உங்கள் உள்ளங்கையில் உள்ள ரேகைகள் சொல்லும் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Ashok Cr
Subscribe to Boldsky

உங்கள் உள்ளங்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உள்ளங்கைக்குள் பல்வேறு அடையாளங்களையும் அமைப்புகளையும் நீங்கள் காணலாம். சின்னங்களாகிய இந்த அடையாளங்கள் தான் உங்கள் உள்ளங்கை, விரல்கள் மற்றும் ஏற்றங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ரேகைகளின் மீது நேர்மறையான அல்லது எதிர்மறையான தடங்கல்கள் அல்லது அடைப்புகளை ஏற்படுத்தும்.

உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது?

இந்த அடையாளங்களும் சின்னங்களும் ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது - இவைகள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, உங்கள் உள்ளங்கையில் முக்கோண அடையாளம் இருந்தால் அது நேர்மறையான ஆற்றலை குறிக்கும்.

இந்த மூணுல நீங்க எந்த ரகம்??? தெரிஞ்சிக்க உடனே படியுங்க!!!

இதுவே உள்ளங்கையில் சிலுவைகள் இருந்தால் அது எதிர்மறையான ஆற்றலை குறிக்கும். இருப்பினும், உள்ளங்கைகள் இவைகளின் தோரணையைப் பொறுத்தே அமையும். அதனால் உள்ளங்கையில் உள்ள தோரணையைப் பொறுத்து தான் விளைவுகளும் அமையும்.

உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் ஏற்றதாக இருக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய ரேகையில் முக்கோண உருவாக்கம்

சூரிய ரேகையில் முக்கோண உருவாக்கம்

நன்றாக புரிந்து கொள்ள இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்; முக்கோண அடையாளம் உங்கள் சூரிய ரேகையின் மீது, அதாவது ஒருவரின் உள்ளங்கையின் நுனியில் இருந்து தொடங்கும் ரேகை புதன் மேட்டின் கீழ் உள்ளது. இந்த முக்கோண உருவாக்கம் ஒருவரின் நடுத்தர வயதில் ஏற்படக்கூடிய புகழை குறிக்கும். அந்த நபர் குறிப்பாக எந்த வயதில் புகழை அடைவார் என்பதை தெரிந்து கொள்ள, சூரிய ரேகையை ஒரு நபரின் ஆயுட்காலம் மற்றும் முக்கோணத்தின் தோரணையை கொண்டு வகுத்து கணக்கிடலாம். எந்த வயதில் அவர்கள் புகழை அடைவார்கள் என்பதையும் இது குறிக்கும்.

எதிர்மறையான சின்னங்கள் மற்றும் குணப்படுத்தும் அடையாளங்கள்

எதிர்மறையான சின்னங்கள் மற்றும் குணப்படுத்தும் அடையாளங்கள்

மறுபுறம், உள்ளங்கையில் எதிர்மறையான அடையாளங்கள் அல்லது சின்னங்கள் இருந்தால், அது ஒருவர் தன் வாழ்நாளில் சந்திக்கும் பேரதிர்ச்சி, பிரிவு, வலி, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இதர கஷ்டங்களைக் குறிக்கும். சில சின்னங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை, குணப்படுத்தும் காலத்தை மற்றும் உடல்நலம் தேறும் காலத்தையும் குறிக்கும். அதனால், கை ரேகைகளில் இந்த அடையாளங்கள் மற்றும் சின்னங்களுக்கான அர்த்தங்களைப் பற்றி மேலும் பார்க்கலாம்.

முறிவுகள் (Breaks)

முறிவுகள் (Breaks)

உள்ளங்கையின் முக்கிய ரேகைகள் மற்றும் சிறிய ரேகைகளில் முறிவுகள் இருக்கக்கூடும். இந்த ரேகைகள் எங்கே இருக்கிறது மற்றும் இந்த முறிவுகள் எங்கே தோன்றுகிறது என்ற அடிப்படையில் தான் அவை நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றல்களை குறிக்கும். கட்டை விரலை நோக்கிய ரேகையில் இந்த முறிவு தென்பட்டால், ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில் புதிய திருப்பத்தை குறிக்கும். இந்த முறிவு மேல்நோக்கு திசையில், கையின் நுனியை நோக்கி இருந்தால், அது திட்டமிடாத மற்றும் எதிர்பாராத பயணத்தை குறிக்கும். இந்த முறிவு உள்ளங்கையின் அடிபாகத்தை நோக்கியிருந்தால், வழக்கமான இயல்பு வாழ்க்கையில் எதிர்ப்பாரா திருப்பத்தை ஏற்படுத்தலாம். முறிவு என்பது பெயருக்கு ஏற்ப, இயல்பான ஆற்றல் ஓட்டத்தில் இடையூறு அல்லது வாழ்க்கையில் முற்றிலும் புதிய திசையைக் குறிக்கும்.

சங்கிலிகள் (Chains)

சங்கிலிகள் (Chains)

ஒருவர் தன் உள்ளங்கையில் சங்கிலிகள் போன்ற அடையாளங்களைக் கொண்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இது குறிக்கும். அவர்களின் குழந்தை பருவம் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். சங்கிலி அடையாளங்கள் காதல் வாழ்க்கை அனுபவங்களையும் குறிக்கும். இந்த அடையாளங்கள் ஒரு நபரின் உடல்நல பிரச்சனைகள் மற்றும் முடிவெடுக்க முடியாத குணத்தையும் குறிக்கும். இந்த சங்கிலி அடையாளம் எந்தளவிற்கு நீளமாக உள்ளதோ அதற்கேற்ப பிரச்சனைகளும் நீடிக்கும்.

சிலுவை (Cross)

சிலுவை (Cross)

ஒரு நபரின் உள்ளங்கையில் காணப்படும் சிலுவை அவரின் விதியை கூறும். அதாவது ஒரு நபரின் நீண்ட காலமாக நீடிக்கக்கூடிய பிரச்சனைகளை அது குறிக்கும். ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய எழுச்சிகளின் உருவமைப்பாகவும் இது அமையும். மற்ற அனைத்து அடையாளங்களைப் போலவும், உள்ளங்கையில் அதன் தோரணையைப் பொறுத்தே அது நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றத்தை ஒருவருக்கு அளிக்குமா என்பதை கூற முடியும். சிலுவை ரேகையை கொண்ட நபர்கள், சில கருத்து வேறுபாடுகளால் அவர்களின் எதிரிகளால் தாக்கப்படலாம் அல்லது வெளியாட்களால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் என சில வல்லுநர்கள் நம்புகின்றனர். ஒரு தனிப்பட்ட நபரின் மன நிலையையும் கூட சிலுவை அடையாளம் குறிக்கும்.

கோடுகள் (Grilles)

கோடுகள் (Grilles)

பொதுவாக உள்ளங்கையின் மேட்டில் தான் கோடுகளை அதிகமாக காணலாம். இவை பிரச்சனைகளையும் சமரசங்களையும் குறிக்கும். உள்ளங்கையில் ஏதேனும் ஒரு பகுதியில் கோடுகள் இருந்தால், சீக்கிரமே தடுமாறக்கூடிய பாதுகாப்பற்ற தனிநபர்களாக இருப்பார்கள் அவர்கள். இந்த மனப்பான்மை அவர்களின் தொழில் ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். உள்ளங்கையில் உள்ள கோடுகள் சோர்வு, பதற்றம் மற்றும் எரிச்சல் படும் குணத்தையும் குறிக்கும்.

உள்ளங்கையில் தீவுகள் (Islands on the palm)

உள்ளங்கையில் தீவுகள் (Islands on the palm)

தனிமைப்படுத்தப்பட்ட தீவுகள் போல, உள்ளங்கையில் உள்ள ஒன்று சேராமல் தனியாக உள்ள கோடுகள் வாழ்க்கையில் சாதகமில்லாத குறுக்கீடுகளை குறிக்கும். இது அதிகப்படியான மன உளைச்சலை உண்டாக்கும்; அது தவறான உறவுகளால் ஏற்படக்கூடிய தொழில் ரீதியான, தனிப்பட்ட மற்றும் உணர்ச்சி ரீதியான உளைச்சலாக இருக்கும். உள்ளங்கையில் தீவுகளை கொண்ட நபர்கள் பயந்தவர்களாக, வலுவில்லா ஆரோக்கியத்துடன், வலுவில்லா இதயத்துடன், சுலபமாக சோர்வடைய கூடியவர்களாக இருப்பார்கள். உள்ளங்கையில் உள்ள தீவு எங்கே முடிகிறது என்பதையும், உள்ளங்கை ரேகை எது வரை தொடர்கிறது என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ஆயுள் ரேகையில் தீவு உருவாக்கம் காணப்பட்டால், அந்த நபருக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்படும்.

நட்சத்திரங்கள் (Stars)

நட்சத்திரங்கள் (Stars)

நட்சத்திரங்கள் உங்களை நட்சத்திரங்களாக ஆக்கலாம். ஆம், ஒரு நபர் நட்சத்திர வடிவிலான அடையாளத்தை தன் உள்ளங்கையில் கொண்டிருந்தால், அது அவரின் நல்ல எதிர்காலத்தை குறிக்கும். இந்த நட்சத்திரம் சரியான மேடு மற்றும் ரேகையில் இருந்தால் இது உண்மையாகும். இருப்பினும், இது ஆயுள் ரேகையில் இருந்தால், அது பெரிய பிரச்சனையை குறிக்கும். ரேகையின் முடிவில் அது இருந்தால், அந்த நபர் பல விருதுகள், புகழ் மற்றும் சாதனைகளை தங்கள் வாழ்க்கையில் பெறுவார்கள். இது நல்ல உறவையும் கூட குறிக்கும். இருப்பினும், சனி ரேகையின் மீது இருந்தால், நட்சத்திரம் துரதிர்ஷ்டம், மோசமான தொழில் தேர்வுகள் மற்றும் உணாச்சி ரீதியான எழுச்சிகளைக் குறிக்கும்.

சதுரங்கள் (Squares)

சதுரங்கள் (Squares)

நட்சத்திரங்களை போலவே ஒருவரின் உள்ளங்கையில் உள்ள சதுர வடிவிலான உருவாக்கங்கள் பாதுகாப்பைக் குறிக்கும். ஆனால் அவை ரேகை முறிவுகளின் மீது இருந்தால் மட்டுமே. இவை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும், அதாவது நல்வழியில் தங்களை வழிநடத்தி செல்லும் ஆசான் அல்லது குருவை அவர்கள் சந்திப்பார்கள். இருப்பினும் சதுர அடையாளம் முறிவில்லா ரேகையின் மீது இருந்தால், அது மூச்சுத்திணறல் அல்லது சிறைக்கு செல்வதைக் குறிக்கும்.

குஞ்சங்கள் (Tassels)

குஞ்சங்கள் (Tassels)

சிலும்பல் ரேகைகள் என்றும் கூறப்படும் குஞ்சங்கள் ஒருவரின் வாழ்க்கையில் குழப்பங்களை குறிக்கும். இதனால், அந்த நபர் உணர்ச்சி ரீதியான, உடல் ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான வீழ்ச்சியை சந்திப்பார்கள். பொதுவாக இது ஆயுள் ரேகையின் முடிவில் காணப்படும். ஒருவருக்கு வயது ஏறும் போது இந்த அடையாளங்கள் உருவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    What Secrets Do The Markings & Symbols In Your Palm Hold?

    If you take a keen look at your palm, you will notice there are many markings and formations within the palm. These markings are symbols that are positive or negative interruptions or blockages within the flow of natural lines in the palm, fingers and mounts.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more