உங்க கைல இந்த மாதிரி ரேகை இருக்கா? அப்ப பணம் கொட்டோக் கொட்டுன்னு கொட்டும்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த திரிசூலம் போன்ற குறியுடைய ரேகை ஒருவரது கையில் இருந்தால் மிகவும் ராசியானவர் என கூறப்படுகிறது. இந்த மூன்று கூர்மையான கோடுகள் இணைந்துள்ள ரேகையை ஆங்கிலத்தில் Trident என கூறுகிறார்கள்.

இந்த ரேகை இருப்பவரது வாழ்வில் செல்வம் கொட்டும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இதன் மூலம் அடையும் ஆன்மீக பலனால் ஆரோக்கியமான வாழ்க்கை பெறுவார்கள், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த திரிசூலம் போன்ற ரேகை கையில் எங்கெங்கே இருந்தால், என்னன்னா பலன்கள் கூறப்படுகிறது என இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுக்கிர மேடு!

சுக்கிர மேடு!

இந்த திரிசூல ரேகை சுக்கிர மேட்டில் காணப்பட்டால், அவர் காதல் வாழ்வில் மிகவும் லக்கியான நபராக கருதப்படுகிறார். அதே நேரத்தில் அவர் மற்ற நபர்களை எளிதாக புரிந்து வைத்துக் கொள்வார் என்றும் கூறுகிறார்கள். தன்னை சுற்றி நல்ல விஷயங்களை பாராட்ட தயங்காத நபராகவும் இருப்பார்.

செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் ரேகை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவே இந்த ரேகை அமைந்திருந்தால் அவர்களது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமானதாக அமையும். அவர்கள் செய்யும் தொழில், வேலையில் சிறந்து காணப்படுவார்கள்.

அதுவே அதற்கு நேர் எதிர் பக்கம் சுண்டு விரலுக்கு கீழ் அமைந்திருந்தால் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தாலும், அவ்வப்போது வாழ்வில் தொல்லைகள் வந்துக் கொண்டே இருக்கும்.

புத்தி!

புத்தி!

புத்தி ரேகையில் இந்த திரிசூல ரேகை அமைந்திருந்தால், அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் வேலை, தொழில் செம்மையாக அமையும். வெற்றிப்பாதையில் செல்லும். இவர்களின் பேச்சு திறன் இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.

சந்திர மேடு!

சந்திர மேடு!

சந்திர மேட்டில் இந்த திரிசூல ரேகை அமைந்திருந்தால் அவர்கள் கற்பனை மற்றும் செயற்திறனில் மேம்பட்டு காணப்படுவார்கள். மேலும், இவர்கள் இயற்கையாகவே மிக ரொமாண்டிக்கான நபராக இருப்பார்கள்.

இதய ரேகை!

இதய ரேகை!

இவர்கள் உணர்வு ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக மிகவும் வலிமையான நபராக இருப்பார்கள். இவர்கள் இந்த அனைத்திலும் சமநிலையில் இருப்பார்கள். இவர்களிடம் செல்வம் வந்து சென்று கொண்டே இருக்கும்.

விதி!

விதி!

விதி ரேகையில் திரிசூல அமைப்பு இருப்பது, தெள்ளத்தெளிவாக, அந்நபரின் வாழ்க்கை வெற்றிகரமாகவும், பணத்திற்கு பஞ்சம் இல்லாமலும் இருக்க செய்யும் என்பதை குறிக்கிறதாம். இவர்கள் நிலம் சார்ந்த தொழிலில் சிறந்து விளங்க வாய்ப்புகள் உள்ளன.

புதன்!

புதன்!

இந்த திரிசூல அமைப்பு புதன் ரேகையில் அமைந்திருந்தா அவர்கள் தங்கள் நிலையில் இருந்து மேம்பட வாய்ப்புகள் உண்டு. பிரமோஷன், தொழில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது, புதிய கிளைகள் துவங்குவது என நல்லவை நடக்கும். தங்கள் பேச்சு திறனால் பார்வையாளர்கள், கஸ்டமர்களை எளிதாக ஈர்த்துவிடுவார்கள்.

குரு!

குரு!

குரு பகுதியில் திரிசூல ரேகை அமைப்பு இருந்தால் அவர்கள் வெற்றி பெறுவது மட்டுமின்றி, அதற்கான சிறந்த அங்கீகாரமும் பெறுவார்கள். இவர்களது இலட்சியங்கள் நிறைவேறும். தலைமை பொறுப்பு இவர்களை தேடி வரும்.

சனி!

சனி!

இவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களை வைத்து பொருளீட்டுவது எளிது. செல்வம் என்பதை தாண்டி, சிறப்பான முறையில் வெற்றிகளை குவிக்கும் நபர்களாகவும் இருப்பார்கள். தங்கள் பொறுமை மற்றும் கடின உழைப்பால் அனைத்தையும் சாத்தியம் ஆக்குவார்கள்.

சூரியன்!

சூரியன்!

சூரிய ரேகையில் இந்த திரிசூலம் அமைப்பு பெற்றிருந்தால் அவர்கள் வெற்றி, செல்வம் என்பதை தாண்டி அதிக புகழ் பெற்று திகழ்வார்கள். கைரேகைகளில் இந்தஸ் திரிசூல ரேகை மிகவும் அதிர்ஷ்டம் தரும் ரேகையாக காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Have a Trident Sign on Your Hand?

Do You Have a Trident Sign on Your Hand?