For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிக்கெட், இது எங்க ஏரியா! உலக ரசிகர்களை வியக்க வைக்கும் இந்திய ரசிகர்கள்!

By Viswa
|

உலகம் முழுக்க இருப்பவர்களுக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்றால். இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதில் நாம் வெறியர்கள். சச்சின் டெண்டுல்கர் உலக மக்களுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர், இந்தியாவில் கிரிக்கெட் எனும் மதத்தில் கடவுள் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் மட்டும் அல்ல, கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் கலங்களும் கூட போர்க்களம் தான். மற்ற அணிகளுக்கு இடையே வெற்றி தோல்வி என்பது சாதாரண விஷயமாக இருப்பினும். இந்தியா பாகிஸ்தான் என்று வந்துவிட்டால் அது இரு நாட்டு மக்களின் கௌரவப் பிரச்சனை.

1983 இல் இந்திய அணி முதல் முறையாக கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையில் கைப்பற்றியது. செய்தித் தாள்களும் ஆங்காங்கே எங்கேயாவது தொலைக்காட்சி பெட்டிகளும் இருந்த அந்த காலத்திலேயே நம்மவர்கள் கிரிக்கெட்டின் மீது அளவில்லாத பற்றுக் கொண்டிருந்தனர். இன்று, சொல்லவா வேண்டும். தோல்வியை நமது அணியினரால் சகித்துக் கொள்ள முடிந்தாலும். நமது இந்திய கிரிக்கெட் ரசிகர்களினால் சகித்துக் கொள்ள இயலாது. அதுவும் பாகிஸ்தானுடன் என்றால், முடியவே முடியாது.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை மோதியுள்ளன. கடந்த ஐந்து முறையும் இந்தியா தான் வெற்றிக்கனியை ருசித்துள்ளது. இம்முறையும் அதை தொடர வேண்டும் என்பது அனைவரின் ஆசை. கிரிக்கெட்டே பிடிக்காதவர் கூட இந்திய பாகிஸ்தான் ஆட்டத்தை உட்கார்ந்து பார்ப்பார்கள். உலக கோப்பையை இந்திய வெல்ல வேண்டி நேர்த்திகடன் செய்பவர்கள் எல்லாம் உள்ளனர். இது மட்டும் அல்ல, உலக ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கண்டு வியக்க சில முக்கியக் காரணங்களும் உள்ளன. அதைப் பற்றி தான் இந்த கட்டுரையின் மூலமாக தெரிந்துக் கொள்ள போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம் ஒரு தடை அல்ல

நேரம் ஒரு தடை அல்ல

இந்திய அணியின் ஆட்டம் உள் நாட்டில் ஆயினும், வெளிநாடுகளில் ஆயினும் அது இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும் ஆட்டம் தொடங்கும் நேரம் தான் இந்திய ரசிகர்களுக்கு அந்நாளின் விடியல். அது அதிகாலை 4 மணியாக இருந்தாலும் சரி, நாடு ராத்திரி 12 மணியாக இருந்தாலும் சரி.

நேரம், நாள், கிழமை

நேரம், நாள், கிழமை

தனது பிறந்த நாளையே மறந்திருந்தாலும், உலக கோப்பையில் இந்திய அணி எதிர்க்கொள்ளும் ஒவ்வொரு ஆட்டத்தின் நேரம், நாள், கிழமை என அனைத்தையும் துளி மறக்காது ஞாபகத்தில் வைத்திருக்கும் திறன் கொண்டவர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

பெருமிதம்

பெருமிதம்

இந்திய அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களையும் தங்கள் வீட்டு பிள்ளையாய் நினைத்து பெருமிதம் கொள்ளும் பழக்கம் இந்தியாவில் மட்டும் தான் உள்ளது. இந்திய ரசிகர்களின் பெருமிதத்தைக் காண கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றாலே போதுமானது.

கிரிக்கெட்டின் கடவுள்

கிரிக்கெட்டின் கடவுள்

கிரிக்கெட் என்ற இதிய மதத்திற்கு சச்சின் என்பவர் தான் கடவுள். 9௦-களில் ஒருமுறை இந்தியாவிடம் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்த போது, அந்நாட்டு வீரர்கள் நாங்கள் இந்திய என்ற அணியிடம் தோற்கவில்லை சச்சின் என்ற தனி நபரிடம் தான் தோற்று செல்கிறோம் என்றனர். கடவுள் இல்லாத முதல் உலக கோப்பையில், கடவுளின் ஆசியோடு முதல் முறையாக களமிறங்குகிறது டோணியின் தலைமையிலான இந்திய அணி.

விவாதம்

விவாதம்

ஆட்டம் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னரே இந்த ஆட்டம் எவ்வாறு அமையலாம், எந்தெந்த வீரர் எப்படி எல்லாம் செயல்படுவார்கள். அந்த அணிக்கு எதிராக இந்தியா இதற்கு முன் எப்படி எல்லாம் செயல்பட்டுள்ளது என, ஒவ்வொரு இந்திய ரசிகனும் விவாதித்து கொண்டிருப்பார்கள். வெற்றி தோல்வியை சார்ந்து, ஆட்டம் முடிந்த சில நாட்களுக்கும் விவாதம் தொடரும்.

கவலையை மறந்திடுவார்கள்

கவலையை மறந்திடுவார்கள்

தேர்விலோ, காதலிலோ, தோல்வியோ வெற்றியோ, இந்திய அணியின் அடுத்த ஆட்டம் முடிவாகிவிட்டால். அனைத்தையும் மறந்து ஆட்டத்தில் மூழ்கிவிடுவார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

அன்பு

அன்பு

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும். ஆனால், சச்சினுக்கு மட்டும் இந்தியாவே ரசிகராக இருக்கும். அதுமட்டும் இன்றி., அவருக்கு பிடித்த வீரர் அணியில் இடம் பெறவில்லை எனிலும் அவர்களது புகைப்படங்களோடும், ஆதரவு பலகைகளோடும் குவியும் ரசிகர் கூட்டம்.

திருவிழா கோலம்

திருவிழா கோலம்

மற்ற நாட்டவருக்கு உலக கோப்பை என்பது மற்றுமொரு விளையாட்டு தான். ஆனால், நம் இந்தியருக்கு உலக கோப்பை என்பது ஒரு திருவிழா! ஊரெங்கும் வீரர்களின் புகைப்படங்களும், தோரணங்களும், வாழ்த்து வாசகங்களாகவும் இந்தியாவே இம்மாதம் முழுக்க கிரிக்கெட் மயமாக இருக்கும்.

எல்லைகள் இல்லை

எல்லைகள் இல்லை

எல்லா நாட்டு அணியினருக்கும் அவரவர் நாடுகளில் ஆடும் போது மட்டும் தான் ரசிகர் கூட்டம் குவியும். ஆனால், இந்திய அணிக்கு மட்டும் தான் தேச எல்லைகளே கிடையாது. எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு நமது மூவர்ணக் கொடி பறந்துக்கொண்டிருக்கும்.

திரை அரங்குகள்

திரை அரங்குகள்

இந்திய அணியின் உலகக்கோப்பை ஆட்டத்தின் அன்று எந்த ஒரு திரைப்படமும் வெளிவந்து ஓடியதை சரித்திரம் இல்லை. ஆனால், இந்திய அணியின் முக்கியமான ஆட்டங்களை திரையரங்குகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட வரலாறு பல இருக்கிறது. கடைசியாக திரையரங்குகளில் கடந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தை நேரடி ஒளிப்பரப்பு செய்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Cup Vs Indian Cricket Fans

There are two types of cricket fans, one is indian fans, another one is rest of world fans.
Desktop Bottom Promotion