Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
போதை பழக்கத்தால் மதிப்பை இழந்த நடிகர், நடிகைகள்!
போதை தலைக்கு ஏறினாள், நமது புகழ், உச்சம், மரியாதை போன்றவை தரையில் தவழ ஆரம்பித்துவிடும் என்பது உலக நிதர்சனம். இது, இந்த மக்களுக்கு தான் பொருந்தும், இவர்களுக்கு பொருந்தாது என்றில்லை.
முக்கியமாக ஊடக வெளிச்சத்தில் இருக்கும் திரை பிரபலங்களுக்கு 100% பொருந்தும்.பெரும் உச்சத்தில் இருந்த போது போதை பழக்கத்தால் தங்கள் வெற்றி, மார்கெட், புகழ் என அனைத்தையும் சரித்துக் கொண்ட பல பிரபலங்கள் இருக்கின்றனர்...
மனிஷா கொய்ராலா
பாலிவுட்-ன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த மனிஷா புகை, மது மற்றும் போதை பொருட்கள் பயன்ன்படுத்த துவங்கி கொஞ்சம், கொஞ்சமாக தன் நிலை இழந்தார். இதனால், இவரது எடையும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால், இவருக்கு புற்றுநோய் உண்டாகி, பிறகு அதிலிருந்து மீண்டு வந்து இப்போது அனைத்தையும் கைவிட்டுள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி
உலகளவில் புகழ் பெற்று திகழும் பிரபலங்களில் ஏஞ்சலினா ஜோலியும் ஒருவர். நடிப்பிலும், அழகிலும் உச்சம் கண்டவர். இவர் அனைத்து வகையிலான போதை பொருட்களையும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், முதல் குழந்தையை தத்தெடுக்கும் முன்னர் இந்த அனைத்து பழக்கத்தையும் கைவிட்டார்.
சஞ்சய் தத்
போதை பொருளினால் சிக்கி சின்னாபின்னமாகிப் போன பாலிவுட் பிரபலங்களில் சஞ்சய் தத் மிக முக்கியமானவர். இதனால் இவர் கைதும் செய்யப்பட்டார், ஐந்து மாதம் சிறை தண்டனையும் பெற்றார். பிறகு, இதிலிருந்து வெளிவர அமெரிக்காவில் சிறப்பு சிகிச்சை பெற்றார்.
ரன்பீர் கபூர்
ராக்ஸ்டார் படத்தில் மிக இயல்பாக நடித்ததற்கு காரணம், பள்ளி பருவத்தில் இருந்து இவருக்கு இருந்த புகைப் பழக்கம் தான் என இவரே ஓர் பேட்டியில் கூறிஇருந்தார்.
க்ரிஸ்டென் டன்ஸ்ட்
ஸ்பைடர்மேன் புகழ் க்ரிஸ்டென் டன்ஸ்ட் பார்க்க அப்பாவி அழகு பதுமை போல தோற்றமளித்தாலும், அளவிற்கு அதிகமாக போதை பொருள் பயன்படுத்தி, மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியவர் ஆவார்.
ராகுல் மகாஜன்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகன், ராகுல் மகாஜன் தன் தந்தை இறந்த ஓர் மாதத்திலேயே போதை பொருள் பயன்பாடு விவகாரமாக கைது செய்யப்பட்டார் . இவர் அளவுக்கு அதிகமாக கோகோயின் பயன்படுத்தி வந்தார். இதனால், இவரது இல்வாழ்க்கையிலும் பல கசப்பான சம்பவங்களை சந்தித்தார்.
விஜய் ராஸ்
ரன், ரகு ரோமியோ, அன்வர், டெல்லி.. பெல்லி, டெல்லி 6 போன்ற இந்தி படங்களில் நடித்துள்ள, தேசிய விருது பெற்ற விஜய் ராஸ் ஒருமுறை துபாய் விமானநிலையத்தில் போதை பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
ஃபர்தீன் கான்
போதை பழக்கத்தால் அனைத்தையும் இழந்து மற்றுமொரு இந்திய பிரபலம் ஃபர்தீன் கான். சமீபத்தில் இவரது உடல்பருமனான படங்களை கண்டு இணையத்தில் சிலர் கிண்டல் செய்தனர். அதை மீண்டு ஃபர்தீன் கான் வந்துவிட்டார்.
2001-ம் ஆண்டு போதை பொருள் காரணத்திற்காக மும்பை போலீசால் கைது செய்யப்பட்டார். மேலும், உடலில் நச்சுக்கள் அதிகமானதாலும், நோய் எதிர்ப்பு குறைவானதாலும் 2012-ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications






