For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்களகரமான நிகழ்வுகளுக்கு இந்தியர்கள் ஏன் பூக்களை பயன்படுத்துகின்றனர்?

By Ashok CR
|

நமது நாட்டில் பூக்களுக்கு விலைமதிப்பற்ற தெய்வத்தன்மை உள்ளது. கடவுளுக்கு பக்தியை காட்டும் விதமாக நாம் பூக்களை படைக்கிறோம். இந்த மலர்கள் சில தெய்வங்களையும் குறிக்கிறது. பூஜையில் வெவ்வேறு கடவுளுக்கு பூக்கள் சாத்துவதில் வெவ்வேறு சிறப்பு உள்ளது.

செவ்வந்தி, செம்பருத்தி மற்றும் தாமரை போன்ற மலர்கள் தான் பல்வேறு கடவுள் வழிபாட்டிற்கு பொதுவாக பயன்படுத்துவது. பூக்கள் நேர்மறையான அதிர்வுகளை தரும் என்றும், அதன் பளிச்சிடும் வண்ணம் மற்றும் நறுமணத்தால் கடவுள் ஈர்க்கப்பட்டு நமக்கு அருள் செய்வார் என்றும் நம்பபடுகிறது.

இந்து முறை திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மாலை மாற்றிய பின்னரே திருமணம் நிறைவு பெறுகிறது. மங்களகரமான நிகழ்வுகளில் இந்தியர்கள் ஏன் பூக்களை பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செவ்வந்தி

செவ்வந்தி

செவ்வந்தி பூக்களின் நறுமணத்திற்கு பூச்சிகளும் வண்டுகளும் வராது. அதனால் இந்த பூக்களும் மாலைகளும் இந்து கடவுளுக்கு படைக்கப்படுகிறது. மேலும் வீட்டின் அலங்கார தோரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

செம்பருத்தி

செம்பருத்தி

இந்த அழகிய சிவப்பு மலர் விநாயகருக்கும், காளி தேவிக்கும் உகந்தது மட்டுமல்லாது பல மருத்துவ பலன்களையும் கொண்டுள்ளது. செம்பருத்தியால் நமது பகைவர்களை அழித்து வாழ்வில் வளம் காணலாம்.

ரோஜா

ரோஜா

ரோஜா இதழ்கள் இயற்கையாகவே பாலுணர்வை தூண்டுவதால், அதனை புதுமண தம்பதியின் படுக்கைகளில் தூவுவர். ரோஜாப்பூக்கள் மனதை அமைதியாக வைத்து, மன இறுக்கம் மற்றும் சோர்வை விரட்டி அடிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் ரோஜாப்பூக்கள் ஒருவரை உணர்ச்சி ரீதியாக கட்டுப்படுத்தும் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாமரை

தாமரை

இந்த நீர்வாழ் பூவை விஷ்ணு பகவான், பிரம்ம தேவன் மற்றும் பெண் தெய்வங்களாகிய லக்ஷ்மி மற்றும் சரஸ்வதிக்கு படைப்பர். இந்த மலர் இறைத்தன்மையுள்ள அழகிற்கும், தூய்மைக்கும் ஒரு அடையாளமாகும். தாமரையின் மடங்கா இதழ்கள் ஆத்ம விரிவாக்கத்தை கூறுகிறது. புத்த மதத்தை பொறுத்தவரை இந்த மலர் தூய்மையின் பழமையான தொடக்கமாகும்.

மல்லிகை

மல்லிகை

கனி போன்று மணம் கொண்ட இந்த மலர் இந்தியாவில் கடவுளுக்கு மட்டும் அல்லாது பெண்களின் கூந்தலை அலங்கரிக்கவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மணம் நரம்புகளை அமைதியடைய செய்து, ஓய்வெடுக்க உதவுகிறது. இந்த மலர் வாசனை திரவியம் செய்யவும் உபயோகப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do Indians Use Flowers On Auspicious Occasions?

Flowers used in worships to different gods and goddesses havedifferent significances. Flowers like marigold, hibiscus and lotus are commonly used in India toworship various deities.
Story first published: Saturday, June 6, 2015, 17:17 [IST]
Desktop Bottom Promotion