சொன்னா நம்பமாட்டீங்க! இவை தான் உலகில் மாற்றம் கொண்டுவர போகும் எதிர்கால கண்டுபிடிப்புகள்!

Posted By:
Subscribe to Boldsky

பத்து வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பாடாத ஒரு தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. இப்படி ஒரு தொழில்நுட்பம் வருமா என நாம் அன்று யோசித்ததே இல்லை. ஆனால், இன்று அது நம் வாழ்வின் ஒரு அங்கமாக... சாதாரண ஒன்றாக மாறியிருக்கிறது.

ஸ்மார்ட் போனில் துவங்கி, ஃபிட்னஸ் பேன்ட் வரை இப்படியாக நம்முடன் இணைந்துவிட்ட தொழில்நுட்பங்கள் பலவன இருக்கின்றன. இன்று நாம் கனவிலும் எதிர்ப்பார்த்திடாத சில தொழில்நுட்பங்கள்... வருங்காலத்தில் நம் வாழ்வியலில் மிக சாதாரணமாக ஒன்றிப் போகும் நிலை வரலாம்.

அப்படி அறிவியல் ஆய்வாளர்களால் கருதப்படும் வருங்கால தொழில்நுட்பங்கள் சிலவன பற்றி தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம். இவை நம் வாழ்வியலை மட்டுமல்ல, உலகின் போக்கையும் கூட மாற்றியமைக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரை ஒயினாக மாற்றும் கருவி!

நீரை ஒயினாக மாற்றும் கருவி!

வோக்டையில் (Vocktail) என கூறப்படும் கருவியை சிங்கப்பூர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளாஸ் நாம் பருகும் / பானத்தின் நிறம் மற்றும் சுவையை மாற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது. இந்த கிளாஸ் விர்சுவல் காக்டையில் எனும் மொபைல் செயலியுடன் இனைந்து செயற்படும். அதன் செட்டிங்க்ஸ் மூலம் கிளாஸ் உள்ளே இருக்கும் நீரை கண்ட்ரோல் செய்யலாம்.

© delivery.acm.org

ஸ்மார்ட் கண்ணாடிகள்!

ஸ்மார்ட் கண்ணாடிகள்!

இந்த கண்ணாடிகள் மூலம் ஒருவரை அழைக்கலாம், பாடல்களை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். இது பயண வழிகாட்டியாகவும், கலோரிகள் எத்தனை கரைந்துள்ளன என்பதையும் கூட காட்டும். வயர்லஸ் சார்ஜிங் முறையில் இதை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது காண சாதாரண கண்ணாடி போன்ற அமைப்பு தான் கொண்டிருக்கும்.

© Wue Smart Glasses/Kickstarter

டூத் பிரஷ்!

டூத் பிரஷ்!

AmaBruch எனப்படும் இந்த பிரஷ்கள் நாம் இப்போது பயன்படுத்தும் பிரஷ்களை போல இருக்காது. பத்து வினாடிகள் இதை வாயில் மாட்டிக் கொண்டால் போதும், அதுவே பற்களை மொத்தமாக சுத்தம் செய்துவிடும். இதை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் போனுடன் கனக்ட் செய்துக் கொள்ளலாம்.

© Amabrush/Kickstarter

ஸ்பீச் டூ டெக்ஸ்ட்!

ஸ்பீச் டூ டெக்ஸ்ட்!

சென்ஸ்டன் (Senstone) எனப்படும் இந்த கருவியை நாம் உடுத்தும் ஆடையில் மாட்டிக் கொண்டால் போதுமானது. ஒரு க்ளிக் செய்து இந்த கருவியை ஆன் செய்துவிடலாம். இது 97% துல்லியமாக நாம் பேசும் வார்த்தைகளை எழுத்து வடிவமாக மாற்றிவிடக் கூடும் திறன் கொண்டுள்ளது. இது மாணவ, மாணவிகளுக்கு, ஆய்வாசிரியர்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

© senstone

அலார்ம் மேட்!

அலார்ம் மேட்!

Ruggie எனப்படும் இந்த அலார்ம் மேட் யாரெல்லாம் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியாமல் அவதிப்படுகிறார்களோ அவர்களுக்கானது. இந்த அலாரத்தை நீங்கள் ஆப் செய்ய வேண்டும் என்றால். நீங்கள் எழுந்து வந்து இந்த மேட் மீது மூன்று நொடிகள் நிற்க வேண்டும். மனித மூளை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள இந்த நேரம் போதுமானது. இது அந்த நாளை உடனே துவக்க துரிதமாக உதவும்.

© Ruggie/Kickstarter

பான்கேக் பிரிண்டர்!

பான்கேக் பிரிண்டர்!

PancakeBot எனப்படும் இந்த கருவி எந்த வடிவத்திலும் பான்கேக் வடிவமைத்து கொடுக்கும். உங்களுக்கு பிடித்த கார்டூன் பாத்திரத்தில் இருந்து உலக அதிசயங்கள் வரை எந்த வடிவமாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்த பான்கேக்கை அந்த வடிவத்திலேயே ருசித்து சாப்பிடலாம்.

© Pancakebot

வாட்டர் ஃபில்டர் ஸ்ட்ரா!

வாட்டர் ஃபில்டர் ஸ்ட்ரா!

லைஃப் ஸ்ட்ரா எனப்படும் இந்த கருவி ஒரு வாட்டர் ஃபில்டர். இது 99.9% பாக்டீரியாக்கள் மற்றும் 96.2% வைரஸ்களை நீக்கிவிடும். இது ஆரம்பத்தில் எமர்ஜன்சி காலத்தில் மக்களுக்கு உதவ கண்டுபிடிக்கப்பட்டாது. ஆனால், வருங்காலத்தில் இது மனிதர்கள் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் நிலைக்கு வரலாம். மேலும், இது அட்வஞ்சர் பயணங்களில் ஈடுபடும் டிராவலர்களுக்கு பெருமளவு உதவும்.

© LifeStraw

காலாவதி!

காலாவதி!

Braskem எனும் நிறுவனம் அமெரிக்க, பிரேசில் ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த கருவியை கண்டுபிடித்துள்ளது. இது ஒரு பேக்கேஜ் சிஸ்டம் ஆகும். இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது பாட்டிலுக்குள் இருக்கும் உணவு காலாவதி ஆகிவிட்டால் நிறம் மாறிவிடும். இதை வைத்து உணவு நல்ல நிலையில் இருக்கிறதா? அல்லது கெட்டுப்போய் விட்டதா என அறிந்து உணவு உட்கொள்ள முடியும்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலின் தகுதியை அறிய இது உதவும்.

© Braskem/Youtube

விண்ட்ஷீல்ட் டிஸ்ப்ளே!

விண்ட்ஷீல்ட் டிஸ்ப்ளே!

கார்லவுடி (Carloudy) எனும் இந்த கருவி விண்ட்ஷீல்ட் டிஸ்ப்ளே ஆகும். இது காரின் கண்ணாடியிலேயே நேரம், தொலைவு மற்றும் வழியை காட்டும். இதை ப்ளூடூத் மூலம் மொபைலுடன் இணைத்துக் கொள்ள முடியும். இதனால் கார் ஓட்டும் நபர் கீழ்வும், சாலையையும் மாறி, மாறி பார்த்து தடுமாறும் நிலை மாறும். கண்ணெதிரேவே இருப்பதால் இது ஓட்டுனர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும்.

© Carloudy/Facebook

பாக்கெட் சினிமா!

பாக்கெட் சினிமா!

இந்த கருவி ஒரு வயர்லஸ் லவுட் ஸ்பீக்கர் கொண்ட பிரோஜக்ட்டர் கருவியாகும். இதை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்தலாம். நீங்கள் போகும் இடத்திற்கு எல்லாம் எடுத்து செல்லலாம். இது அளவில் ஒரு கோக் டின் பேக் சைஸில் தான் இருக்கும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 2.5 மணி நேரம் படம் பார்க்கலாம். அல்லது 40 மணி நேரம் பாடல்கள் கேட்கலாம்.

© Nebula Capsule/Indiegogo

கறைபடியாத ஷர்ட்!

கறைபடியாத ஷர்ட்!

Fooxmet எனப்படும் இந்த சட்டைகளில் எந்த பானம் கொட்டினாலும் அதன் கறைப்படியாது. ஆம்! இது ஆண்டி-ஸ்டைன் ரிபளண்ட் ஷர்ட். அடர்த்தியான திரவங்கள் கொட்டினாலும் கூட எளிதாக துடைத்துக் கொள்ளலாம். ஏதும் இந்த சட்டையில் ஒட்டிக் கொள்ளாது. இதன் ஒரே பிரச்சனை, கசங்கினால் அயர்ன் செய்து கொஞ்சம் கடினம். அதற்கு மட்டும் நேரம் பிடிக்கும்.

© Fooxmet/Kickstarter

பிக்-பாக்கெட் பிரூப் பேக்!

பிக்-பாக்கெட் பிரூப் பேக்!

LocTote எனப்படும் இந்த பேக் சாதாரண பேக் போல தான் இருக்கும். ஆனால், இதை யாராலும் அறுக்க முடியாது, தீயிட்டு கொளுத்த முடியாது. இதை லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். பயணங்களின் போது பணம், ஆவணங்கள் போன்ற முக்கியமானவற்றை இதில் வைத்துக் கொள்ளலாம்.

© LocTote/Kickstarter

எலக்ட்ரானிக் லக்கேஜ் பேக்!

எலக்ட்ரானிக் லக்கேஜ் பேக்!

Mu Ta எனும் இந்த லக்கேஜ் பேக் நிச்சயம் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும். இது ஒரு எலக்ட்ரானிக் பேக். எல்லா பேக் போலவும், ஆவணங்கள், பொருட்கள் வைத்துக் கொள்ள அமைப்புகள் இருக்கும் இது போக இதில் ஒரு சென்சார் இருக்கும். அதன் மூலம் யாரேனும் இந்த பேகை திருடிக் கொண்டு சென்றால் அவர்களை எளிதாக ட்ரேஸ் செய்து பிடித்துவிடலாம்.

© Mu Tag/Kickstarter

பிரா!

பிரா!

இது ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு நவீன பிரா. இதன் பெயர் "Husband Hunting Bra" இதில் இரு டிஜிட்டல் ஸ்க்ரீன் இருக்கும். ஒரு மோதிரம் இருக்கும். அந்த மோதிரத்தை எடுத்து இன்செர்ட் செய்தால் அந்த டிஜிட்டல் ஸ்க்ரீனில் கவுன்ட்டவுன் துவங்க ஆரம்பித்துவிடும். மேலும், இந்த பிராவில் ஒரு பேனா இருக்கும். அதில் திருமணத்திற்கான காண்ட்ராக்ட் சைன் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல.

© diamond.jp

காது சுத்தம் செய்யும் கருவி!

காது சுத்தம் செய்யும் கருவி!

EarScope எனப்படும் இந்த கருவி காதில் இருக்கும் அழுக்கு எனப்படும் மெழுகு போன்ற திரவத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதன் ஒரு முனையில் ஒரு பிரஷ் போன்ற வயர் இருக்கும். இன்னொரு முனையில் வட்டமான ஸ்க்ரீன் இருக்கும். மேலும், இதனுள் இணைக்கப்பட்டிருக்கும் எல்.ஈ.டி விளக்கின் வெளிச்சம் கொண்டு காதினை முற்றிலுமாக சுத்தம் செய்யலாம். (எதுக்கு!?)

உண்மையில், காதினை வெளிப்புறமாக சுத்தம் செய்தால் மட்டும் போதுமானது. நாம் அழுக்கு என நினைக்கும் அந்த அடர்த்தியான திரவம் தான் உண்மையில் நமது காதுகளை காப்பாற்றுகிறது.

© japantrendshop

ஈ-இன்க் டாட்டூ!

ஈ-இன்க் டாட்டூ!

moodINQ எனப்படும் இந்த கருவி டாட்டூ உலகில் பெரும் புரட்சியாக இருக்கலாம். இதில் டிசைனை ஏற்றிவிட்டால் அது அச்சு பிசராமல் தெளிவாக நாம் விரும்பும் டிசைனை கொண்டு வந்துவிடும். இதை யார் வேண்டுமானாலும் பயனபடுத்தலாம்.

© geekiegadgets

சீல் வைக்கும் கருவி!

சீல் வைக்கும் கருவி!

iTouchless எனப்படும் இந்த கையடக்க கருவி நாம் பிரித்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகளை மீண்டும் சீல் செய்ய உதவும். இதனால் காற்று புகாமலும், சீக்கிரம் உணவு தரம் இழக்காமல் அல்லது கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

© fancy.com

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Inventions That Will Soon Change the World!

Inventions That Will Soon Change the World!