Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகைகள் இடையே உண்டான காதல் முறிவுகள்!!
இந்தியாவில் இரண்டு விஷயங்களுக்கு செய்திகளில் பஞ்சமே இருக்காது. ஒன்று கிரிக்கெட் மற்றொன்று சினிமா. மேலும், இந்த இரண்டு துறைகளுக்கு தான் இந்தியாவில் ரசிகர் கூட்டமும் அதிகம்.
ஹாட்டான பெண்களை மடக்கிய கிரிக்கெட் வீரர்கள்!!!
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப் படங்கள் வெளிவருவதும், இந்தியா விளையாடும் கிரிக்கெட் தொடர்கள் டிவியில் ஒளிபரப்பு ஆகும் போது நாடே ஒருமித்து இருப்பதும் இந்தியாவில் இயல்பு.
அடித்து ஆடுபவர்களை துரத்தி விரும்பிய நடிகைகள்!
இந்த இரு துறையும் எங்கேனும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது. பிரபலங்கள் கிரிக்கெட் விளையாட துவங்கியது இதற்கான ஓர் காரணம்.
கேப்டன் கூல் தல தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்!!
ஆனால், நடிகர்களை போல கிரிக்கெட் வீரர்கள் காதலிக்க தொடங்கினால்? அதுவும் நடிகைகளை?? ஆச்சரியம் ஏதும் இல்லை, 1960-களில் இருந்து இதுவும் இந்தியாவிற்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!
கிரிக்கெட் வீரர், சினிமா நடிகை மத்தியிலான அனைத்து காதல் கதைகளும் சிறப்பாக அமைந்துவிடவில்லை. விவாகரத்து, காதல் முறிவு, பெற்றோர் எதிர்ப்பு, மதம், புரளிகள் என பெரும்பாலும் ஏதேனும் கசப்பான சம்பவங்கள் அவர்களது காதல் வாழ்க்கையில் இடையூறாக அமைந்துவிடுகிறது...

மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர்
கிரிக்கெட் வீரர் மற்றும் பாலிவுட் நடிகை மத்தியில் உண்டான முதல் காதல் ஜோடி மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர். இவர்களது காதலின் போது ஷர்மிளா திரையுலகின் முன்னணி நடிகையாகவும், மன்சூர் அலி கான் பட்டோடி இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தனர். மதம் காரணம் காட்டி, இருவரது வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் கிடைக்காததால் தனியாக திருமணம் செய்துக் கொண்டனர். கடந்த 2011-ம் ஆண்டு பட்டோடி மரணமடைந்தார்.

அஞ்சு மகேந்துரு மற்றும் சர் கேரி சோபர்ஸ்
மேற்கிந்திய அணி வீரர் சர் கேரி சோபர்ஸ் 1960-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அஞ்சு மீது காதல்வயப்பட்டு போனார். அஞ்சுவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஜீனத் அமன் மற்றும் இம்ரான்கான்
பாகிஸ்த்தான் வீரர் இம்ரான்கான் ஜீனத் அமனை காதலித்தது இருநாட்டவருக்கும் தெரிந்த கதை தான். இரு நாட்டின் உறவு விரிசல், இவர்களது உறவுக்கும் விரிசலாக அமைந்தது என்பாதால், இவர்கள் பிரிந்துவிட்டனர்.

ரவி சாஸ்திரி மற்றும் அம்ரிதா சிங்
80-களில் இந்திய பெண்களின் ஸ்வீட் ஹார்ட்டாக திகழ்ந்தவர் ரவி சாஸ்திரி. 1985-ம் ஆண்டு மினி உலகக்கோப்பை விளையாட்டில் இவரது ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. அந்த காலக்கட்டத்தில் ரவி சாஸ்திரி மற்றும் அம்ரிதா சிங் இருவரும் காதலில் விழுந்ததாகவும், ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நீனா குப்தா மற்றும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
மேற்கிந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் அன்றைய ஹாட்டான பாலிவுட் நடிகை நீனா குப்தாவும் சிறு காலத்திற்கு காதல் உறவில் இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் பத்திரிகைகளில் இவர்களை பற்றிய செய்தி தலைப்பில் அடிக்கடி வந்தன. ஆனால், திருமணம் செய்துக் கொள்ள இருவருமே ஒப்புகொள்ளவில்லை என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

ரீனா ராய் மற்றும் மொஹ்சின் கான்
கியூட் நடிகை ரீனா ராய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹ்சின் கானை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீதா பிஜ்லானி மற்றும் முகமது அசாருதீன்
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் முகமது அசாருதீனும் ஒருவர். தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், 14 வருடங்களுக்கு பிறகு கடந்த 2010-ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

ஈஷா மற்றும் ஜாகிர் கான்
ஏறத்தாழ எட்டு வருடங்கள் இவர்கள் இருவரும் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்துக் கொள்ளவும் தயாராக இருந்த இவர்கள் திடீரென உறவை முறித்துக் கொண்டது ஏன் என தெரியவில்லை.

கிம் சர்மா மற்றும் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் இந்தியாவின் முன்னணி வீரராக திகழ்ந்து வந்த போது கிம் சர்மாவுடன் காதலில் விழுந்தார். ஆனால், இவரது வீட்டில் ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நக்மா மற்றும் கங்குலி
இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலித்தார்களா? இல்லையா? என்பதே அவிழாத முடிச்சாக தான் இருக்கிறது. இவர்கள் காதலித்தனர், பிரிந்துவிட்டனர் என செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதை இருவருமே மறுத்துவிட்டனர்.

அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி
தற்போதையை கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலகில் மிகவும் பெரிதாக வீசிக் கொண்டிருக்கும் புயல், இவர்களது பிரிவு தான். இன்னும் தெளிவான தகவல்கள் வரவில்லை எனிலும், இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக தீயாக பரவி வருகிறது. ஆயினும், இதுவரை சம்மந்தப்பட்ட இருவரும் எதுவும் கூறாமல் இருப்பதால், அவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் ஓர் திருவிழா போல அமையும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.



Click it and Unblock the Notifications
