கஜகஸ்தானில் வாரக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள், மர்மம் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

தூக்கம் ஒரு வரப்பிரசாதம் என்பார்கள். நன்கு உழைப்பவர்களும், உள்ளாதில் அழுக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே தூக்கம் தானாய் வரும். அதிகப்படியான உறக்கமும் ஆரோக்கியத்திற்கு சீர்கேடு தான்.

Mysterious Kazakhstan village of Kalachi was nicknamed 'Sleepy Hollow'

ஆனால், கஜகஸ்தானில் ஒரு கிராமத்தில் ஏன்? எதனால்? என்ற காரணம் தெரியாமல் மக்கள் வாரக்கணக்கில் தூங்கி வந்தனர். உறங்கினால் எழ ஓரிரு நாட்கள் ஆகும், இந்த பிரச்சனை கலாச்சி எனும் அந்த கிராமத்தில் பலரிடம் தொற்ற ஆரம்பித்தது.

இதன் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த உண்மை சற்றே கதிகலங்க வைத்தது என்பது தான் உண்மை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலாச்சி கிராம மக்கள்!

கலாச்சி கிராம மக்கள்!

இந்த வினோத நோய் தாக்கம் கஜகஸ்தானை சேர்ந்த கலாச்சி கிராம மக்கள் மத்தியில் மார்ச் 2013 - 2015 வரையிலும் காணப்பட்டிருந்தது. ஏன்? எதனால்? என காரணம் அறியாமலேயே கலாச்சி கிராம மக்கள் திடீர், திடீரென தூங்கிவிழ ஆரம்பித்தனர்.

ஓரிரு நாட்கள்...

ஓரிரு நாட்கள்...

இப்படி காரணம் தெரியாமல் திடீரென தூங்கி விழும் கலாச்சி கிராம மக்கள் சில சமயங்களில் இரண்டு நாட்கள் வரையிலும் கூட தூங்கி இருந்தார்களாம். இப்படி அதிகமாக தூங்கும் மக்கள் மத்தியில் ஞாபக மறதி அதிகரித்து வந்தது.

ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

மக்கள் மட்டுமின்றிம், இந்த தூக்க பிரச்சனை ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது என்ன என்று அறிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு பரிசோதனைகள்!

பல்வேறு பரிசோதனைகள்!

இந்த மர்மத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக, அங்கு வாழும் மக்களிடம் இரத்த பரிசோதனை மட்டுமின்றி, மண், நீர், காற்று என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. முதலில் இதற்கான காரணம் யாராலும் கண்டறிய முடியாமல் பெரும் புதிராகவே இருந்தது.

உலோக கலப்புகள்!

உலோக கலப்புகள்!

பிறகு தான் மெல்ல, மெல்ல, கலாச்சி கிராமத்தில் உள்ள மண் மற்றும் நீரில் அதிகளவில் உலோக கலப்புகள் உண்டாகி இருந்ததும். இதை தொடர்ந்து, நீரில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் தாக்கம் இருக்குமா என சந்தேகிக்கப்பட்டது.

யுரேனியம்!

யுரேனியம்!

கலாச்சியில் முன்பு செயல்பட்டு வந்த யூரேனியம் சுரங்கம் இருந்தது பிறகு கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு-ன் விஷத்தன்மை தான் மக்கள் மத்தியில் இந்த உறக்க பிரச்சனை எழ காரணம் என ஆய்வாளர்கள் அறிந்தனர்.

6500 - 700!

6500 - 700!

ஏறத்தாழ 6500 பேர் வசித்து வந்த கலாச்சியில்இப்போது 700 பேர் தான் வசிக்கின்றனர். கலாச்சி கிராம பகுதியில் காற்றில் கலந்த கார்பன் மோனாக்சைடு காரணமாகவே இந்த பிரச்சனை எழுந்தது ஊர்ஜிதம் ஆனது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mysterious Kazakhstan village of Kalachi was nicknamed 'Sleepy Hollow'

Mysterious Kazakhstan village of Kalachi was nicknamed 'Sleepy Hollow'
Story first published: Tuesday, January 10, 2017, 15:30 [IST]
Subscribe Newsletter