இந்த 'மேட் இன் இந்தியா' பாப்பா இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அலிஷா சினாய், மேட் இன் இந்தியா பாடல் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திருப்பியவர். 90-களில் ஆங்கில பாப் ஆல்பம் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தவர்களை, தனது பாடல் மூலம் பித்துப்பிடிக்க வைத்தவர்.

பொம்மை போன்ற உருவம், அழகு இவருக்கு குரலிலும் அளவிற்கு அதிகமாகவே இருந்தது...

All Image Courtest

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்திய பாப் பாடகி அலிஷா சினாய்-ன் இயற் பெயர் சுஜாதா சினாய். இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் மார்ச் 18, 1965-ல் பிறந்தவர்.

அலிஷா சினாய், அலிஷா, பேபி டால், இந்தியன் மடோனா என பல புனைப்பெயர்கள் கொண்டு இரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

#2

#2

இவர் ஆரம்பக் காலத்தில் இந்தி சினிமாக்களில் பாடி வந்திருந்தாலும், மேட் இந்தியா எனும் பாப் ஆல்பம் தான் இவருக்கு பெரும் புகழை உலகளவில் பெற்றுத் தந்தது.

#3

#3

அலிஷா அன்லீஷ்டு, ஜாடூ, அலிஷா, மேட் இன் இந்தியா, ஷட் அப் அன்ட் கிஸ் மீ, காமசூத்ரா என பல ஆல்பங்கள் அலிஷா சினாய் பாடியுள்ளார்.

#4

#4

அலிஷா சினாய் தனது மேலாளர் ராஜேஷ் என்பவரையே திருமணம் செய்துக் கொண்டார். பிறகு இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

#5

#5

அலிஷா சினாய் பாடிய "கஜ்ரா ரே" பாடல் சிட்டி முதல் பட்டித்தொட்டி வரை இந்தியா முழுவதும் பிரபலமான பாடல். ஆனால், இந்த பாடலுக்காக இவர் வாங்கிய ஊதியம் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே!

#6

#6

அலிஷா சினாய் "கஜ்ரா ரே" பாடலுக்காக ஃபிலிம்பேர் விருதும், "மேட் இன் இந்தியா" பாடலுக்காக சர்வதேச பில்போர்ட், ஃப்ரெட்டி மெர்குரி விருதுகளும் பெற்றுள்ளார்.

#7

#7

மேட் இன் இந்தியா எனும் பாப் பாடல் 90-களில் இந்தியாவின் பாப் கீதமாக திகழ்ந்தது. இந்த பாடலை கேட்காத, பாடாத, முணுமுணுக்காத ஆளையே பார்க்க முடியாது.

#8

#8

இந்த பாடல் அலிஷா பயன்படுத்திய அந்த வெள்ளை நிற ஃபெதர் ஆடையும், விக்கும் மிகவும் பிரபலம் அடைந்தது. பல பிரபலங்கள் மற்றும் மாடர்ன் பெண்கள் இதை வாங்கி குவித்தனர் என கூறலாம்.

#9

#9

அலிஷாவின் மேட் இன் இந்தியா பாடலின் இறுதியில், அவரது மனம் கவர்ந்து செல்லும் நபராக வந்த நடிகர் மாடல் மிலிந்த் சோமன் ஒரு விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

#10

#10

கடந்த 2015-ல் இவர் வெம்ப்லே ஸ்டேடியத்தில் மோடி உரை நிகழ்த்திய பெரும் நிகழ்வில், அறுபதாயிரம் ரசிகரிகளின் ஆரவாரத்தின் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திய மேட் இன் இந்தியா பாடலை ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மேடையில் பாடி அசத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About "Made in India" Pop Singer Alisha Chinai!

Lesser Known Facts About "Made in India" Pop Singer Alisha Chinai!
Story first published: Wednesday, May 3, 2017, 11:20 [IST]
Subscribe Newsletter