வறுமையை நீக்கி, குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கேதார கௌரி விரதம்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் தீபாவளி என்றால் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் மேற்கொண்டால், நம்மை சூழ்ந்துள்ள வறுமைகள் நீங்கி, வாழ்க்கையில் உள்ள தடங்கல்கள் விலகும் என்பது தெரியுமா?

இந்த கேதார கௌரி விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இப்போது அந்த கேதார கௌரி விரதம் பற்றியும், அது தோன்றிய கதை பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேதாரநாதர்

கேதாரநாதர்

இமயமலையில் இருக்கும் வயல் பகுதியில் சிவன் சுயம்புவாக தோன்றினார். வடமொழியில் வயல் என்றால் கேதாரம் என்று அழைக்கப்படும். இப்பகுதியில் சிவன் தோன்றியதால், இங்குள்ள சிவன் 'கேதாரநாதர்' என்று அழைக்கப்படுகிறார். மேலும் பார்வதி அம்மனுக்கு 'கௌரி' என்ற பெயரும் உண்டு. பார்வதி தேவி சிவனை வேண்டி இருந்த விரதம் தான் கேதார கௌரி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்

காரணம்

பார்வதி தேவி சிவனை வேண்டி விரதம் இருந்ததற்கான காரணம் சிவ பக்தரான பிருங்கி முனிவர் ஒருமுறை, கைலாயத்தில் ஒன்றாக அமர்ந்திருந்த போது, சிவனை மட்டும் வணங்கினார். இதனால் பார்வதி தேவி கோபமடைந்து, "முனிவரே! நீர் சக்தியின்றி போவீர்" என்று சாபமிட்டார். இதனால் முனிவர் நிற்க முடியாமல் நிலத்தில் விழுந்தார். அவருக்கு சிவன் ஊன்று கோலைக் கொடுத்து உதவினார்.

கோபம் போகாத பார்வதி தேவி

கோபம் போகாத பார்வதி தேவி

சாபமளித்த பின்னரும் கோபம் தீராத பார்வதி தேவி, ஈசனும், நானும் தனித்தனியாக இருப்பதால் தானே அவரை மட்டும் வலம் வந்து வணங்கினார். இருவரும் ஒன்றாகிவிட்டால், இப்படி நடக்காது என்று நினைத்த பார்வதி தேவி, கைலாயத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தார்.

கவுதம முனிவர் ஆசிரமம்

கவுதம முனிவர் ஆசிரமம்

பூலோகம் வந்த பார்வதி தேவி, கவுதம முனிவரின் ஆசிரமத்திற்கு சென்று, கைலாயத்தில் நடந்ததை கூறினார். நான் ஈசனுடன் ஒன்றாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

கவுதம முனிவர் கேதார கௌரி விரதம் இருக்குமாறு கூறினார். இந்த விரதத்தை 21 நாட்கள் கடைப்பிடித்தால், இறைவன் தனது உடலின் பாதியை உங்களுக்கு தந்தருளுவார் என்றும் கூறினார். பார்வதி தேவியும் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து, ஈசனின் இடப்பாகத்தைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

வண்டாக மாறிய பிருங்கி முனிவர்

வண்டாக மாறிய பிருங்கி முனிவர்

தன் தவ வலிமையைப் பயன்படுத்தி பிருங்கி முனிவர் வண்டாக மாறி, அர்த்தநாரீஸ்வரரின் மார்பினுள் புகுந்து, சிவனை மட்டும் வலம வந்து வணங்கினார். ஆனால் அப்போது பார்வதி தேவி கோபம் கொள்ளவில்லை. மாறாக அவரை தனது புத்திரனாக்கிக் கொண்டார். மேலும் ஈசனிடம், தான் கடைப்பிடித்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் அருள் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். ஈசனும் அவ்வாறே அருளினார்.

கேதார கௌரி விரதம் இருக்கும் முறை

கேதார கௌரி விரதம் இருக்கும் முறை

கேதார கௌரி விரதத்தின் ஆரம்ப நாளில் ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு, ஒரு பழம், பலகாரம் மற்றும் அன்னம் போன்றவற்றை படைத்து ஈசனையும், அம்மனையும் வணங்க வேண்டும். பின் ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 21 ஆவத நாளன்று 21 எண்ணிக்கையில் அனைத்து பொருட்களையும் வைத்து வழிபடுவதோடு, 21 இழைகளால் ஆன கயிற்றை வைத்து, தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும். பின் அந்த கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும்.

21 நாட்கள் முடியாதவர்கள்

21 நாட்கள் முடியாதவர்கள்

21 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், விரத நாளன்று விரதம் இருந்து, தூங்காமல், மறுநாள் ஈசனையும், அம்மனையும் வணங்க வேண்டும். இதனால் வறுமை நீங்குவதோடு, குழந்தை பாக்கியம் கிட்டும் மற்றும் குடும்ப ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kedara Gowri Vratham Story - Diwali Viratham

Deepavali as popularly known the auspicious kedara gowri vratham. Read on to know more...
Story first published: Tuesday, October 25, 2016, 16:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter