மிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகம் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பாம்புகளை நாம் படங்களில், வனவிலங்கு பூங்காக்களில் தான் அதிகம் கண்டிருப்போம். அதிலும் படம் எடுத்து ஆடும் பாம்புகளை காண்பது மிகவும் அரிது. பாம்புகள் கூடுதலை காண்பது கூடாது என்றும், படம் எடுக்க கூடாது என்றும் கூறுவதை நாம் செவிவழி செய்தியில் கேட்டிருப்போம்.

பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்டது கோப்ரா வகை, இது ஆப்ரிக்காவில் அதிகம் வாழ்கின்றன என கூறப்படுகிறது. ஆனால், ஆசியாவில் அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம். இவை மிக நீளமாக இருக்கும், தமிழகத்தின் ஒருசில பகுதியில் இவை வாழ்ந்து வருகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழகத்தில்!

தமிழகத்தில்!

மிகவும் விஷத்தன்மை கொண்டதாக காணப்படும் இந்த ராஜ நாகம். மிக அரிதாக தான் கண்களில் படும். தமிழகத்தில் ராஜ பாளையும், சதுரகிரி மலை, நாகர்கோயில், மற்றும் மாஞ்சோலை காடு பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன.

தெற்காசிய!

தெற்காசிய!

ராஜ நாகம் தெற்காசிய பாம்பு வகையாகும். தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக ராஜ நாகம் காணப்படு கிறது. ராஜ நாகம் பொதுவாக 18 அடி நீளம் வரை இருக்கும்.

முட்டை!

முட்டை!

கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்டு ஒரே பாம்பு வகை ராஜ நாகம் தான். ராஜனாகத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். மூங்கில் காடுகள் பகுதியில் ராஜநாகம் அதிகமாக வாழ்கின்றன.

விஷத்தன்மை!

விஷத்தன்மை!

மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் இராஜனாகத்தின் விஷத்தன்மை மிகவும் வீரியமானது. ஒரு மனிதரை கடித்த 60 நொடியில் கொல்லும் தன்மையும், யானையை கடித்த 20 நிமிடத்தில் கொல்லும் விஷத்தன்மையும் கொண்டுள்ளது ராஜநாகம்.

படம் எடுத்தல்!

படம் எடுத்தல்!

தனது நீளத்தில் பாதிக்கும் மேல் உயர்த்தி படம் எடுத்து காட்டும் திறன் கொண்டுள்ளது ராஜநாகம். பிற பாம்புகள் எலி, பல்லி, போன்ற உயிரினங்களை கொன்று தின்னும் பழக்கம் இருக்கையில், ராஜநாகம் மட்டும் தன் இன பிற பாம்புகளை கொன்று தின்னும் பழக்கம் கொண்டுள்ளது.

ஆராய்ச்சி!

ஆராய்ச்சி!

இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தான் இப்போது ராஜநாகம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் ராஜபாளையம் வன பகுதியில் இருக்கும் ராஜநாகம் பற்றி ஆய்வு செய்ய வனத்துறை அனுமதி அளித்தால் சிறப்பாக இருக்கும்.

இப்பகுதியில் இருக்கும் ராஜநாகம் 20 முதல் 25 அடி நீளமும், 5 - 7 அடி உயரம் படம் எடுக்கும் தன்மையும் கொண்டிருக்கின்றன. என ஆய்வாளர் கூறுகிறார்.

பிற பாம்புகள்!

பிற பாம்புகள்!

நாக பாம்பு, கண்ணாடி பாம்பு, கட்டு விரியன் போன்ற பாம்புகளும் மனிதரை கொல்லும் விஷத்தன்மை கொண்டிருக்கின்றன. இவை 4-5 மில்லி விஷம் கொண்டிருக்கிறது என்றால், ராஜநாகம் 7-12 மில்லி அளவு விஷம் கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts to Know About Raja Nagam!

Facts to Know About Raja Nagam!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter