Latest Updates
-
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா?
WWE சூப்பர்ஸ்டார்களின் எதிர்பாராத மரணங்கள்!
80-களின் இறுதியல் மற்றும் 90களின் முதலில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் தெரியும், டபிள்யூ.டபிள்யூ.ஈ எவ்வளவு மகத்தான பொழுதுபோக்கு என்று.
இதற்காக பள்ளியைவிட்டு ஓடோடி மாலை வீடு திரும்புவோர் எக்கச்சக்கம். நிறைய பூசி மழுப்பும் வேலைகள் இருப்பதை அறிந்தும் இதை நாம் வெறித்தனமாக பார்த்து வந்தோம்.
ஆனால், இந்த விளையாட்டின் மூலம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்த சில சூப்பர்ஸ்டார்கள் எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவியது அதிர்ச்சியை அளித்தது.
அந்த வகையில், சில சூப்பர்ஸ்டார்கள் எதனால், எந்த காரணத்தால் இறந்தார்கள் என்பது பற்றி இந்த கட்டுரையில் பாப்போம்...

ஆண்ட்ரே தி ஜெயின்ட் (1946 - 1993):
ஏழடி ஐந்து அங்குலம் உயரம் கொண்ட இவரது எடை 550 பவுண்டுகள். 12 வயதிலேயே இவர் ஆறடி உயரம், 200 பவுண்ட் எடை கடந்துவிட்டார். பிரெஞ்சு இராணுவம் இவர் மிகவும் பெரியதாக இருப்பதால், படையில் சேர்க்காமல், நிராகரித்தது.
இவருக்கு அக்ரோமேகாளி எனும், அங்க உடல் உறுப்பு அதிகரிக்கவும் சிகிச்சை செய்யப்பட்டது. இதை செய்த மருத்துவரே, இவர் இவரது 40வது வயது வரை இருக்கமாட்டார் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரே தி ஜெயின்ட் (1946 - 1993):
1973-1987 வரை யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக திகழ்ந்தார் எனோர். இந்த தோல்வி காணாத பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ஹல்க் ஹோகன். வ்ரட்ஸில் மேனியா 3-ல் ஹல்க் இவரை வீழ்த்தினார்.
1993-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக பாரிஸில் மரணமடைந்தார் ஆண்ட்ரே தி ஜெயின்ட். இவர் மரணமடைந்த நாள் ஜனவரி 27,1993. தனது 46வது வயதில் இதய செயலிழப்பு காரணமாக இவர் இறந்தார்.

மேச்சோ மேன் (1952 - 2011)
மேச்சோ மேன் என அனைவராலும் அழைக்கப்படும் ராண்டி சாவேஜ் 32 ஆண்டுகள் (1973 - 2003) இந்த போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவரது தந்தால் எஞ்சேலோ போஃப்போ தான் ராண்டிக்கு பயிற்சி அளித்தவர். அவரும் ஓர் மல்யுத்த வீரர் தான்.
பாஸ்கெட்பால் விளையாட்டு வீரரான இவருக்கும், பாஸ்கெட்பால் போட்டிகளில் பங்குபெற்று வந்த போது தான் இந்த மேச்சோ மேன் என்ற பெயர் வந்தது.

மேச்சோ மேன் (1952 - 2011)
தனது தனித்தன்மையான ஸ்டைல் மற்றும் குணாதிசயங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தார் மேச்சோ. பெயின்ட் செய்த கண்ணாடி, கவ்பாய் தொப்பி என அசத்துவார். ஏப்ரல் 8, 2011 அன்று இவர் மாரடைப்பால் தனது 58வது வயதில் மரணமடைந்தார்.

எடி கோரீரோ (1967 - 2005)
எடி கோரீரோ யூனிட்டட் ஸ்டேட் சாம்பியன்ஷிப், டபிள்யூ.டபிள்யூ.ஈ சாம்பியன்ஷிப் பட்டங்களும் வென்றுள்ளார். இவர் ஓர் மல்யுத்த குடும்பத்தை சேர்ந்தவர்.
ஜே.பி.எல்-வுடன் இவர் மோதிய போட்டியை யாராலும் மறக்கவே முடியாது. இந்த போட்டியின் போது இவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு 16 தையல்கள் போடப்பட்டன. இவர் அளவிற்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டு வந்தார்.

எடி கோரீரோ (1967 - 2005)
அதிர்ஷ்டவசமாக 1998 புத்தாண்டு தினத்தின் போது குடும்பத்தாரால் இவர் காப்பாற்றபட்டார். நவம்பர் 13, 2005 அன்று இதய நோய் காரணத்தால் எடி கோரீரோ மரணமடைந்தார்.

ஓவென் ஹார்ட் (1965 - 1999):
ஓவென் ஹார்ட், ஓர் பாரம்பரிய மல்யுத்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்டூ ஹார்டால் பயிற்சி செய்யப்பட்டார். இவருக்கு மல்யுத்த வீரர் ஆகவேண்டும் என்ற விருப்பமே இருக்கவில்லை. சாதாரண நபராக தனது வாழ்க்கையை வாழவே விரும்பினார்.
1989ம் ஆண்டு அபாயமான விதைப்பை காயம் ஏற்பட்டதால் டபிள்யூ.டபிள்யூ.எப்பில் இருந்து விலகினார் ஓவென் ஹார்ட் . வ்ரட்ஸில் மேனியா 10-ல் தனது அண்ணன், ப்ரெட் ஹார்டால் தோற்கடிக்கப்பட்டார். போட்டியின் போது ஏற்பட்ட விபத்தினால் தான் இவர் மரணமடைந்தார்.

ஓவென் ஹார்ட் (1965 - 1999):
இதை தொடர்ந்து இவர்களது குடும்பம் நீதிமன்றத்தை நாடியது. இதனால், இவர்களுக்கு $18 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டது.

க்றிஸ் பெனாயிட் (1967 - 2007):
க்றிஸ் பெனாயிட் தன் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்டார். இவரது நண்பர் மற்றும் மல்யுத்த வீரரான எடி கோரீரோவின் மரணம் இவரை மிக வலுவாக பாதித்தது.

க்றிஸ் பெனாயிட் (1967 - 2007):
இதற்குக் பின்னர் இவர் அதிகமாக போதை பழக்கத்திற்கு ஆளானார். இவரது டைரி குறிப்பிலேயே இவர், நண்பா உன்னை கூடிய விரைவில் வந்து சந்திப்பேன் என எழுதியிருந்தார்.



Click it and Unblock the Notifications