தெரிந்த இந்திய நடிகைகளின், தெரியாத மறுபக்கம்!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரிடமும் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திறமைகள் இருக்கும். ஆனால், காலம், சூழல், வாய்ப்புகள் போன்ற காரணத்தால் நாம் எதையோ என்றாய் கெட்டியாக பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருப்போம்.

பல பிரபலங்கள் உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் பெரிய, பெரிய படிப்புகளை எல்லாம் படித்துவிட்டு சினிமா துறைகளில் நுழைந்துள்ளதை பார்க்கும் போது சற்றே ஆச்சரியாமாக தான் இருக்கிறது.

அந்த வகையில் நமக்கு மிகவும் பரீட்சயம் ஆன இந்திய நடிகைகளின் மறுப்பக்கம் என்ன என்பதை இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே நடிப்பில் மட்டுமின்றி, பேட்மிட்டன் விளையாட்டிலும் சிறந்த திறமை உள்ளவர். பிறகு புலிக்கு பிறந்தது எப்படி பூணையாகும்.

இவரது தந்தை பிரகசாஷ் படுகோனே உலக பேட்மிட்டன் சாம்பியன் அல்லவா. சினிமாவை தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவிற்காக கோப்பைகள் வாங்கி குவித்திருப்பார் தீபிகா.

ஹன்ஷிகா!

ஹன்ஷிகா!

குட்டி குஷ்பூ ஹன்ஷிகா, சிரிப்பதில் மட்டுமல்ல, மனதளவிலும் குழந்தை மனம் கொண்டவர் தான். இவர், வெளியுலகிற்கு தெரியாமல் அவ்வப்போது முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றை குழந்தைகளுக்கு உதவி புரிந்து வருகிறார்.

ஜூஹி சாவ்லா!

ஜூஹி சாவ்லா!

ஜூஹி சாவ்லா நடிப்பு மட்டுமின்றி, ஆறு வருடங்கள் இந்திய பாரம்பரிய இசையையும் கற்றுள்ளார். இவர் பஞ்சாபி பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி அஜித்!

ஷாலினி அஜித்!

பெரும்பாலானோர் அறிந்த விஷயம் தான். ஷாலினி தமிழக அளவில் பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் நிறைய கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வென்றுள்ளார். நடிகையாகிய பிறகும், திருமணத்திற்கு பிறகும் கூட இவர் தொடர்ந்து பேட்மிட்டன் விளையாடிக் கொண்டுதான் இருந்தார்.

சோனம் கபூர்!

சோனம் கபூர்!

தென்னாப்பிரிக்காவின் யுனைடட் வேர்ல்ட் கல்லூரியில் சர்வதேச இளங்கலை பட்டம் முடித்த சோனம் கபூர், மும்பை பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் படித்தவர்.

அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவ்வப்போது பத்திரிக்கைகளில் கெஸ்ட் ரைட்டராக கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

ஜெனிலியா!

ஜெனிலியா!

பல முகங்கள் கொண்ட ஜெனிலியாவின் ஒரு முகம் தான் நாயகி. இவர் மேலாண்மை கல்வி பயின்றுக் கொண்டிருக்கும் போதே விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் மாநில அளவில் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீத்தி சிந்தா!

ப்ரீத்தி சிந்தா!

உளவியல் கல்வியில், பாடத்தில் அதிக நாட்டம் மற்றும் அறிவுடையவர் ப்ரீத்தி சிந்தா. இது மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் மனதை அறிவதை கொண்ட படிப்பான கிரிமினல் சைக்காலஜி இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்.

பரினீதி சோப்ரா!

பரினீதி சோப்ரா!

பாலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாக் நடிகை பரினீதி சோப்ரா நிதி மேலாண்மை பயின்றவர். இவர் இங்கிலாந்தின் மேன்செச்டார் பிஸினஸ் பள்ளியில் வணிகம், நிதி, பொருளாதாரம் ஆகிய மூன்று துறைகளில் பட்டம் பெற்றவர்.

அமீஷா படேல்!

அமீஷா படேல்!

டஃட்ஸ் யூனிவர்சிட்டி ஆப் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் அமீஷா படேல் பொருளாதாரத்தில் கோல்ட் மெடல் பெற்றவர் ஆவார். மும்பையில் உள்ள கண்ட்வாலா செக்யூரிடிஸ் லிமிட்டட் எனும் வங்கியில் பொருளாதார ஆய்வாளராக அமீஷா பணியாற்றியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Well Known Indian Actresses

Unknown Facts About Well Known Indian Actresses
Story first published: Wednesday, October 19, 2016, 12:15 [IST]
Subscribe Newsletter