For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணைக் கட்டிக்கொண்டு சிக்ஸர்கள் விளாசும் இவர் யார் தெரியுமா?

|

கெவின் பீட்டர்சன், ஒரு சிறந்த அதிரடி கிரிக்கெட் விளையாட்டு வீரர். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கும் செய்யும் இங்கிலாந்து வீரர். ஒருசில சர்ச்சைக்குள்ளான கருத்துகளின் காரணத்தால் இவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்க்காமல் புறக்கணித்து வருகிறது.

ஆயினும் பல்வேறு நாடுகளின் உள்நாட்டு போட்டிகளில் அவ்வப்போது பங்குபெற்று அசத்தி வருகிறார் கெவின் பீட்டர்சன். சமீபத்தில் கெவின் பீட்டர்சன் கண்களை கட்டிக்கொண்டு சிக்ஸர் விளாசும் வீடியோ யூடியூப்-ல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ ஒரு கிரிக்கெட் சேலஞ் வீடியோ ஆகும். இது யூடியூப்-ல் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆனபோதும் இப்போது அதிகமாக கிரிக்கெட் காதலர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Image's Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் கட்டி வித்தை!

கண் கட்டி வித்தை!

இந்த வீடியோவின் முதலில் கெவின் தனது கண்களை கருப்பு துணிக் கொண்டு கட்டிக் கொள்கிறார். இவருக்கு பந்து மெஷின் மூலமாக எறியப்படுகிறது.

ஸ்டம்புகள் சிதறின!

ஸ்டம்புகள் சிதறின!

முதலில் மாதிரி பந்தை ஒருமுறை எரிய கூறி, கெவின் மட்டை தூக்கும் முன்னரே பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்துவிட்டன.

சிங்கம் ஆன் ட்ராக்!

சிங்கம் ஆன் ட்ராக்!

ஆனால், அடுத்தடுத்து வீசிய எல்லா பந்துகளும் மைதானத்தை விட்டு மின்னல் வேகத்தில் பறந்தன.

ஜன்னல் கண்ணாடியை உடைத்த கெவின்!

ஜன்னல் கண்ணாடியை உடைத்த கெவின்!

ஓவரின் இடையே ஒரு பந்தை மீண்டும் சிக்ஸருக்கு கெவின் விரட்ட, அந்த பந்து மைதானத்தின் எதிரில் இருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடியை பதம் பாரத்தது.

ரிவர்ஸ் ஸ்வீப்!

ரிவர்ஸ் ஸ்வீப்!

ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரிகள் அடிப்பதில் கெவின் பீட்டர்சன் வல்லவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், கண்ணைக் கட்டிக்கொண்டும் விளாசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

வீடியோ பதிவு!

கெவின் பீட்டர்சன் கண்ணைக் கட்டிக்கொண்டு சிக்ஸர்கள் விளாசிய வீடியோ பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kevin Pietersen Blindfold Cricket Challenge

Kevin Pietersen Blindfold Cricket Challenge , take a look on his amazing talent.
Desktop Bottom Promotion