அட! முதலாம் உலகப் போரில் மனிதர்ளுக்கு இணையாக சண்டைக்கட்டிய குரங்கு!

Posted By:
Subscribe to Boldsky

ஜாக்கி என்றால் அனைவருக்கும் ஜாக்கி சான் தான் நினைவிற்கு வருவார். இதை படித்தால் உங்களுக்கு இனிமேல் ஜாக்கி தி பபூன் எனும் குரங்கு தான் நினைவிற்கு வரும். ஆம்! ஜாக்கி சாதாரண குரங்கல்ல. இது முதலாம் உலக போரில் பங்கெடுத்து மனிதர்களுக்கு இணையாக சண்டை கட்டிய குரங்கு.

ஜாக்கிக்கு தனி யூனிபார்ம், பேட்ச் எண் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் மற்ற இராணுவ வீரர்கள் ஜாக்கியை ஒதுக்கினார்கள். ஜாக்கி அங்கே வெறுமென சாப்பிட தான் இருந்தது என எண்ணியவர்கள் எல்லாம் முட்டாளாகினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சல்யூட்!

சல்யூட்!

தனது உயர் அதிகாரி யாரேனும் தன்னை கடந்து சென்றால் ஜாக்கி எழுந்து நின்று மற்ற வீரர்களை போல சல்யூட் வைக்கும். தனது படை வீரர்கள் சிகரட் பிடிக்கும் போது பற்றவைத்து கொடுத்து உதவி நட்பு பாராட்டும் ஜாக்கி. ஜாக்கி சப்தத்தை கேட்பதிலும், ஏதேனும் புது வாடையை நுகர்ந்து கண்டுபிடிப்பதிலும் கெட்டிக்காரன்.

இந்த இரண்டு சிறப்புமிக்க தன்மைகளுக்காக தான் ஜாக்கியை இராணுவத்தில் சேர்த்துள்ளனர். எகிப்தியில் நடந்த சண்டையின் போது, ஜாக்கியை படையில் சேர்த்த அல்பர்ட் மார் என்பவருக்கு குண்டடிப்பட்டது. மற்ற வீரர்கள் ஆல்பர்ட்டை கண்டுபிடித்து உதவ வரும் வரை அவருடனே இருந்து அவரை காப்பாற்றியது ஜாக்கி. அடிப்பட்ட இடத்தில் தனது நாவால் தடவிக் கொடுத்து அவரை சௌகரியமாக உணர செய்துள்ளான் ஜாக்கி.

Image Source: WildLifeTV

பதவி உயர்வு!

பதவி உயர்வு!

ஏப்ரல் 1918ல் ஒரு சண்டை. பெரிய தீவிபத்து ஏற்பட்டுவிட்டது. அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கற்கள் கொண்டு பெரிய தடுப்பை எழுப்பி வீரர்ககளை காப்பாற்றியுள்ளான் ஜாக்கி. இந்த நிகழ்வின் போது சிறிய விபத்து ஏற்பட்டு வலது காலில் காயம் அடைந்தான் ஜாக்கி.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஜாக்கிற்கு பதவி உயர்வு மட்டும் மெடல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில சண்டைகளில் ஈடுபட்ட ஜாக்கி, பிறகு படையில் இருந்து ஓய்வு பெற்று ஆல்பர்ட் மாரின் பண்ணையில் ஓய்வெடுத்து வந்தான்.

இதே போல வரலாற்றில் பல விலங்குகள் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவை எல்லாம் வெறும் பங்களிப்பு தான் தந்தன. ஜாக்கி வீரர்களை போல போரில் ஈடுபட்டான்...

Image Source: WildLifeTV

மத்திய கிழக்கு நாடுகள்!

மத்திய கிழக்கு நாடுகள்!

மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகள் மூலம் வெடிகுண்டுகளை பரப்பி வெடிக்க செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. ஏதேனும் விலங்கின் உடலுக்குள் வெடிக் குண்டை பொருத்தி, அதை எந்த பகுதியில் வெடிக்க செய்ய வேண்டுமோ, அங்கே அனுப்பி விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவுடன் அந்த குண்டுகளை வெடிக்க செய்கிறார்கள். கிட்டத்தட்ட தற்கொலை படை தாக்குதல் போன்றதுதான் இது. இதை மாடர்ன் டைப் சூசைட் அட்டம்ப்ட் என்றும் கூறுகிறார்கள்.

வவ்வால் குண்டு!

வவ்வால் குண்டு!

மெக்ஸிகோவை சேர்ந்த ஒரு சிறிய வகை வவ்வால் இனத்தை பயன்படுத்தி, அதன் மூலம் சிறய அளவில் தீவிபத்தை ஏற்படுத்தும் அளவிலான வெடிகுண்டுகள் ஏந்தி செல்ல வைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் ஒருமுறை பயிற்சி மேற்கொண்டது.

பிராஜக்ட் புறா!

பிராஜக்ட் புறா!

இதை நாம் விஸ்வரூபம் படத்திலும் கண்டுள்ளோம். ஆனால், அமெரிக்க இதை இரண்டாம் உலக போரின் போதே பயன்படுத்தியுள்ளது. ஆம்! புறாக்கள் மூலம் கைடு செய்யப்பட்டு வெடி குண்டை எங்கே வெடிக்க செய்ய வேண்டும் என அமெரிக்கா தகவல் அனுப்பியுள்ளது.

ஆண்டி-டான்க் நாய்கள்!

ஆண்டி-டான்க் நாய்கள்!

ஆண்டி-டான்க் நாய்கள் (Anti-Tank Dogs), என்பது ஆயுதம் ஏங்கிய வாகனங்களை எப்படி ஆப்ரேட் செய்ய வேண்டும் என நாய்களுக்கு கற்பித்து அவைகளை போர் களத்தில் இறக்கி விடுவதாகும்.

பீரங்கி போன்ற வெடிகுண்டு தாங்கி செல்லும் வாகனங்களை எப்படி கையாள வேண்டும் என சோவியத் மற்றும் ரஷ்ய இராணுவம் நாய்களுக்கு கற்பித்து இரண்டாம் உலக போரில் சண்டைக்கு பயன்படுத்தியுள்ளன.

சிங்கம்!

சிங்கம்!

எகிப்தை சேர்ந்த ராமேஸ் II அன்றழைக்கப்பட்ட ராமேஸ் தி கிரேட் என்ற மன்னன் காதேஷ் போரில் (Battle of Kadesh) தான் ஆசையாக வளர்த்த சிங்கத்தை சண்டையிட வைத்துள்ளான். தன்னுடன் தான் வளர்த்த சிங்கத்தை கொண்டு இவர் போருக்கு வருவதை கண்டு எதிரி படை அச்சம் கொண்டதாம்.

பன்றிகள்!

பன்றிகள்!

பிளேனி தி எல்டர் என்பவர் ரோமனை சேர்ந்த எழுத்தாளர், இயற்கை ஆர்வலர் மற்றும் தத்துவவாதி ஆவார். இதற்கு எல்லாம் மேல், தனது இளமை காலத்தில் ரோம கப்பற்படை மற்றும் இராணுவ படை தளபதியாக இருந்தவர்.

இவர் தனது புத்தகம் ஒன்றில், போரில் யானைகளை விரட்ட, அச்சமடைய வைக்க போர் பன்றிகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். இதற்காகவே பன்றிகளுக்கு தனியாக பயிற்சி அளித்துள்ளனர். யானைகள் கூட்டமாக பன்றிகள் வருவதைக் கண்டால் அச்சம் கொள்ளும் என இவர் குறிப்பிட்டுள்ளார்.

நாய்கள்!

நாய்கள்!

பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் நாய்களை போருக்காக பயன்படுத்தி வந்துள்ளன. ரோமர்கள் மொலோசியன் எனும் வகை நாய்களை போர் களத்தில் பயன்படுத்தியுள்ளனர். லத்தின் அமெரிக்கா, ஸ்பானிஷ் போன்ற படைகள் கரீபியன், மெக்ஸிகோ, பெரு போன்ற நாடுகளிலும் எதிர் நாட்டு படை வீரர்களை நிலைகுலைய செய்ய, கொல்ல நாய்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

எருதுகள்!

எருதுகள்!

பண்டைய ஐரோப்பா நாடுகளில் எருதுகளை போர் களத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், எதிர் நாடுகளின் மீது போருக்கு தயாராகி அந்த இடத்திற்கு செல்லும் போது, போர் கருவிகளை, ஆயுதங்களை சுமந்து செல்லும் எருதுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடமான்!

கடமான்!

கடமான் என்பது ஒரு பனிக் காட்டு மான் வகை விலங்காகும். இதை ஸ்வீடன் மற்றும் சோவியத் யூனியனில் போரில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால், குளிர்ந்த பகுதிகளில் வாழும் தன்மை கொண்ட இந்த விலங்கு, போர் களத்தில் பயன்படுத்த உகந்த உயிரினம் அல்ல என்று கூறுகிறார்கள். இது மிக எளிதாக நோய்வாய்ப்பட்டு போக வாய்ப்புகள் உள்ளன.

ஒட்டகம்!

ஒட்டகம்!

இப்படி ஒருசில விலங்குகள் போர்களத்தில் பயன்படுத்துவது வித்தியாசமாக நாம் காண்பது போல, இந்தயாவில் ராஜஸ்தான் பகுதியில் ஒட்டகங்களை போரில் பயன்படுத்தியது வெளிநாட்டு காரர்களுக்கு வித்தியாசமாக படுகிறது. பாலைவனம் பகுதியில் குதிரை அல்லது யானைகளை பயன்படுத்துவது சாத்தியமற்றது. உலக போர் காலத்தில் பாலைவன பகுதியில் சண்டையிட ஒட்டகங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்தில் கூட பாலைவன எல்லை பகுதிகளில் ஒட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Animals That has Been Used in World War and Military!

Animals That has Been Used in World War and Military!
Subscribe Newsletter