Latest Updates
-
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
WWE சூப்பர்ஸ்டார்களின் உருவ மாற்றங்களும், உண்மை பெயரும்!
புகழுக்காகவும், ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் WWE சூப்பர்ஸ்டார்கள் பலர் தங்களது தோற்றத்தை மாற்றிக் கொண்டனர். இதில் கேன், கோல்டஸ்ட், ட்ரிப்பில் எச் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும், அன்டர்டேக்கர் எல்லாம் வேற லெவல்.
இதையும் படிங்க: WWE சூப்பர்ஸ்டார்களின் எதிர்பாராத மரணங்கள்!
பல பூச்சாண்டி வேலைகள் காண்பித்து ரசிகர்களை ஈர்த்து, பயமுறுத்தி, தான் பலமுறை இறந்து உயிர்பெற்று வந்தவன், என நம்ப வைத்த ஜாம்பவான் அண்டர்டேக்கர். இனி, தங்கள் முகத்தில் சில பல பட்டி-டிங்கரிக் வேலைபாடுகள் செய்து பிரபலமான WWE சூப்பர்ஸ்டார்ஸ் பற்றி பார்க்கலாம்...

கேன்!
முகமுடி அணிந்து வந்து அனைவரையும் பயமுறுத்தும் WWE-ன் பெரிய அச்சம் கொள்ள வைக்கும் வீரர்களில் இவரும் ஒருவர். இவரது உண்மை பெயர் கிளென் ஜேகப்ஸ்.

ட்ரிப்பில் எச்!
சுத்தியை கொண்டு வந்து மற்றவர் மண்டையை உடைத்ததை விட, இவரது மண்டை உடைபட்டு சென்றது தான் அதிகம். இவரது உண்மை பெயர் பால் லெவெஸ்க்.

தி ராக்!
WWE-வில் இருந்து இப்போது ஹாலிவுட்டிலும் கலக்கும் உச்ச நட்சத்திரம். ஆரம்பத்தில் சுருள்முடி எல்லாம் வைத்துக் கொண்டு காமெடியாக தான் இருந்தார். இவரது உண்மை பெயர் டுவைன் ஜான்சன்.

ஷான் மைக்கேல்ஸ்!
ரப்பர் போல வளைந்து, பறந்து, ஸ்டைல் காட்டி சண்டை போடும் நபர். இவரது உண்மை பெயர் மைக்கேல் ஷான் ஹிக்கன்பாட்டம்.

ஸ்டோன் கோல்ட்!
பீர் பாட்டில் குடிப்பதில் அசுரத்தனம் காட்டும் ஸ்டோன் கோல்டின் உண்மை பெயர் ஸ்டீவன் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

எட்ஜ்!
ஆரம்பத்தில் ஹீரோவாக இருந்தவர், கேன் இவருக்கு வில்லனாக, பிறகு லீட்டா உடன் சேர்ந்து முழுநேர வில்லனாக மாறினார். இவரது உண்மை பெயர் ஆடம் ஜோசப் கோப்லேண்ட்.

மைக்கேல் போலே!
பேஸ்பால் பேட் போன்ற ஒன்றில் முறுக்கு கம்பியை சுற்றிக் கொண்டு வந்து அடிக்கும் இவரது பாணி சற்று அபாயகரமானது ஆகும். இவரது உண்மை பெயர் மைக்கேல் பிரான்சிஸ் போலே.

ஸ்டீவ் ரிச்சர்டஸ்!
ஸ்டீவ் ரிச்சர்டஸ் ECE, WWF, WWE, TNA என பல மல்யுத்த அமைப்புகளில் பங்கேற்றுள்ளார். இவரது உண்மை பெயர் மைக்கேல் ஸ்டீபன் மன்னா.

கோல்டஸ்ட்!
கோல்டஸ்ட் என அழைக்கப்படும் இவரது உண்மை பெயர் டஸ்டின் பேட்ரிக் ரன்னெல்ஸ். தங்க நிற உடை அணிந்து, முகம் முழுக்க பெயின்ட் பூசிக் கொண்டு சற்றே விசித்திரமான தோற்றத்தில் வந்துக் கொண்டிருந்தார்.

கோடி ரோட்ஸ்!
கோடி ரோட்ஸ் என WWE-வில் அழைக்கப்படும் இவரது உண்மை பெயர் காடி காரெட் ரன்னெல்ஸ்.



Click it and Unblock the Notifications
