இந்த ஒரு விஷயத்தில் அமெரிக்காவை தலைகுனியவைத்து, நிமிர்ந்து நிற்கிறது இந்தியா!

Posted By:
Subscribe to Boldsky

மனிதர்களாகிய நாம், நம்முடன் சேர்த்து மற்ற உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை அழித்து வருகிறோம் என்பது நாம் அறிந்தது தான்.

ஆனால், இது போல இயற்கையை தனக்காக அழித்து, அதன் பால் உண்டு, செரித்து, கழித்து மனிதன் வாழ்ந்து வந்தால்... இன்னும் ஒருசில தசாப்தங்கள் உருண்டோடிய பின்னர், மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா...?

If the Current Rate Continues, World Natural Resources Will Become Zero in 2050!

தன் வாழ்க்கை, உணவு, இருப்பிடம் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று ஆற்றுமணல் திருட்டில் துவங்கி மரங்களை வெட்டி, இயற்கை வளங்களை சீரழித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.

இப்படியே உலக மக்கள் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து வந்தால் 2050ல் இயற்கை வளங்கள் பூஜ்ஜியத்தில் வந்து நின்றுவிடும் என ஆராய்ச்சியாளர்கள் அபாய தகவலை வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்பாடு!

பயன்பாடு!

மனிதர்கள் இப்போதிருக்கும் இயற்கை வளங்களை தங்கள் பயன்பாட்டிற்காக சுரண்டிக் கொண்டே தான் வருகிறார்களே தவிர, அதற்கு மாற்றாக, அல்லது எதிர்காலத்திற்காக ஏதேனும் இயற்கை வளம் வளர, மேம்பட காரியங்கள் செய்கிறார்களா? என்பது பெரிய கேள்விக் குறி.

இதன் காரணத்தால் தான் இயற்கை வளங்கள் இன்னும் சில காலங்களில் முற்றிலும் அழிந்து போகும் என கூறுகிறார்கள்.

மனிதர்கள் எண்ணிக்கை!

மனிதர்கள் எண்ணிக்கை!

ஒரு சிறிய கணக்கு போட்டுப் பாருங்கள். உங்கள் வீட்டில் நால்வர் இருக்கிறார்கள். நீங்கள் நாற்பதாயிரம் சம்பாதிக்கிறீர்கள். அது வீட்டிற்கு போதுமானதாக இருக்கும். போதிய அளவு செலவு செய்து சேமிப்பும் செய்யலாம்.

அதே வீட்டில் நாளுக்கு நாள் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது, ஆனால், உங்கள் ஊதியம் பெருகவில்லை, யாரும் பெருக்கவும் உதவி செய்யவில்லை எனில்...? ஒருநாள் வீட்டில் ஒருவர் கூட உண்ண உணவு இல்லாமல் மடிந்து போவார்கள்.

இது தான் உலகின் மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் இயற்கை வளங்கள் சதவிதத்தில் நடந்து வருகிறது.

நாடுகள் வாரியாக!

நாடுகள் வாரியாக!

உலகில் உள்ள எல்லா நாட்டவரும் ஒரே மாதிரி இயற்கை வளங்களை அழிப்பதில்லை. இன்னும் வெளியுலகம் தெரியாத பழங்குடி மக்கள் இயற்கை வளங்களை பாதுகாத்து தான் வருகிறார்கள்.

இன்றைய நிலையில் மக்கள் பயன்படுத்தும் இயற்கை வளங்களை கொண்டு கணக்கிட்டு பார்த்தல், நமக்கு 1.7 பூமி தேவைப்படுகிறது. அதாவது, இன்று உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும், நீர், உணவு போன்ற இயற்கை வளங்கள் போதுமான அளவிற்கு இல்லை.

சுவிட்சர்லாந்து!

சுவிட்சர்லாந்து!

இப்போது சுவிட்சர்லாந்து மக்கள் இயற்கை வளங்களை பயன்படுத்தி வரும் சதவீதம் இப்படியே தொடர்ந்து வந்தால் 2050 நமக்கு 3 மூன்று பூமிகள் தேவைப்படும்.

அமெரிக்கர்கள் போல இயற்கை வளங்களை தீர்த்து வந்தால் 5 பூமிகள் தேவைப்படும். இதுவேஇந்தியர்கள் போல வாழ்ந்து வந்தால் 0.6 அளவு பூமிய போதும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எப்படி இருக்கும் 2050?

எப்படி இருக்கும் 2050?

2050-க்குள் ஆர்டிஃபிஸியல் இன்டலிஜென்ஸ் வந்திருக்க கூடும். வேலையாட்களாக பணிபுரிய துவங்கிய ரோபோக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களின் கட்டளைகளை மீறி நடக்கும் வாய்ப்புகள் துவங்கலாம்.

பஞ்சத்தில் வீழ்ந்துக் கிடக்கும் ஆப்ரிக்காவை போல உலகின் பெரும்பாலான நாடுகள் ஒருவாய் சோறு என்பதை தாண்டி, கொஞ்சம் தாகம் தீர்க்க நீராவது கிடைக்குமா என்ற நிலைக்கு தள்ளப்படலாம்.

கதறி அழும் காட்சிகள்!

கதறி அழும் காட்சிகள்!

அச்சடித்த நோட்டுக்களை கட்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு ஒரு வேளை உணவிற்கு மக்கள் கதறி அழும் காட்சிகள் அரங்கேறலாம்.

இயற்கை, நமக்கு கிடைத்த பரிசு அல்ல. இயற்கையில் இருந்து பிரிந்து பிறந்து வந்தவர்கள் நாம். தாயின் கருவறையை கத்திக் கொண்டு கிழித்தெறிவது எவ்வளவு பெரிய பாவச்செயலோ... அதே அளவிலான பாவத்தை தான் நாம் பூமிக்கு செய்து வருகிறோம்.

நமது வசதிக்கு ஏற்ப பூமியை மாற்ற எண்ணி, நமக்கு நாமே கடைசியில் ஒரு சவப்பெட்டி ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If the Current Rate Continues, World Natural Resources Will Become Zero in 2050!

If the Current Rate Continues, World Natural Resources Will Become Zero in 2050!