உங்க பிறந்த தேதி சொல்லுங்க!! நீங்க காதல்ல கில்லாடியான்னு சொல்றோம்!!

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

காதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல.

Love compatibility by date of birth

ஏனெனில் எல்லாருடைய குணங்களும் பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன . எனவே தான் காதல் கடந்த உறவுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு நாம் பொருத்தமாக இருப்பமா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு திருமணப் பொருத்தம் மாதிரியே காதல் பொருத்தமும் உங்களுக்கு தேவைப்படுகிறது.

இந்த பொருத்தம் உங்கள் உறவுகளுக்கு நீண்ட ஆயுள் தருவதோடு சண்டை சச்சரவுகளை தவிர்த்து உறவுகளில் இன்பத்தை நீடிக்கவும் செய்யும்

நீங்கள் காதல் மன்னாகவோ அல்லது காதல் ராணியாகவோ திகழ்வீர்களா என்பதை உங்கள் பிறந்த தேதியை வைத்தே சொல்லலாம்.

சரி வாங்க காதல் கில்லாடிகளே உங்கள் காதல் பொருத்தத்தை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் (மார்ச் 21-ஏப்ரல் 19)

மேஷம் (மார்ச் 21-ஏப்ரல் 19)

உங்களுக்கு காதலை ஆரம்பிப்பதே பிரச்சினை தாங்க. ஆனால் உங்கள் பார்ட்னர் முதலில் காதல் புரோபோஸ் பண்ணிட்டால் போதும் உங்கள் ஒட்டு மொத்த காதலையும் அன்பையும் பொழிந்து அவர்களை நனைய வைத்திடுவிங்க.

அதிகமான பொஸஸிவ் குணம் கொண்டு இருப்பிங்க. உங்கள் லவ் பார்ட்னர் என்ன கேட்டாலும் எத கேட்டாலும் அத செய்து கொடுத்து அசத்திடுவிங்க.

 மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 19)#2

மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 19)#2

நிறைய நேரங்களில் அன்னோன்னியமாக இருப்பதை விரும்புவீர்களா. இதை உங்கள் பார்ட்னரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என நினைப்பீர்கள்.

மென்மையான அமைதியான சந்தோஷமான காதலை தருவீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி துலாம், மிதுனம், கும்பம், சிம்பம், தனுசு போன்றவை ஆகும்.

ரிஷபம் (ஏப்ரல் 20-மே 20)

ரிஷபம் (ஏப்ரல் 20-மே 20)

இவர்கள் நிஜமாகவே காதல் கில்லாடிகள். ஒரு பாதுகாப்பான அமைதியான அன்பான காதலை கொடுப்பதில் வல்லவர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 20 - மே 20)#2

ரிஷபம் (ஏப்ரல் 20 - மே 20)#2

தங்கள் பார்ட்னருடன் அளவு கடந்த நெருக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அன்னோன்னியமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வைத்து நடப்பார்கள். அதே நேரத்தில் சில விதிமுறைகளை மீற விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி கடகம், கன்னி, மகரம், மீனம் ஆகும்.

மிதுனம் (மே21-ஜீன் 20)

மிதுனம் (மே21-ஜீன் 20)

இவர்களை பொருத்தவரை காதல் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். நேராக பார்த்து பழகுவதை விட பேசிப் பழகுவதை அதிகம் விரும்புவார்கள். காதல் பந்தத்தில் கமிட் ஆவதற்கு முன் நிறைய ஊர் சுற்றனும், பேசிப் பழகனும் என்று நிறைய வாய்ப்புகளை வைத்திருப்பர்.

மிதுனம்(மே21-ஜீன் 20) #2

மிதுனம்(மே21-ஜீன் 20) #2

காதல் தூண்டுபவர்களாகவும் , வித்தியாசமானவர்களாகவும் மற்றும் பேஷனாக இருப்பர். நிறைய நேரங்களில் இவர்கள் உணர்ச்சிப் பூர்வ நெருக்கத்துடன் இருக்க மாட்டார்கள். ஒரே பார்ட்னருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் இவர்களுக்கு செல்லாது. இவர்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மேஷம், தனுசு, துலாம், சிம்பம், கும்பம் ஆகும்

 கடகம் (ஜீன் 21-ஜூலை 22)

கடகம் (ஜீன் 21-ஜூலை 22)

இவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருப்பர். காதல் உணர்ச்சிகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பர். காதலில் நேர்மையாகவும் கவனிப்புடனும் நடந்து கொள்வர்.

கடகம் (ஜீன் 21-ஜூலை 22)

கடகம் (ஜீன் 21-ஜூலை 22)

லவ் பார்ட்னரின் மனதில் உள்ள அன்பை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து கொள்வர். இவர்களுக்கு வார்த்தைகள் தேவைப்படாது மனதார அன்பு ஒன்றே போதும். மேலோட்டமான, நம்ப முடியாத பார்டனர்களை விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி ரிஷபம், மீனம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகும்.

 சிம்மம் (ஜூலை 23 - ஆகஸ்ட் 22)

சிம்மம் (ஜூலை 23 - ஆகஸ்ட் 22)

சிம்மம் (ஜூலை 23 - ஆகஸ்ட் 22)

இவர்கள் காதலில் அதிக உணர்ச்சி வாய்ந்தவராக இருப்பர். ஒரு அழகான காதலை பார்ட்னருக்கு கொடுப்பர். ஒரு விசுவாசமான, ஜாலியான மற்றும் மரியாதைக்குரியவராக நடந்து கொள்வர். காதல் உறவில் தலைமை வகுத்து முன்னின்று நடத்திச் செல்வர்.

சிம்மம் (ஜூலை 23 - ஆகஸ்ட் 22)#2

தங்களுடைய பார்ட்னரும் அறிவாளியாகவும், பிரச்சினைகளை சமாளிப்பவராகவும் இருப்பவராக விரும்புவார்கள். அதே நேரத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து காதலை வெளிப்படுத்தும் ஜோடியை எதிர்பார்ப்பார்கள். புதுவிதமான அன்னோன்னியமான வாழ்க்கை இவர்களுக்கு பிடிக்கும். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி துலாம், மேஷம், மிதுனம், தனுசு ஆகும்.

கன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)

கன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)

கன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)

இவர்கள் மிகவும் மென்மையானவர்கள். எனவே தங்கள் பார்ட்னர் தங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை விரும்புவார்கள். சாதாரணமான ஊற்றும் காதலை ஒரு போதும் இவர்கள் விரும்பமாட்டார்கள். காதல் உறவில் மிகுந்த பற்றுடன், நிலையான உறவை மட்டுமே விரும்புவார்கள்.

கன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22) #2

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்துடன் பார்ட்னர் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவர் ஒருத்தருடனே வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ வேண்டும் என்று நினைப்பர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி விருச்சிகம், மீனம், மகரம் , ரிஷபம், கடகம் ஆகு

துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)

துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)

இவர்கள் நீண்ட காலம் தேடி தான் தங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுப்பர். காதல் உறவில் விழுந்துவிட்டால் உண்மையான அன்புடன் காதல் கீதத்தய ே இயற்றிவிடுவர். இவர்களுடன் வாழ்க்கை மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)#2

இவர்களுடன் காதல் வாழ்க்கை நிலையானதாகவும், கிரியேட்டிவ் நிறைந்ததாகவும், வெளிப்படையான அன்புடனும் இருக்கும். இவர்களுடன் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.சந்தோஷமான காதல் தருணத்திற்கு உரியவர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி கும்பம், தனுசு, மிதுனம், சிம்பம் ஆகும்.

விருச்சிகம் (அக்டோபர் 2 3 - நவம்பர் 21)

விருச்சிகம் (அக்டோபர் 2 3 - நவம்பர் 21)

இவர்கள் அன்னோன்னியமாக இருப்பதற்கும் காதல் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். அறிவாளியான பார்ட்னரையே இவர்கள் விரும்புவார்கள். உண்மையான வெளிப்படையான அன்பை விரும்புவார்கள். தங்கள் பார்ட்னரை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டே பிறகே இவர்கள் காதலில் விடுவார்கள். இவர்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மீனம், கடகம்,மகரம், கன்னி ஆகும்.

 தனுசு (நவம்பர் 22 - டிசம்பர் 21)

தனுசு (நவம்பர் 22 - டிசம்பர் 21)

ஒரு ஜாலியான காதல் வாழ்க்கை வாழ விரும்புவார்கள். தங்கள் பார்ட்னர் வெளிப்படையாகவும், தங்களை போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைப்பர்.

இந்த பூமியில் வாழும் வரை சந்தோஷமாகவும் எதிர்பார்த்த எல்லாவற்றையும் கொடுத்து காதல் கொள்ள வேண்டும் என விரும்புவர். அழகான அன்னோன்னியமான வாழ்க்கையை ரசிப்பார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி விருச்சிகம், மேஷம், துலாம், மகரம், சிம்பம் ஆகும்.

மகரம் (டிசம்பர் 22 - ஜனவரி 19)

மகரம் (டிசம்பர் 22 - ஜனவரி 19)

இவர்கள் மனதை வெல்வது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி அவர்கள் காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அவர்களுடைய பார்ட்னருக்காகவே வாழ்வர்.

இவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாத முரட்டுத்தனமாக இருப்பர். வார்த்தைகளால் உணர்ச்சிவசப்படுவர். ரெம்ப நெருக்கமானவர்களிடம் கூட தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். பார்ட்னரின் வளர்ச்சிக்கு சப்போர்ட் மற்றும் முக்கியத்துவம் கொடுப்பர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மீனம், கன்னி, விருச்சிகம், ரிஷபம் ஆகும்.

கும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18)

கும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18)

இவர்கள் காதல் தூண்டுபவராகவும், வாய்வழி உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருப்பர். இவர்களை கவர்வதற்கு வெளிப்படையாக இருத்தல், பேச்சு தொடர்பு, பிரச்சினை சமாளித்தல், மற்றும் கற்பனை போன்றவை தேவைப்படுகிறது. ஒரு நேர்மையான காதல் வாழ்க்கையை விரும்புவர். தங்கள் பார்ட்னருக்கு சுதந்திரம் கொடுப்பர், நீண்ட கால உணவுகளையே விரும்புவர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மேஷம், துலாம், மிதுனம், தனுசு ஆகும்.

மீனம் (பிப்ரவரி 19-மார்ச் 20)

மீனம் (பிப்ரவரி 19-மார்ச் 20)

இவர்கள் ரொமாண்டிக்காக இருப்பர். ஒரு நேர்மையான ஜென்டில் ரிலேசன்சிப்யை விரும்புவர். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. உண்மையான காதல் என்று வந்துவிட்டால் முழுவதுமாக அதில் இறங்கி விடுவர். தங்களுக்கு சமமான பார்ட்னரை இவர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மகரம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love compatibility by date of birth

Love compatibility by date of birth
Subscribe Newsletter