நீங்க இதுவரை அறியாத மனித உடலை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது உலகில் மிகவும் கடினமாக, முழுமையாக அறிந்துக் கொள்ள முடியாத மெக்கானிசம் என்றால் அது நமது உடல் தான். நமது உடலை பற்றியும், அதன் இயக்கத்தை பற்றியும் யாரும் நூறு சதவீதம் அறிந்தது இல்லை.

Fascinating Facts about the Human Body You Never Knew about!

Image Courtesy

நாம் அறியாத, ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுப்பிடிக்காத பல வியக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விழி வெண் படலம்!

விழி வெண் படலம்!

விழி வெண் படலத்தில் இரத்த நாளங்கள் இல்லை. இது காற்றில் இருந்து ஆக்சிஜன் பெறுகிறது. நமது உடலிலேயே விழி வெண் படலம் மட்டும் தான் இவ்வாறு இயங்குகிறது.

மூளை!

மூளை!

மனித உடலில் இருக்கும் நியூரான்கள் ஒன்றிணைந்து இயங்கும் போது மில்லியன் ஜி.பி கம்பியூட்டர் ஸ்டோரேஜ்-க்கு இணையானதாக விளங்குகிறது.

உடலில் இருக்கும் 25% ஆக்சிஜன் மூளைக்கு தான் செல்கிறது.

பிறந்த குழந்தை!

பிறந்த குழந்தை!

பிறந்த குழந்தையால் ஒரே நேரத்தில் குடிக்கவும் முடியும், மூச்சுவிடவும் முடியும். இது தாய்ப்பாலூட்ட பயனாக இருக்கும்.

ஸ்கல்!

ஸ்கல்!

மண்டை ஓட்டில் மட்டுமே 22 எலும்புகள் இருக்கின்றன.

நர்வ் இம்பல்ஸ்!

நர்வ் இம்பல்ஸ்!

மூளையில் இருந்து அனுப்பப்படும் நர்வ் இம்பல்ஸ்-களின் வேகம் மணிக்கு 274 கிலோமீட்டர் வேகம் ஆகும்.

இதயம், இரத்தம்!

இதயம், இரத்தம்!

இதயம் சராசரியாக நமது வாழ்நாளில் 228 மில்லியன் லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது.

முப்பதாவது வயதிற்குள் உங்கள் இதயம் நூறுகோடி முறை துடித்திருக்கும்.

தொப்புள்!

தொப்புள்!

தொப்புளின் அறிவியல் பெயர் "Umbilicus"

மெலனின்!

மெலனின்!

மனிதர்கள் மத்தியில் சரும நிற வேறுபாடு இருப்பதற்கு காரணம் மெலனின். இது தான் ஒருவரது சருமத்தை கருமை, வெண்மை என ஆக்குகிறது.

காது!

காது!

மனித உடலிலேயே சிறிய எலும்பு காதில் தான் இருக்கிறது. காதில் இருக்கும் Stirrup Bone-ன் நீளம் வெறும் 2.8 மி.மி தான்.

நமது காது மற்றும் மூக்கின் வளர்ச்சி எப்போதும் நிற்காது.

நாக்கு!

நாக்கு!

கைரேகை போல, எல்லாருக்கும் நாக்கு ரேகை இருக்கிறது. நாக்கின் அச்சு எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

பற்கள்!

பற்கள்!

பற்கள் தானாக, அவையாக அவைக்கு உண்டாகும் கோளாறுகளை சரி செய்துக் கொள்ளாது.

முடி!

முடி!

வாழ்நாள் முழுக்க நீங்கள் முடியை வெட்டாமல் வளர்த்துக் கொண்டே வந்தால், சராசரியாக நாற்பது அடி நீளம் வரை கூந்தல் வளரும்.

பாக்டீரியா!

பாக்டீரியா!

மனித உடலில் தேங்கியிருக்கும் பாக்டீரியாக்களை மொத்தமாக கூட்டினால் 200கிராம் அளவிற்கு இருக்கும். இது ஒரு சோப்பு கட்டியின் எடை கொண்டிருக்கும்.

நமது வாயில் 700 விதமான பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்றும். அதில் பாதிக்கும் மேற்ப்பட்ட பாக்டீரியாக்கள் பற்றி முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கால்சியம்!

கால்சியம்!

மனித உடலில் 99% கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளில் தான் இருக்கிறது

கற்பு!

கற்பு!

"Parthenophobia" எனும் அச்சப்பாடு கற்பு பற்றியது ஆகும்.

முத்தம்!

முத்தம்!

முத்தம் கொடுப்பது பற்சிதைவு உண்டாகாமல் பாதுகாக்கிறது.

கண் இமைப்பது!

கண் இமைப்பது!

கண்களை இமைப்பது, நீங்கள் மூளைக்கு தரும் ஒருவகை ஓய்வாகும். கண்ணிமைக்காமல் வேலை செய்தால் மூளை சோர்வடைந்துவிடும்.

நீலநிற கண்கள் கொண்டுள்ளவர்களுக்கு வலி குறைவாக தான் ஏற்படுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fascinating Facts about the Human Body You Never Knew about!

Fascinating Facts about the Human Body You Never Knew about!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter