For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை அதிர வைத்த அணுகுண்டுகள் பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்!

|

அணுகுண்டு என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிப்பொருளாகும். இந்த இரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன.

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள!

மிகவும் சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்து, அதை மிகப்பெரிய வேகத்தில் வெளிப்படுத்த செய்வதே அணுகுண்டின் செயலாற்றல் தத்துவம் ஆகும்.

இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விசித்திர ஆயுதங்கள்!!!

உலக வரலாற்றில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு, இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை சின்னாபின்னமாக்க ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட "லிட்டில் பாய்" ஆகும். இரண்டாவது "ஃபேட் மேன்" என்ற அணுகுண்டு நாகசாகி மீது வீசப்பட்டது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வானில் வெடிக்க செய்தனர்

வானில் வெடிக்க செய்தனர்

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுகள் பூமியில் வெடிக்க வைக்காமல், வானிலேயே வெடிக்க செய்தனர். இதனால் தான் லட்சக்கணக்கான மக்கள் பெருமளவு பாதிப்படைந்தனர்.

மராத்தான் வென்றார்

மராத்தான் வென்றார்

ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பில் இருந்து உயிர்தப்பிய நபர் பாஸ்டன்-ல் 1951-ம் ஆண்டு நடைபெற்ற மராத்தான்-ல் கலந்துக் கொன்று வெற்றிப்பெற்றார்.

கோகுரா (Kokura)

கோகுரா (Kokura)

நாகசாகியில் வெடித்த அணுகுண்டு உண்மையில் கோகுரா என்ற இடத்திற்கு குறிவைக்கப்பட்டது ஆகும். ஆனால், மாறி நாகசாகியில் வெடித்துவிட்டது.

பொன்சாய் மரம்

பொன்சாய் மரம்

1626-ம் ஆண்டு நடப்பட்ட பொன்சாய் மரம் ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் சேதமடையாமல் தப்பியது. இதை அமெரிக்கா தனது மியூசியத்தில் இப்போது வைத்துள்ளது.

சூறாவளி

சூறாவளி

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அடுத்த மாதத்தில் ஒரு பெரும் சூறாவளி தாக்குதல் ஏற்பட்டது. இதன் காரணத்தினால் 2,000 பேர் ஹிரோஷிமாவில் உயிரிழந்தனர்.

அமெரிக்க மின்சாரம்

அமெரிக்க மின்சாரம்

அமெரிக்காவில் பத்து சதவீத மின்சக்தி உடைக்கப்பட்ட / பிரிக்கப்பட்ட அணுகுண்டுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

1962

1962

அமெரிக்கா கடந்த 1962-ம் ஆண்டு வானில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடிக்க செய்தது. இது ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டை விட நூறு மடங்கு சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாவை ஈர்க்க

சுற்றுலாவை ஈர்க்க

1950-களில் அணுகுண்டு சோதனைகள் லாஸ்-வேகாஸ் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒன்றாய் இருந்தது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவிடம் மொத்தம் 8,400 அணுகுண்டுகள் இருக்கின்றன. மற்ற உலக நாடுகளிடம் ஒப்பிடும் போது ரஷ்யாவிடம் தான் அணுகுண்டுகள் அதிகமாக இருக்கின்றன.

தொலைந்துபோன அணுகுண்டு

தொலைந்துபோன அணுகுண்டு

ஜோர்ஜியா கடற்பகுதியில் எங்கோ தொலைந்த அணுகுண்டு கண்டுபிடிக்கபடாமல் இருக்கிறது, இன்றளவும்.

அணுகுண்டின் தந்தை

அணுகுண்டின் தந்தை

அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஒபென்ஹெமர் தனது பேராசிரியரை ஆப்பிள்-ல் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார்.

சி.டி- ஸ்கேன்

சி.டி- ஸ்கேன்

சி.டி- ஸ்கேன் செய்தால் ஒரு நபரின் உடலில் எவ்வளவு கதிர்வீச்சு உட்செல்லுமோ, அந்தளவு கதிர்வீச்சு ஒன்றரை மைலுக்கு அப்பால் இருந்த நபருக்கு (ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டினால்) தாக்கம் ஏற்பட்டது.

அணுகுண்டு மியூசியம்

அணுகுண்டு மியூசியம்

மெக்ஸ்சிகோவில் அணுகுண்டு மியூசியம் உள்ளது. இது வருடத்திற்கு 12 மணிநேரம் மட்டும் திறந்து வைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Atomic Bomb Facts

Lesser Known Facts about Atomic Bombs, read here in tamil.
Desktop Bottom Promotion