58 மணி நேரம்; 35 நிமிடம்; 58 நொடிகள்: உலகின் நீண்ட முத்த சாதனை!

Posted By:
Subscribe to Boldsky

இன்று உலக முத்தம் தினம். அன்பின் வெளிப்பாடான முத்தம் சார்ந்த நடந்து ஒரு உலக சாதனை பற்றி தான் நாம் இங்கே காணவிருக்கிறோம். பட்டாயா, தாய்லாந்து சேர்ந்த ஜோடி. கடந்த 2013ம் ஆண்டு இந்த ஜோடி உலகின் நீண்ட முத்தத்தை பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இரண்டு நிமிடத்திற்கு திக்குமுக்காடி போகும் போது இவர்கள் எப்படி இப்படி ஒரு சாதனை படைத்தனர் என உலக மக்கள் வியப்பில் ஆழந்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எக்கச்சை, லக்ஷனா!

எக்கச்சை, லக்ஷனா!

எக்கச்சை டிரணரத் (44), லக்ஷனா (33), இந்த ஜோடி தான் இந்த நீண்ட முத்த உலக சாதனையை நான்கு வருடங்களுக்கு முன்னர் படைத்தவர்கள்.

இவர்கள் 8 மணி நேரம் 35 நிமிடம், 58 நொடிகள் லிப் லாக் கிஸ் அடித்து இந்த சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

Image Credit: World Record Academy

கின்னஸ் உலக சாதனை!

கின்னஸ் உலக சாதனை!

இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்தது இதே பட்டாயா தாய்லாந்தை சேர்ந்த தன்கொர்ன் சித்தியம்தாங் மற்றும் நொந்தவத் சாரியன்கேசொர்ன்சின் ஜோடி நிகழ்ச்சியது ஆகும். இவர்கள் 50 மணிநேரம், 25 நிமிடங்கள் 1நொடி முத்தமிட்டுக் கொண்டு இந்த சாதனை நிகழ்த்தினர்.

உலகின் விலையுர்ந்த முத்தம்!

உலகின் விலையுர்ந்த முத்தம்!

மேலும், கின்னஸ் உலக சாதனையில் விலை உயர்ந்த முத்தம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த ஜோனி ரிம் என்பவர் ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் என்பவரை முத்தமிட $50,000 ஏலம்விட்டு தொகை கட்டி முத்தமிட்டுள்ளார்.

இந்த தொகை லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க நன்கொடையாக அளிக்கப்பட்டது.

நீண்ட முத்தம்!

நீண்ட முத்தம்!

நாம் மேலே படித்த உலகின் நீண்ட முத்தமானது. காதலர் தினம் நள்ளிரவில் முடிவடைந்தது இந்த உலக சாதனையின் சிறப்பாக காணப்படுகிறது. இந்த ஜோடிக்கு $3,300 டாலர்கள் பரிசு தொகையாக அளிக்கப்பட்டது.

இரண்டரை நாட்கள்!

இரண்டரை நாட்கள்!

இந்த சாதனையை நிகழ்த்த அந்த ஜோடி இரண்டரை நாட்கள் உறங்காமல் இருந்தனர். 58 மணிநேரம் நின்றபடியே அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சாதனை நிகழ்த்தி முடித்த பிறகு அவர்கள் மிகவும் சோர்ந்து போய்விட்டனர். (இருக்காதா பின்ன!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Kiss Day: Longest Kiss Of 58 Hours Break World Record!

World Kiss Day: Longest Kiss Of 58 Hours Break World Record!
Story first published: Thursday, July 6, 2017, 15:20 [IST]