உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

By: John
Subscribe to Boldsky

உலகிலேயே வைத்து மிகவும் கடினமான துறை மற்றும் வேலை என்றால் அது இராணுவத்தில் பணிபுரிவது தான். அனைவரும் நமது உயரைக் காப்பாற்றிக் கொள்ள தான் வேலைக்கு செல்கிறோம். ஆனால், இராணுவ வீரர்கள் தான் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தங்களது உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றனர், இல்லை, இல்லை.., சேவை செய்கின்றனர்.

ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

இராணுவத்தில் சேருவதும், வேலை செய்வதும் லேசுப்பட்ட காரியம் அல்ல. அதற்கான மன தைரியமும், உடல் தகுதியும் இருந்தால் மட்டுமே பட்டாளத்தில் சேர முடியும். இராணுவ பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருக்கும் என நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!

ஆனால், சில நாடுகளின் இராணுவ பயிற்சிகள் கொஞ்சம் வேடிக்கையாக அமைந்திருக்கிறது. அது ஏன், மற்றும் எந்தெந்த நாடுகளில் என்று இனிக் காண்போம்...

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

"கொலக்கொலையா முந்திரிக்கா..." விளையாட்டு

எறிகுண்டுகளை ஒருவர் மாறி ஒருவர் கைமாற்றி ஓர் குழிக்குள் அந்த குண்டை போட்டுவிட்டு அனைவரும் ஒன்றாக தாவி தப்பிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் தவிறினாலும் அனைவரும் மேலோகம் செல்ல வேண்டியது தான்.

Image Courtesy

கை, கால்கள்களை கட்டியபடி நீந்துவது (Drownproofing Training)

கை, கால்கள்களை கட்டியபடி நீந்துவது (Drownproofing Training)

அமெரிக்க இராணுவத்தின் கடற்படை பிரிவினருக்கு வழங்கப்படும் இந்த பயிற்சியில், வீரர்களின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு நீரின் அடியில் நீந்த கூறுவர்.ஐந்து நிமிடம் மிதக்க வேண்டும். 20வது முறை எம்பி, எம்பி மூழ்க வேண்டும் மற்றும் பின்னோக்கி நீந்துதல், நீச்சல் குளத்தின் அடி பாகத்தை தொட்டுவிட்டு வருதல் என பட்டியல் நீள்கிறது.

Image Courtesy

பலகை கற்களை தலையால் முட்டி உடைத்தல்

பலகை கற்களை தலையால் முட்டி உடைத்தல்

தென் கொரியா மற்றும் சீனா நாடுகளில், இராணுவ வீரர்களுக்கு பலகை கற்களை தலையால் முட்டி உடைக்கும் பயிற்சி தரப்படுகிறது. இருவர் தூரத்தில் இருபுறம் கைகளில் பலகை கற்களை பிடித்தவாறு நிற்க, வீரர் ஒடிவது பாய்ந்து அந்த பலகை கல்லை தலையால் முட்டி உடைக்க வேண்டும்.

Image Courtesy

கோப்ராவின் இரத்தத்தை குடித்தல்

கோப்ராவின் இரத்தத்தை குடித்தல்

அமெரிக்க கடல் படை வீரர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு திகைப்பூட்டும் பயிற்சி, கோப்ராவின் இரத்தத்தை குடிக்க வைப்பது. கொப்ராவின் தலையை பிழிந்து இரத்தம் ஊட்டப்படுகிறது, இதை இராணுவ வீரர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர் என்பது மேலும் வியக்க வைக்கிறது..

Image Courtesy

நெருப்பின் மீது நடக்க வைப்பது

நெருப்பின் மீது நடக்க வைப்பது

பெலாரஸ் (Belarus) எனும் ஐரோப்பிய நாட்டில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு தான் நெருப்பின் மீது நடக்க வைக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஓர் உருளை வடிவ கம்பத்தின் மீது சமநிலையாக நடக்க வேண்டும், அடியில் நெருப்பு இருக்கும்.

Image Courtesy

உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்தல்

உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்தல்

இஸ்ரேல் நாட்டு இராணுவ வீரர்களுக்கு தான் இந்த மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படுகிறதாம். பொதுவாகவே மலை ஏறுவது போன்ற பயிற்சிகள் இருக்கும். ஆனால், இது கொஞ்சம் வினோதமாக இருக்கிறது. வானளாவிய பெரிய கட்டிடங்களில் இருந்து குதித்து, மீண்டும் அதன் மீது ஏற வேண்டும்.

Image Courtesy

ஊர்ந்து செல்லும் பயிற்சி

ஊர்ந்து செல்லும் பயிற்சி

தரையில் கரடுமுரடான கற்களை பரப்பி அதன் மீது வெற்றுடலுடன் ஊர்ந்து செல்ல வேண்டும். கைகளை பயன்படுத்தாமல். இந்த பயிற்சி தைவான் கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

Image Courtesy

புகைமூட்டத்திற்கு நடுவே குதிரை ஓட்டுதல்

புகைமூட்டத்திற்கு நடுவே குதிரை ஓட்டுதல்

டச்சு நாட்டின் "ராயல் கார்ட் ஆப் ஹானர்" என்ற பிரிவு வீரர்களுக்கு தான், புகைமூட்டத்திற்கு நடுவவே குதிரை ஓட்டும் பயிற்சி வழங்கப்படுகிறது.

Image Courtesy

நெருப்பு வளையங்களுக்குள் குதித்தல்

நெருப்பு வளையங்களுக்குள் குதித்தல்

நமது ஊர்களில் குரளி வித்தை செய்பவர்கள் செய்யும் இந்த பயிற்சியை சீனாவின் இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை செய்ய தனி துணிச்சல் வேண்டும்.

Image Courtesy

நெஞ்சில் சுடும் பயிற்சி

நெஞ்சில் சுடும் பயிற்சி

ரஷ்யாவின் சிறப்பு படையினருக்கு நேரடியாக நெஞ்சில் சுடும் திகிலூட்டும் பயிற்சி வழங்கப்படுகிறது. அதற்கேற்ற பாதுகாப்பு கருவிகள் கொடுக்கப்படுகிறது எனிலும், எதிரே நின்று குண்டடி வாங்குபவரின் நிலையை பற்றி யோசித்தாலே நெஞ்சம் பதறுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Craziest Military Training Exercises

In some countries their military training exercises are crazy as well as breathtaking too. take a look.
Story first published: Friday, July 3, 2015, 10:59 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter