உலகத்தில் உள்ள மிகவும் அதிகச் செலவுள்ள முதன்மையான 5 நகரங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உலகத்தில் எந்த ஒரு நாடாக இருந்தாலும் சரி, வாழ்க்கைச் செலவினம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் உலகளாவிய சில நகரங்கள் சந்தித்து வரும் விலை பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. உலகத்தில் அதிகச் செலவுள்ள முதன்மையான 5 நகரங்கள் அடங்கிய பட்டியலை நாங்கள் தயாரித்துள்ளோம்.

பல்வேறு ஆராய்ச்சி ஏஜென்சிகள் வெளியிட்டுள்ள பல்வேறு பட்டியல்கள் உள்ளது. அவை அனைத்தும் ஓரளவிற்கு ஒத்து போகும் வகையில் தான் உள்ளது. இருப்பினும் எகனாமிக் இன்டலிஜன்ஸ் யூனிட் (ஈ.ஐ.யூ) வெளியிட்டுள்ள ஒரு பட்டியல் மிக துல்லியமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அதைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜுரிச், சுவிட்சர்லாந்து

ஜுரிச், சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜுரிச், உயரிய வாழ்க்கை தரத்தை கொண்டுள்ளது. மேலும் உலகத்தில் அதிகச் செலவுள்ள நகரங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நகரத்தில் பாருக்கு சென்றால் ஒரு பீருக்கு 10$ கொடுக்க வேண்டியிருக்கும். அதே போல் ஒரு சினிமா படம் டிக்கட்டிற்கு 20$ கொடுக்க வேண்டியிருக்கும். உலகத்தில் உள்ள பணக்கார நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மிகவும் செலவுள்ள நாடும் கூட. அதனால் இந்த நாடு அல்லது அங்குள்ள இந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், அது சிக்கனமான பயணமாக இருக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

டோக்கியோ, ஜப்பான்

டோக்கியோ, ஜப்பான்

ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்தை உலகத்தில் உள்ள மிக செலவுள்ள நகரமாக பல வருடங்களாக கருதி வந்தாலும், இப்போது அது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த அழகிய நகரில் ஒரு டஜன் முட்டையின் விலை கிட்டத்தட்ட 7$. ஒரு கேன் சோடா கிட்டத்தட்ட 2$ ஆகும். இந்த நகரத்தில் வாழ்க்கைச் செலவினம் மற்றும் வாழ்க்கை தரம் நம்பமுடியாத அளவில் அதிகமாகும்.

ஜெனீவா, சுவிட்சர்லாந்த்

ஜெனீவா, சுவிட்சர்லாந்த்

சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற இரண்டாவது நகரமாக ஜெனீவா விளங்குகிறது. உலகத்தில் அதிகச் செலவுள்ள நகரங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் அருங்காட்சியங்கள், கட்டிடக் கலைகள், பாரம்பரியம் மற்றும் சடங்குகளுக்கு பெயர் பெற்றதாகும் இந்த நகரம். அதனால் தான் ஐரோப்பாவில் உள்ள இந்த சுற்றுலா தளம் பலருடைய விருப்பத்தக்க இடமாக உள்ளது. ஜெனீவாவில் மலிவான உணவையோ அல்லது தங்கும் விடுதியையோ கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். இதை பற்றிய மற்றொரு சுவாரசியமான தகவல் - உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த இடமாக கருதப்படும் நகரங்களில் இது எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

நகோயா, ஜப்பான்

நகோயா, ஜப்பான்

நகோயா என்பது ஜப்பானில் மிக அதிகச் செலவுள்ள இரண்டாவது நகரமாகும். உலகத்தில் மிக அதிகச் செலவுள்ள நகரங்களில் இது நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நகரம் சென்ட்ரல் ஹான்ஷு மீதுள்ள பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள நகரம், உற்பத்தி மையமாக விளங்குகிறது. ஜப்பானில் உற்பத்தியாகும் வாகனங்களில் கிட்டத்தட்ட 50% இங்கே தான் உற்பத்தியாகிறது. நகோயாவில் ஒரு கேன் சோடாவின் விலை 1.50$ ஆகும். பாரில் வாங்கும் பீரின் விலை 11$ ஆகும்.

ஒஸ்லோ, நார்வே

ஒஸ்லோ, நார்வே

உலகத்தில் மிக அதிகச் செலவுள்ள நகரங்களில் முதல் ஐந்து இடத்தில் ஒஸ்லோ நகரம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்றுள்ளது. நார்வேயின் தலைநகரமான இது, ஐரோப்பிய நகரங்களில் அதிகச் செலவுள்ள இரண்டாவது நகரமாகும். உலகத்தில் மிக அதிகச் செலவுள்ள நகரங்களில் இது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக இது கருதப்படுகிறது. அருமையான ஒஸ்லோ நகரத்தில் ஒரு திரைப்படத்தின் டிக்கெட்டிற்கு நீங்கள் 18$ கொடுக்க வேண்டி வரும். வாழ்வதற்கு செலவுள்ள நகரமாக இருந்தாலும் கூட அங்கே உள்ளவர்கள் அனைவரும் பணக்காரர்கள் இல்லை. சராசரி ஊதியங்கள் மற்றும் வாங்கும் திறன் என வரும் போது இந்த நகரம் நான்காவது இடத்தையே பிடித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Five Most Expensive Cities In The World

The costs of living are growing in any country, but it’s nothing compared to the price inflation that some global cities are experiencing. In this article we have prepared a list of the top 5 most expensive cities in the world.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter