For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் செய்த டாப் 10 விசித்திரமான கின்னஸ் சாதனைகள்!!!

|

இந்தியர்கள் எதிலுமே கொஞ்சம் மாறுப்பட்ட சிந்தனை உள்ளவர்கள். அதற்கு சாட்சியாக பல விசித்திரமான, விந்தையான இந்தியர்களின் செயல்பாடுகளை வெளிகாட்டும் புகைப்படங்கள் முகப்புத்தகத்தில் உலாவி வருகின்றன. ஆனால், இது வெறும் நக்கல், நையாண்டியுடன் நிற்காமல் கின்னஸ் சாதனை வரை பயணம் செய்துள்ளது என்பது தான் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களும் கூட சில கிறுக்குத்தனமான கின்னஸ் சாதனைகளை செய்துள்ளனர். ஆனால், நமது நாட்டவர்கள் கொஞ்சம் கலை நயமாகவும், இப்படி எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கலாம் என்று யோசிக்க முடியாத வகையிலும் சில கின்னஸ் சாதனைகள் செய்துள்ளனர்.

இனி, இந்தியர்கள் செய்த டாப் 10 விசித்திரமான கின்னஸ் சாதனைகள் குறித்து பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரதநாட்டியம்

பரதநாட்டியம்

உங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடும் போது உடல் சோர்வு ஏற்படாது, நேரம் போவதே தெரியாது என்று கூறுவார்கள். ஆனால், கலாமண்டலம் ஹேமலதா எனும் பரதநாட்டிய கலைஞர் விடாப்படியாக 123 மணிநேரம் 15 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

குட்டி மாடு

குட்டி மாடு

மிகவும் சிறிய மாடு (61.5 cms) என்ற கின்னஸ் சாதனையை மாணிக்கம் எனும் மாடு புரிந்துள்ளது. இது கேரளாவை சேர்ந்த மாடு. இது நாய்களை விட சிறியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிப்பிடிப்பதில் கின்னஸ்

கட்டிப்பிடிப்பதில் கின்னஸ்

ஆந்திராவை சேர்ந்த ஜெயசிம்ஹா எனும் நபர் ஒரு நிமிடத்தில் 2,436 நபர்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

ஸ்கேட்டிங் சாதனை

ஸ்கேட்டிங் சாதனை

ஐந்து வயதே நிரம்பிய ராகேஷ் எனும் குழந்தை கார்களுக்கு அடியில் 48.1 மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இந்த தூரத்தை வெறும் 23 நொடிகளில் செய்துள்ளார். இவர் இந்த தூரத்தை கடக்க 27 கார்களுக்கு அடியில் ஸ்கேட்டிங் செய்து வந்துள்ளார்.

மூக்கில் டைப் செய்து சாதனை

மூக்கில் டைப் செய்து சாதனை

குர்ஷித் ஹுசைன் என்பவர் தனது மூக்கை பயன்படுத்தி கணினியின் கீபோர்டில் 103 எழுத்துகள் கொண்ட வாக்கியத்தை ஒரு சில நொடிகளில் டைப் செய்து சாதனை புரிந்துள்ளார். இது மிகவும் வினோதமான சாதனையாக உலக அளவில் கருதப்படுகிறது.

ஆடம்பரமான திருமணம்

ஆடம்பரமான திருமணம்

வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா தம்பதியின் திருமணம் தான் உலகில் மிக ஆடம்பரமாகவும், அதிக பொருட்செலவிலும் நடைபெற்ற திருமணம் என்ற கின்னஸ் சாதனையை செய்துள்ளது.வனிஷா மிட்டல் லக்ஷிமி மிட்டல் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்ஃபியில் சாதனை

செல்ஃபியில் சாதனை

செல்ஃபி என்பது கோடா ஒருவகையான அடிக்ஷன் என்று தான் கூற வேண்டும். இதனால் உலகளவில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். நமது நாட்டில் பெடரல் அறிவியல் இன்ஸ்டிட்யூட்டில் ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாக ஒரே நிமிடத்தில் அதிக செல்ஃபி எடுத்து உலக கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.

நீளமான மீசை

நீளமான மீசை

இந்தியாவில் மீசை என்பது வீரத்தின் அடையலாம். இதில் நம்மவர்களை விட்டால் வேறு யார் சாதனை செய்ய முடியும். ஜெய்ப்பூர் சேர்ந்த ராம் சிங் என்பவர் 32 ஆண்டுகளாக 14 அடி நீளமுள்ள மீசையை வளர்த்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

சிறிய பெண்

சிறிய பெண்

உலகிலேயே சிறிய பெண் என்ற கின்னஸ் சாதனை செய்தவர் ஜோதி எனும் இந்திய பெண்.இவரது உயரம் 61.95 cm, அதாவது ஏறத்தாழ இரண்டு அடி. இவரது வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய டர்பன்

பெரிய டர்பன்

உலகிலேயே பெரிய டர்பனுடன் இருப்பவர் எனும் சாதனை செய்தவர் அவதார் சிங் மௌனி. இவரது டர்பனின் எடை நூறு பவுண்ட் மற்றும் நீளம் 645 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டர்பனை கட்ட இவருக்கு 6 மணி நேரம் ஆகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Unique Guinness World Records By Indians

Here we have shared about top 10 unique guinness world records by Indians.
Desktop Bottom Promotion