For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நெஞ்சை பதைபதைக்க வைக்கும் உலகின் சில விசித்திரமான சடங்குகள்!!!

  By John
  |

  ஆன்மிகம், காணிக்கை, வேண்டுதல் என்ற காரணங்களை சொல்லி மூடத்தனமாக, சிலர் கடவுள் சொல்லாததை சடங்குகள் என்ற பெயரில் செய்கிறார்கள். நமது ஊர்களிலும் கூட, தீ/ பூ மிதித்தல், தீச்சட்டி எடுப்பது, அலகு குத்துதல் என்று சிலவற்றை செய்வது உண்டு.

  ஆனால், இதுப் போன்ற விசித்திரமான விஷயங்கள் நமது ஊர்களில் மட்டும் நடப்பதில்லை. உலகம் முழுதும் பல நாடுகளில் உள்ள, பல பகுதிகளில் இதுப் போன்ற சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

  இதில், பலவன நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இப்படி எல்லாமா செய்வார்கள் என்று விழிப்பிதுங்க செய்கிறது....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஃபமதிஹனா- Famadihana

  ஃபமதிஹனா- Famadihana

  மடகஸ்கார் பகுதியில் வாழ்ந்து வரும் மலகாஸி எனும் ஓர் மலைவாழ் மக்கள் கொண்டாடும் சடங்கு தான் இந்த ஃபமதிஹனா- Famadihana.இந்த சடங்கில் இவர்கள் இறந்த உடலோடு நடனமாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இறந்தவரின் வீட்டில் இருந்து மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு, புது துணியால் போத்தி இவர்கள் இந்த சடங்கினை செய்கிறார்கள்.

  எகிப்தில் உப்பு கேட்க கூடாது

  எகிப்தில் உப்பு கேட்க கூடாது

  ஒருவேளை நீங்கள் எகிப்தில் யாரவது வீட்டிற்கு விருந்தினராக சென்றால், அந்த விருந்தின் போது, உணவில் உப்பு சேர்க்க உப்பு கேட்பது அல்லது, உப்பை நீங்களே எடுத்து பயன்படுத்துவதை அவர்கள் அவமரியாதையாக கருதுகின்றனர்.

  MOST READ: தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

  ஜெர்மனியின் வினோத திருமண சடங்கு

  ஜெர்மனியின் வினோத திருமண சடங்கு

  ஜெர்மனியில், திருமணத்திற்கு முந்தியதாக ஓர் சடங்கு நடக்கிறது. அந்த சடங்கின் போது, மணமகன், மணமகள் வீட்டார்கள் வந்து பீங்கான் பாத்திரங்களை உடைத்துவிட்டு செல்வார்களாம். அதை, மணமக்கள் ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டுமாம். இது, இவர்கள் இருவரையும் ஒருங்கிணைந்து வாழவும், ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை வளரவும் செய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.

  பிறந்த குழந்தையை எறிதல்

  பிறந்த குழந்தையை எறிதல்

  இதுப் போன்ற உச்சகட்ட காட்சியெல்லாம் இந்தியாவில் தான் நடக்கும். கர்நாடகத்தில் உள்ள சண்டேஸ்வரர் கோவிலில், பிறந்த குழந்தையை அதிர்ஷ்டத்திற்காக ஐம்பது அடி உயரத்தில் இருந்து தூக்கி எறிந்து, குடும்பத்தார் கீழ் நின்று ஓர் துணியை அகல விரித்து பிடிப்பார்களாம்.

  குரங்கு சிற்றுண்டி விருந்து

  குரங்கு சிற்றுண்டி விருந்து

  பாங்காக்கில், குரங்கு சிற்றுண்டி விருந்து என்ற பெயரில், குரங்களுக்கு விருந்து வைப்பது ஓர் சடங்காக நடந்து வருகிறது. வருடத்திற்கு ஓர் முறை தாய்லாந்தில் 3,000 கிலோ பழங்கள், காய்கறிகள் லோப்புரி என்ற பகுதியில் வைத்துவிடுவார்களாம்.

  முஹர்ரம்

  முஹர்ரம்

  முஹம்மதுவின் பேரன் ஹுசைனின் இறப்பிற்கு அஞ்சலி / நன்றி செலுத்தும் வகையில் தங்களை தாங்களே ஓர் முள் சங்கிலியை கொண்டு துன்புறத்திக் கொள்கின்றனர். இது தங்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் முறை என்று கூறினாலும் சற்று வினோதமாக இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்த சடங்கு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

  இறந்தவர்களுக்கு உணவூட்டும் முறை

  இறந்தவர்களுக்கு உணவூட்டும் முறை

  ரோம் நாட்டில் இறந்தவர்களுக்கு உணவூட்டும் சடங்கு ஒன்று இருக்கிறது. அங்குள்ள சமாதிகளில் குழாய்கள் இருக்குமாம் அதன் வழியாக தேன், ஒயின், உணவுப் பொருள்கள் போன்றவற்றை ஊட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

  MOST READ: பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்து, வாரத்திற்கு 4 முறை கலவி கொள்ளும் பெண்மணி!

  ஒட்டக சண்டை துர்கி

  ஒட்டக சண்டை துர்கி

  நாம் சேவல் சண்டை, காளை சண்டை எல்லாம் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது ஒட்டக சண்டை. இதில், இரண்டு ஆண் ஒட்டகங்களை மோத வைக்கின்றனர், இதில், இருந்த இடத்தில் இருந்து எந்த ஒட்டகம் பின்வாங்குகிறதோ, அது தோல்வி அடைந்தது என உறுதி செய்யப்படும்.

  பிணத்தின் சாம்பலை சாப்பிடுவது

  பிணத்தின் சாம்பலை சாப்பிடுவது

  பிரேசிலில் இருக்கும் யோனமமோ (Yonamamo) எனும் மலைவாழ் மக்கள், தங்களுடன் வாழ்ந்து வந்த பிரியமானவர்கள் இறந்த பிறகு அவர்களது உடலின் சாம்பலை சாப்பிடுவதை ஓர் சடங்காக வைத்திருக்கின்றனர். இதன் மூலம், அவர்கள் தங்களை விட்டு பிரியவில்லை என இவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த சாம்பலை சாப்பிடுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  மணமக்களை கருப்படிப்பது

  மணமக்களை கருப்படிப்பது

  ஸ்காட்லாந்து நாட்டில், திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஓர் சடங்கில், மணமக்களை வரவழைத்து, அவள் மீது முட்டை, பால், போன்ற பல பொருட்களை வீசி கருப்படிப்பது ஓர் கொண்டாட்டமாம். இதற்கு பிறகு அவர்கள் குளித்து வரும் போது, புதிதான வாழ்க்கைக்கு தயாராகிவிட்டனர், அவர்களால் எந்த பிரச்சனைகளையும் இனி கையாள முடியும் என நம்புகின்றனர்.

  விரல்களை வெட்டிக்கொள்தல்

  விரல்களை வெட்டிக்கொள்தல்

  இந்தோனேசியாவில், டானி (Dani) எனும் மலைவாழ் மக்களின் மத்தியில் வழக்கத்தில் உள்ள ஓர் சடங்கு வினோதத்தின் உச்சகட்டமாய் இருக்கிறது. வீட்டில் யாரவது ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது விரல்களை துண்டித்துக் கொள்வார்களாம். இப்படி ஒவ்வொருவர் இறக்கும் போதும் செய்கின்றனர்.

  கர்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு தீ மிதித்தல்

  கர்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு தீ மிதித்தல்

  சீனாவில், கர்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு கணவன் தீ மிதித்தால், அவளது பிரசவம் வலியின்றி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

  MOST READ: இந்த செடி வெறும் அழகுக்காக மட்டுமில்ல... இதுல இவ்ளோ மருத்துவ சக்தி இருக்கு... விட்றாதீங்க...

  கழிவறை செல்லக்கூடாது

  கழிவறை செல்லக்கூடாது

  அமெரிக்காவின் நார்த் போர்னே எனப்படும் மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதியில், புதியதாக திருமணம் ஆனவர்கள் மூன்று நாட்கள் கழிவறை செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால், அந்த தம்பதியினரின் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  பெண்ணை கடத்துதல்

  பெண்ணை கடத்துதல்

  ரொமானியா நாடோடிகள் ஓர் பெண்ணை கடத்தி மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வைத்திருந்தால் திருமணம் செய்யும் முறை அங்கு பொதுவாக இருந்திருக்கிறது. இது, அவன் அந்த பெண்ணை வென்றான் என்பதற்கான குறியாம். ஆனால், இந்த முறை இப்போது இல்லை.

  குழந்தையின் தொப்புள்கொடி சாப்பிடுதல்

  குழந்தையின் தொப்புள்கொடி சாப்பிடுதல்

  சீனா, ஜமைக்கா போன்ற நாடுகளில் முன்னாளில், குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் அவர்களது தொப்புள்கொடியை சாப்பிடும் முறை இருந்ததாம். இது உடல் வலிமையை தரும் என்று அவர்கள் கருதி, இதை செய்து வந்துள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Weird Customs From Across The World

  Do you know about the weird customs from across the world, which will make you stunned? read here.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more