அவரிடம் இருந்த பணம் மற்றும் பொருளை திருடி சென்றுள்ளனர்.

நாமெல்லாம் மனிதர்கள் தானா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது இந்த செயல்.

21 முறை கத்திக்குத்து...

21 முறை கத்திக்குத்து...

நார்த் டெல்லியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை 21 முறை கத்தியால் குத்தியுள்ளார். சுரேந்தர் சிங் எனும் அந்த நபர் கடந்த ஒரு வருட காலமாக தங்கள் குடும்பத்தை தொல்லை செய்து வருவதாக அந்த பெண்ணின் குடும்பத்தார் கூறுகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் பலர் கடந்து சென்றுள்ளனர். அந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் மொத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது.

18 வயது சிறுவன்!

18 வயது சிறுவன்!

இது கர்நாடகத்தில் நடந்த ஒரு சம்பவம். 18 வயதுமிக்க ஒரு இளைஞர் சாலை விபத்தில் சிக்கி கடுமையான காயங்கள் அடைந்தார். 25 நிமிடங்களாக கடுமையான இரத்தப் போக்கில் தவித்த இளைஞரை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கூடி நின்று புகைப்படம் தான் எடுத்தார்களோ தவிர யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவவில்லை. கடைசியாக ஒரு நபர் 25 நிமிடங்கள் கழித்து மருத்துவமனைக்கு கால் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் உயிரிழந்தார்.

மைனர் பெண்!

மைனர் பெண்!

மும்பையை சேர்ந்த ஒரு மைனர் பெண். அவரை பொது இடத்தில் வைத்து ஒரு கும்பல் தொடர்ந்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அந்த பெண் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். அந்த பெண் மற்றும் கும்பலுக்கு மத்தியில் நடந்த வாக்குவாதத்தின் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மூக்கை உடைத்து கீழே விழ செய்துள்ளனர். சுற்றி இருந்த கும்பல் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைக்கட்டி நின்றுள்ளது.

மெட்ரோ ஸ்டேஷன்!

மெட்ரோ ஸ்டேஷன்!

டெல்லின் மெட்ரோ ஸ்டேஷனில் நடந்து மற்றுமொரு பயங்கரமான சம்பவம் இது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் முகம் தெரியாத 26 வயதுமிக்க நபர் ஒருவர் 34 வயதுமிக்க பெண்மணியை 30 தடவைக்கும் மேலாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். எம்.ஜி. சாலை மெட்ரோ ஸ்டேஷனில் நடந்த இந்த சம்பவத்தை பெரும் கூட்டம் வேடிக்கை பார்த்துள்ளது. ஆனால், ஒருவர் கூட அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை.

இளைஞர்!

இளைஞர்!

அந்த இளைஞருக்கு 25 வயது இருக்கும். என்னென்ன கனவுகளோட வாழ்ந்து வந்தாரோ தெரியவில்லை. அன்று சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்காக போராடிய அந்த நபருக்கு அந்த வழியே சென்ற யாரும் உதவ முன்வரவில்லை. மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என பரிசோதனை செய்த மருத்துவர் கூறினார்.

கையில் வெட்டு!

கையில் வெட்டு!

லக்ஷ்மிப்பூர் கேரி மார்கெட்டில் நடந்த சம்பவம் இது. அந்த பெண்ணுக்கு 15வயது தான் இருக்கும். அந்த மார்கெட்டில் குறைந்தபட்சம் 200 - 300 பேர் இருந்திருப்பார்கள். ஒரு முகம் தெரியாத நபர் அந்த பெண்ணின் கையைக் கத்தியால் வெட்டி விட்டு செல்கிறார். கூடியிருந்த ஒருவர் கூட அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தவில்லை.

சாலை விபத்து!

சாலை விபத்து!

ஒரு நிகழ்வை தனது ஃபேஸ்புக் வாழ்வில் பதிவு செய்திட வேண்டும் அவ்வளவு தான். ஆனால், அந்த விபத்தில் அந்த நபரை காப்பாற்றி இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுக்க அந்த நிகழ்வு பதிவாகியிருக்குமே. அந்த குடும்பமே உங்களை தங்கள் வாழ்க்கை முழுக்க நினைத்துக் கொண்டிருந்திருக்குமே. இது ஏன் யார் மனதிலும் எழுவதில்லை.

சாலையில் நடந்த விபத்தில் 40 வயதுமிக்க அந்த ஆண் கீழே விழுந்துக் கிடக்கிறார். அவரை கடந்து நடந்த சென்ற ஒருவரும் அவருக்கு உதவவில்லை. ஆனால், புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த மாதரியான மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் செய்திகளில் பதிவானவை. பதிவாகாமல் போன எத்தனையோ நிகழ்வுகள் இருக்கின்றன.

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

புகைப்படம் எடுக்கும் தருணத்தில், ஆம்புலன்சுக்கு கால் செய்தாலாவது அந்த உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அளவிற்கு கூட நாம் நிஜ வாழ்க்கையில் ஆக்டிவாக இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

இந்நிலை எப்போது மாறும் என தெரியவில்லை. ஆனால், உடனடியாக மாற வேண்டும். இல்லையேல், வருங்காலத்தில் நம் அருகில் என்ன நடக்கிறது என்பதை கூட அறியாமல் போனை மட்டுமே நோண்டிக் கொண்டு நாம் வாழத் துவங்கிவிடுவோம். மனித இனம் இப்படியும் அழியலாம் என்பதற்கான ஓர் எச்சரிக்கை மணி இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People Who Witnessed The Crime and Did Nothing!

People Who Witnessed The Crime and Did Nothing!
Desktop Bottom Promotion