பாலியல் தொழிலின் கருப்பு பக்கங்கள் - தன் புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்திய இந்திய அரசர்!

Posted By:
Subscribe to Boldsky

ஓர் இனத்தின் அழிவு படுகொலையால் மட்டும் நடந்திடுவதில்லை, அவர்தம் கலாச்சாரத்தை அவர்களையே மறக்கடித்து, வரலாற்றிலிருந்து அழித்து, நீ நீயே அல்ல என பொய் சாயம் பூசி போலியாக சமூகத்தில் அலையவிடும் போது அழியும் இனத்தின் வலி மிகவும் கொடுமையானது.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நடத்தையில் சந்தேகம் வந்தால், மிக சாதாரணமாக அவர்களை அந்த "தே" வார்த்தை சொல்லி வசைப்பாடிவிடுவோம். வசைப்பாட பயன்படும் சொல் என்பதை தாண்டி அது ஓர் இனத்தை குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.

கோயில்களில் கலை பணிவிடை செய்து அதன் மூலம் ஈட்டிய செல்வதை ஊர்களுக்கு கொடையாக அளித்து வந்த இனம். இன்று ஒருவேளை சோற்றுக்காக உடலை விற்று பிழைக்கும் இனமாக மாறி நிற்கிறது.

இவர்களது வேலை இரவில் நடப்பதால், இவர்களை பற்றி உண்மைகளும், இவர்கள் கடந்து வரும் கொடுமைகளும் ஆரிருளில் மறைந்து கிடக்கிறது.

இவர்களது வாழ்க்கையை தனது புகைப்படத்தின் மூலமாக வெகுநாட்களுக்கு முன்னரே தெரிந்தோ, தெரியாமலோ வெளிக்கொண்டு வந்துள்ளார் மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டாம் சவாய் ராம் சிங்!

இரண்டாம் சவாய் ராம் சிங்!

ஜெய்பூர்-ன் மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங். இவரை மிகவும் பிரபலமாக போட்டோகிராபர் பிரின்ஸ் என அழைத்து வந்துள்ளனர். புகைப்படக் கலையை தனது பேரார்வமாக கொண்டிருந்தவர் இரண்டாம் சவாய் ராம் சிங்.

Image Credits:tribuneindia

பேரார்வம்!

பேரார்வம்!

இவர் 1835ல் பிறந்தவர். இசை மற்றும் புகைப்படம் என்றால் இவருக்கு மிகவும் விருப்பம். 19ம் நூற்றாண்டில் புகைப்படம், போட்டோகிராபி என்றால் என்ன என்றே அறியாதிருந்த சூழலில் இவர் புகைப்பட கலையில் பேரார்வம் கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது.

Image Credits

மிஸ்டர் டி முர்ரே!

மிஸ்டர் டி முர்ரே!

1860களில் மகராஜா பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் மிஸ்டர் டி முர்ரே என்பவரை அழைத்து வந்தார். அப்போது தனது அரசாங்கத்தில் வரைப்பட கலையில் இருந்து புகைப்பட கலைக்கு மாறினார் ராம் சிங். முர்ரே அளித்த ஊக்கத்தின் காரணமாக புகைப்படக் கலையை மிகவும் நேசிக்க துவங்கினார் ராம் சிங்.

Image Credits

எங்கே போனாலும்...

எங்கே போனாலும்...

தான் எங்கே போனாலும் மகாராஜா ராம் சிங் தனது புகைப்பட கருவியையும் எடுத்து சென்றுவிடுவார். கல்கட்டா, ஆக்ரா என பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வந்துள்ளார் ராம் சிங். நிலப்பரப்புகளை புகைப்படம் எடுப்பதில் இவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது.

Image Credits:tribuneindia

பாலியல் தொழிலாளிகள்!

பாலியல் தொழிலாளிகள்!

பாலியல் தொழிலாளிகளை மாடல்களாக கொண்டு புகைப்படம் எடுப்பதில் விருப்பம் கொண்டிருந்தார் ராம் சிங். வெவ்வேறு பேக்கிரவுண்ட், வெவ்வேறு போஸ்களில் என பாலியல் தொழிலாளிகளை வைத்து நிறைய படங்கள் எடுத்துள்ளார் மகராஜா ராம் சிங்.

Image Credits

தெரிந்தோ, தெரியாமலோ!

தெரிந்தோ, தெரியாமலோ!

புகைப்படம் எடுத்து அவற்றை அந்தந்த நபர்களுக்கு பரிசாக அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம் ராம் சிங். இவர் பயன்படுத்திய கேமரா 250 ரூபாய்க்கு வாங்கப்பட்டது என அறியப்படுகிறது.

தெரிந்தோ தெரியாமலோ, அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் வாழும் சூழலை புகைப்படங்கள் எடுத்து, அவர்களது வாழ்க்கை குறித்து தாக்கம் ஏற்படுத்தியுள்ளார் ராம் சிங்.

Image Credits:pinimg

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

King Maharaja Sawai Ram Singh II Captured The Dark Side Of Prostitution!

King Maharaja Sawai Ram Singh II Captured The Dark Side Of Prostitution!