குரங்கு ரேகை மடிப்பு என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக அனைவரின் கைகளிலும் காணப்படும் ரேகைகள் என சிலவன இருக்கின்றன. அதையும் தாண்டி சிலரது கைகளில் மட்டும் காணப்படும் சில சிறப்பு ரேகைகளும் இருக்கின்றன.

Know the Significance of the Minor Lines on your Palm

இந்த ரேகைகள் எப்படி அமைந்திருந்தால், என்ன பலன் என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய ரேகை:

சூரிய ரேகை:

சூரிய ரேகையானது விதி ரேகைக்கு இணையாக மோதிர விரலின் கீழே அமைந்திருக்கும். இந்த ரேகையின் பலனை வைத்து ஒருவரது புகழ் மற்றும் இகழ்ச்சியை அறிய முடியும்.

சுக்கிரனின் வட்டப்பாதை:

சுக்கிரனின் வட்டப்பாதை:

இந்த ரேகை சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் துவங்கி, மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு கீழே ஒரு கீற்று போன்று ஓடி, நடுவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் முடியும். இந்த ரேகை வைத்து ஒருவருடைய அறிவு, திறமை பற்றி அறிய முடியும்.

நட்பு ரேகை:

நட்பு ரேகை:

இந்த நட்பு ரேகையானது குறுகிய கிடைமட்ட ரேகையாகும். இது உள்ளங்கையின் விளிம்பில் இதை ரேகைக்கும், சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையே காணப்படும். இந்த ரேகை உறவுகள் சார்ந்து பலன் கூறுவது ஆகும்.

வெள்ளி ரேகை:

வெள்ளி ரேகை:

இந்த வெள்ளி ரேகையனது மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்து, சந்து விரலை நோக்கு உள்ளங்கையின் மேல் நோக்கு ஓடுகிறது. இந்த ரேகையின் பலன் வைத்து ஒருவருடைய உடல் நல பிரச்சனைகள், தொழில் புத்திசாலித்தனம், மற்றவருடனான உறவு குறித்து அறிய முடியும்.

பயண ரேகை:

பயண ரேகை:

கிடைமட்ட ரேகையான பயண ரேகையானது உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் இருந்து மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த ரேகையை வைத்து ஒரு நபரால் மேற்கொள்ளப்படும் பயணத்தை அறிய முடியும்.

அப்போலோ ரேகை:

அப்போலோ ரேகை:

அப்போலோ ரேகை என்பது வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை குறிக்கும் ரேகையாகும். இது மணிக்கட்டில் சந்திர மேட்டில் இருந்து மோதிர விரலுக்கு இடையே ஓடுகிறது.

வட்ட ரேகை:

வட்ட ரேகை:

இந்த வட்ட ரேகை ஆயுள் ரேகையை கடந்து x வடிவத்தை உருவாக்குகிறது. இது தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு பிரச்சனை விளைவிக்கும் என்பதால், இது குறித்து ஜோதிடர்கள் கூறுவதில்லை என்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.

விதி ரேகை:

விதி ரேகை:

இந்த ரேகை மணிக்கட்டின் அருகில் உள்ளங்கையின் அடியில் இருந்து நடுவிரலை நோக்கி உள்ளங்கையின் மையத்தை நோக்கி ஓடுகிறது. இது கல்வி மற்றும் தொழில் சார்ந்த வெற்றிகள் குறித்தும், தடைகள் குறித்தும் கூறுகிறது.

குரங்கு ரேகை மடிப்பு:

குரங்கு ரேகை மடிப்பு:

குரங்கு ரேகை மதிப்பானது சுட்டு விரலுக்குக் கீழே துவங்கி, சுண்டு விரலுக்குக் கீழே முனையில் இதய ரேகை முடியும் இடத்தில் முடிவடைகிறது. இந்த ரேகையிலிருந்து கிளை ரேகைகள் எந்த திசையில் பிரிந்து செல்கின்றனவோ, அது சார்ந்து குரங்கு ரேகை மடிப்பு காட்டும் குறிப்புகள் மாறும். இந்த ரேகை உணர்ச்சி மற்றும் காரணகாரியம் குறித்து கூறுகிறது.

இதய ரேகை:

இதய ரேகை:

முக்கிய ரேகைகளில் ஒன்று இதய ரேகை. இது விரல்களுக்கு அடியில் உள்ளங்கையின் மேற்புறத்தில் காணப்படுகிறது. இது நுனிவிரலுக்கு அடியில் துவங்கி கட்டைவிரல் நோக்கி ஓடுகிறது.இதயத்தின் ஆரோக்கியம், உணர்சிகள், உணர்வுகள், இன்பம், துன்பம் குறித்து இந்த ரேகை கூறுகிறது.

தலை ரேகை:

தலை ரேகை:

இந்த தலை ரேகை சுட்டுவிரலின் கீழ் உள்ளங்கையில் துவங்கி, உள்ளங்கையின் வெளிப்புற விளிம்பில் ஓடுகிறது. கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, ஒருவரின் மனது, வேலை செய்யும் முறை குறித்து இந்த ரேகை கூறுகிறது.

ஆயுள் ரேகை:

ஆயுள் ரேகை:

ஆயுள் ரேகையானது கட்டை விரலுக்கு மேலே உள்ளங்கையின் விளிம்பில் துவங்கி, மணிக்கட்டை நோக்கி ஒரு வில்லை போல ஓடுகிறது. இது ஒருவரின் பொதுஆரோக்கியம், பேரழிவு நிகழ்வுகள், உடல் காயங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Know the Significance of the Minor Lines on your Palm

Know the Significance of the Minor Lines on your Palm
Subscribe Newsletter