இந்த கிராமத்திற்கு சென்ற யாரும் உயிருடன் திரும்பியது இல்லை!

Posted By:
Subscribe to Boldsky

நாம் இதுவரை தமிழ் போல்ட்ஸ்கையில் பல விசித்திரமான, மர்மங்கள் நிறைந்த உலக இடங்களை பற்றி படித்திருக்கிறோம். அந்த வரிசையில் இது செல்வோரை எல்லாம் பலிகடாவாக்கும் திகிலூட்டும் கிராமம்.

இந்த கிராமத்திற்கு சென்ற யாரும் உயிருடன் திரும்பியதே இல்லை. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, இதை பற்றி ஆராய சென்ற ஆய்வாளர்களாக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் ஒரே கதி தான்.

ரஷ்யாவில் இருக்கும் இந்த இடத்திற்கு இந்த மர்ம காரணத்தினால் யாரும் செல்வதே இல்லையாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வாளர்கள்!

ஆய்வாளர்கள்!

இந்த இடத்தை பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள், இந்த இடத்திற்கு சென்ற யாரும் உயிருடன் திரும்பியதே இல்லை.

இதனால் இந்த இடத்தை 'சிட்டி ஆப் டெட்' என அழைக்கின்றனர் என குறிப்பிடுகின்றனர். உலகின் மர்மம் நிறைந்த இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

ரஷ்யா!

ரஷ்யா!

தனித்துவிடப்பட்ட இந்த இடம் ரஷ்யாவின் வடக்கு ஒசேத்தியா எனும் பகுதியில் இருக்கும் தர்கவ்ஸ் (Dargavs) எனும் கிராமமாகும். இங்கே இறந்தவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் பிணமாக, எலும்புக் கூடுகளாக. இங்கே ஐந்து மலைகள் இருக்கின்றன. மலை கற்கள் கொண்டு கட்டப்பட்ட பல குடிசைகளும் இங்கே இருக்கின்றன.

மரணத்தின் நகரம்!

மரணத்தின் நகரம்!

தொலைவில் இருந்து காண அழகான, ரம்மியமான இடமாக இருப்பினும், இந்த கிராமத்தில் வெறும் பிணங்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றன. மேலும், உள்ளூர் மக்கள் அவர்களது உறவினர் பிணங்களை இங்கே உள்ள குடில்களில் வைத்துவிட்டு செல்கின்றனர் என ஒரு அரசல்புரசலான தகவல்கள் அங்கே பரவி வருகிறது. அது உண்மை என்றும் கருதுகின்றனர்.

மர்மம்!

மர்மம்!

இந்த கிராமத்தில் ஐந்து மலைகள் இருக்கிறது. இங்கே நான்கு மாடிகள் இருக்கும் வரையிலான கட்டிடங்களும் இருக்கிறது. அதே போல, நிறைய வீடுகளில் மர்மமாக வீட்டின் அடி பகுதியில் அண்டர்கிரவுண்ட் பகுதிகளும் இருக்கிறது.

பிணக்காடு!

பிணக்காடு!

எல்லா தளங்களிலும், எல்லா இடங்ளிலும் பிணங்களாக குவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கிராமத்தில் 99 கட்டிடங்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் பிணங்கள் மட்டுமே இருக்கின்றன. இது 16 நூற்றாண்டில் இருந்து கடைப்பிடித்து வரும் வழக்கமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் வாசிகள்!

உள்ளூர் வாசிகள்!

உள்ளூரை சேர்ந்தவர்கள், இந்த ஊர்களுக்கு யாரும் வருவதே இல்லை. இங்கே சுற்றுலா பயணிகள் கூட வந்ததாக நாங்கள் யாரும் கண்டதில்லை என கூறுகிறார்கள். இதற்கு காரணமாக இருப்பது மக்கள் மத்தியில் இருக்கும் அந்த அச்சம் தான்.

எங்கே சென்றால் உயிருடன் திரும்ப முடியாதோ என அஞ்சுகின்றனர். மேலும், இந்த கிராமத்தில் அடிக்கடி வானிலை மாறிக் கொண்டே இருப்பதும் இங்கே யாரும் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

விசித்திரம்!

விசித்திரம்!

18 நூற்றாண்டில் இங்கே குடும்பத்தில் உள்ள நோய்வாய்ப்பட்ட முடியாத நபர்களை அழைத்து வந்து உணவு, தேவையான பொருட்கள் கொடுத்து தங்க வைத்து சென்றனர்.

சீரான இடைவேளையில் வந்து பார்த்து செல்வார்கள். அவர்கள் இறக்கும் வரை இங்கேயே தான் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது என்ற விசித்திர கூற்று ஒன்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது.

வாழ்க்கை முறை!

வாழ்க்கை முறை!

இங்கே இருந்தவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறை பின்பற்றி வந்தனர், அவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், முழுமையாக ஏதும் அறியப்படவில்லை.

மரண படகுகள்!

மரண படகுகள்!

இங்கே இருந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களை படகு போன்ற சவப்பெட்டியில் வைத்து புதைத்துவிடுவார்கள். இதன் மூலமாக அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என இவர்கள் நம்பி வந்துள்ளனர்.

கிணறு!

கிணறு!

மேலும், புதைக்கப்பட்ட அண்டர்கிரவுண்ட் பகுதியில் கிணறு போன்ற குழியும் இருந்துள்ளது. அதில் காசுகள் போடும் வழக்கம் இருந்துள்ளது.

காசு விழும் சப்தம் கேட்கும் போது அவர்கள் சொர்க்கம் அடைந்திருப்பார்கள் என நம்பி வந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mysterious Village From Where Nobody Returns Alive

Mysterious Village From Where Nobody Returns Alive