மக்களின் உயிரோடு விளையாடும் கட்டாயம் தடை செய்ய வேண்டிய பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நவீனமயமான காலத்தில் உண்ணும் உணவுகளில் இருந்து பழக்கவழக்கங்கள் வரை அனைத்திலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. இப்படிப்பட்ட மாற்றங்கள் மக்களிடையே வந்ததோடு, பல்வேறு வகையான நோய்களும் அழையா விருந்தாளியாக உடலினுள் உட்புகுகின்றன.

நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்!!!

தற்போதைய உலகில் உணவு, உடை, இருப்பிடம் போல் பணம் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. பணம் முக்கியமான ஒன்று தான். ஆனால் மற்றவர்களின் உயிரைக் குடித்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எத்தனை நாள் தான் வாழ முடியும். மேலும் இந்த வழியில் கிடைக்கும் பணம் எத்தனை நாள் தான் நிலைக்கும்.

ஆண்கள் கேரட் சாப்பிட்டால் விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படுமாம் : ஆய்வில் தகவல்!

அதிலும் மற்ற பெரிய நாடுகள் எல்லாம் விற்காத சில பொருட்களை, நம் இந்திய அரசாங்கம் வாங்கி குறைந்த விலையில் விற்கிறது. விலை குறைவாக இருப்பதால், மக்களும் சற்றும் சிந்திக்காமல், அதை வாங்கிப் பயன்படுத்தி, நாளடைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து, உயிரை விடுகின்றனர்.

தொடர்ந்து 4 வாரம் 3 லிட்டர் தண்ணீரை குடித்து ஆச்சரியப்படும் வகையில் மாறிய அதிசய பெண்!

இங்கு அப்படி மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் இந்தியாவில் விற்கப்படும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதுப்போன்று மக்களின் உயிரோடு விளையாடும் பல பொருட்களை இந்தியாவில் உடனே தடை செய்ய வேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேகி

மேகி

சில நாட்களுக்கு முன்பு FSSAI மேகியில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளுடமேட் (MSG) மற்றும் ஈயம் (Lead) இருப்பதாக சோதித்துக் கூறியது. உங்களுக்கு தெரியுமா, MSG-யை அதிகமாக எடுத்து வந்தால் கல்லீரல் பிரச்சனைகள், மூளை பாதிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும். மேலும் MSG-யானது ஒருவரை அப்பொருளுக்கு அடிமைப்படுத்திவிடும்.

நிமுசுலிட் (Nimesulide)

நிமுசுலிட் (Nimesulide)

நிமுசுலிட் என்பது ஒரு வலிநிவாரணி மாத்திரை. இம்மாத்திரை அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தபடவே இல்லை. ஆனால் இந்தியாவில் இம்மாத்திரை அதிகம் கிடைக்கிறது. மிகப்பெரிய நாடுகளின் மார்க்கெட்டுகளில் விற்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியுமா? இம்மாத்திரையை அதிகம் எடுத்து வந்தால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மேலும் காய்ச்சலுடன் உள்ள குழந்தைகளுக்கு இம்மாத்திரையைக் கொடுக்கவே கூடாது. ஆனால் இந்தியாவில் இம்மாத்திரையை பல மருத்துவர்கள் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சற்று யோசியுங்கள்.

சிகரெட்

சிகரெட்

இந்தியாவில் சிகரெட்டை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது தான் இந்தியாவில் பல மக்களின் உயிரைக் குடிக்கிறது. பொதுவாக இந்த சிகரெட் பிடிக்கும் பழக்கமானது திரையில் நடிகர், நடிகைகள் பயன்படுத்துவதால் தான், பல இளசுகள் அதனைப் பார்த்து அதைப் போன்றே செய்ய முயற்சித்து, நாளடைவில் அதற்கு அடிமையாகின்றனர். எனவே திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியை தவிர்க்க வேண்டும்.

கோலா

கோலா

காற்றூட்டப்பட்ட பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நன்கு தெரிந்ததே. மேலும் இது உடல் பருமனை அதிகரிக்கக்கூடியதும் கூட. ஆனால் கருப்பாக இருக்கும் அனைத்து பானங்களும், இன்னும் மோசமானது. ஏனெனில் இவற்றில் அஸ்பார்டேம் என்ற செயற்கை சுவையூட்டி, உடலுக்குள் செல்லும் போது மெத்தனாலாக மாறுகிறது. அதிலும் சூடான நிலையில் மெத்தனால் வாயு உடலுக்குள் செல்லும் போது, அது பார்வையை இழக்கச் செய்யும்.

மதுபானம்

மதுபானம்

மதுவினால் பல மக்களின் உயிர் போயிருப்பதோடு, பல குடும்பங்கள் நாசமாயிருக்கின்றன. இவ்வளவு மோசமான மதுபானத்தை நம் இந்திய அரசாங்கமே இதை விற்று, நல்ல குடிமகன்களுக்கு பதிலாக நல்ல குடிகார மகன்களை உருவாக்குகிறது. அரசாங்கமே இப்படி இருந்தால், நாடு எப்படி முன்னேறும்? சற்று சிந்தியுங்கள்.

ஜான்சன் பேபி பொருட்கள்

ஜான்சன் பேபி பொருட்கள்

ஜான்சன் பேபி பொருட்களில் புற்றுநோய்களை உண்டாக்கும் கார்சினோஜென் இருப்பதாக ஒருமுறை இதனை தடை செய்திருந்தனர். ஆனால் இன்னும் பல கடைகளில் இந்த பொருட்களை காண முடிவதோடு, பலரும் இன்னும் வாங்கி பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் என்ன நடக்கிறது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things That Should Be Banned Immediately In India

We often hear the word ban but the actual implementation rarely exists in a country filled with corrupt people bribing their way out.
Subscribe Newsletter