For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீர் யோகா பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதை செய்ய நீங்க ரெடியா?

இங்கு பீர் யோகா பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

என்ன நண்பர்களே! கட்டுரையின் தலைப்பைப் படித்து விட்டு, இது சரியான தலைப்பு தானா என்ற சந்தேகம் எழுகிறதா? ஆம், நீங்கள் படித்தது சரி தான். தற்போது பீர் யோகா மிகவும் ட்ரெட்ண்ட்டாக உள்ளது. இந்த வகையான யோகா பீர் குடிப்போருக்கும், உடற்பயிற்சியை வெறுப்போருக்கும் ஏற்றதாக இருக்கும்.

குறிப்பாக பீரை விரும்பி குடிப்போருக்கு நிச்சயம் இந்த யோகா பிடித்தமானதாக இருக்கும். பீரைக் குடித்துக் கொண்டே யோகா செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சொல்லும் போதே பிரமாதமாக உள்ளதா?

சரி, இப்போது பீர் யோகா என்றால் என்னவென்றும், அதுக் குறித்த சில தகவல்களையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர் யோகா என்றால் என்ன?

பீர் யோகா என்றால் என்ன?

பீர் யோகா என்பது வேறொன்றும் இல்லை, பீர் பாட்டிலை தலையில் வைத்துக் கொண்டு செய்வதாகும். இப்படி பீர் பாட்டிலை தலையில் வைத்துக் கொண்டு யோகா செய்யும் போது, சிறிது பீரைக் குடிக்க வேண்டும். இது உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்ய பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழைய தெரபியாகும்.

யோகாவின் போது ஏன் பீர்?

யோகாவின் போது ஏன் பீர்?

பீரின் நன்மைகளைப் பற்றி நிபுணர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். பீரில் என்ன தான் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

பீர் யோகா செய்வது எப்படி?

பீர் யோகா செய்வது எப்படி?

முதலில் சிறிது பீரைக் குடித்து விட்டு, பின் யோகாசனங்களை அந்த பாட்டில் கொண்டு செய்ய வேண்டும். இப்படி குடித்துக் கொண்டு யோகா பயிற்சி செய்வது வேடிக்கையாக இருப்பதோடு, ஒருமுறையாவது இதை முயற்சிக்க வேண்டுமென்ற எண்ணத்தை வரவழைக்கும்.

யார் இந்த பீர் யோகாவை செய்யலாம்?

யார் இந்த பீர் யோகாவை செய்யலாம்?

பீர் யோகாவை பீர் பிரியர்கள் மற்றும் யோகா பிரியர்கள் என்று யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். ஆனால் இந்த யோகாவை மேற்கொள்ள சரியான வயது மிகவும் முக்கியம். சிறு வயதினர் இந்த யோகாவை செய்வதற்கு ஏற்றதல்ல.

நண்பர்களை அதிகரிக்க ஓர் சுவாரஸ்ய வழி

நண்பர்களை அதிகரிக்க ஓர் சுவாரஸ்ய வழி

இது யோகா நிலையத்தில் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு எளிய வழி. இந்த யோகாவில் பயன்படுத்தப்படும் ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது பாட்டில், ஒருவரது மனதை ஒருநிலைப்படுத்தும் திறனை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Have You Tried Beer Yoga Yet?

Beer Yoga is the latest trending thing that you would come across. Check out the benefits of trying beer yoga!
Story first published: Friday, February 3, 2017, 13:34 [IST]
Desktop Bottom Promotion