தென்னிந்தியா நடிகைகள் செய்யும் சைடு பிசினஸ் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நடிப்பது மட்டுமே நம்ம ஊர் நடிகைகளின் தொழில் கிடையாது. முன்பு போல் அல்லாமல் இப்போது பல நடிகைகள் நடிகர்களுக்கு இணையாகவும், சிலர் அவர்களுக்கு மேலும் கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இந்த கோடிகளில் சில கருப்பாகவும் கூட இருக்கலாம்.

நெருக்கமாக பழகியும் திருமணம் செய்யாமல் பிரிந்த நடிகர், நடிகைகள்!

ஆனால், வெள்ளையில் பெறும் பல கோடிகளை சைடு பிசினஸில் போட்டு, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள் நமது தென்னிந்திய நடிகைகள். இதில், பலரும் ரியல் எஸ்டேட் தொழிலில் தான் நிறைய முதலீடு செய்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் லக் என்ற பெயரில் கடைப்பிடிக்கும் பழக்கங்கள்!!

நயன்தார, த்ரிஷா, நமீதா, காஜல், அனுஷ்கா என முன்னணியில் இருப்பாவர்களில் இருந்து பின்னணியில் இருப்பவர்கள் வரை அனைவரும் சைடு பிசினஸ் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நயன்தாரா

நயன்தாரா

தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் நயன் ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய முதலீடு செய்துள்ளார். சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் போன்ற இடங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி கட்டிடங்கள் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் பிறந்த மாநிலத்தில் ஓர் பெரிய பண்ணை வீடு வாங்கியதாக கோலிவுட் கிசுகிசுக்கிறது.

த்ரிஷா

த்ரிஷா

நயனை போலவே த்ரிஷாவும் ரியல் எஸ்டேட்டில் தான், நடித்து சம்பாதித்த பல கோடிகளை முதலீடு செய்துள்ளார்.

தமன்னா

தமன்னா

தங்கம் போல மின்னும் தமன்னா, தங்க வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். புதிய ரக நகைகளை டிசைன் செய்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறாராம் தமன்னா. டிஜிட்டல் இந்தியா சர்ஜி!

அனுஷ்கா

அனுஷ்கா

தென்னிந்தியாவில் நயனுக்கு அடுத்து அதிக ஊதியம் பெறும் நடிகை அனுஷ்கா. இவர் தான் சம்பாதித்ததில் பெரும் பகுதியை பெங்களூருவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வைத்துள்ளார்.

ஹன்சிகா

ஹன்சிகா

மெய்யாலுமே ஹன்சிக்காவிற்கு நல்ல உள்ளம் தான். தான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் ஓர் இடம் வாங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு ஆதரவளித்து வருகிறார். (இதையெப்படி பிசினஸ்-னு சொல்ல முடியும், நீங்க நல்லா இருக்கணும் தாயி!)

சமந்தா

சமந்தா

தெறியில் தனது நடிப்பை தெறிக்கவிட்டு மேலும் சில படிகள் உச்சம் கண்டுள்ள சமந்தா, சென்னை மற்றும் ஹைதிராபாத்தில் ரியல் எஸ்டேட்டில் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறாராம்.

டாப்சி

டாப்சி

டாப்சி சற்று வினோதமாக யோசித்து சைடு பிசினஸ் செய்து வருகிறார். கல்யாண வேலைகள் சார்ந்த தொழில் அது. மணப்பெண், மணமகனை அழைத்துக் கொண்டு போனால் மட்டும் போதும், அலங்காரம், மண்டபம், உணவு, என அனைத்தையும் ஏற்பாடு செய்து தரும் பிசினஸ் செய்து வருகிறார் டாப்சி.

நமீதா

நமீதா

சமீபத்தில் அரசியலில் குதித்த நமீதா. பல காலமாக தனது பிறந்த ஊரான சூரத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

பெரும்பாலான முன்னணி நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் தான் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதற்கு காஜலும் விதிவிலக்கு அல்ல.

பிரணிதா

பிரணிதா

சகுனி மூலம் அறிமுகமான நடிகை பிரணிதா பெங்களூருவில் ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார். விரைவில், இதன் கிளைகள் மற்ற முன்னணி நகரங்களிலும் திறக்க முயற்ச்சித்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

South Indian Actresses And Their Side Businesses

South Indian Actresses And Their Side Businesses, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter