சவுரவ் கங்குலி vs டோனி: யார் சிறந்த கேப்டன்? - புள்ளி விபரங்கள்! பிறந்தநாள் ஸ்பெஷல்

By: John
Subscribe to Boldsky

அடுத்தடுத்த நாட்களில் பிறந்தநாள் கொண்டாடி வரும் இந்தியாவை உலகளவில் ஜொலிக்க வைத்த இரண்டு கேப்டன்கள் சவுரவ் கங்குலி மற்றும் டோனி. சவுரவ் கங்குலியும், டோனியும் இரு துருவங்கள் போல. கங்குலி ஆக்ரோஷமாக செயல்பட கூடிய கேப்டன். டோனியோ அதற்கு நேர் எதிராக கேப்டன் கூல் என்ற அடைமொழி கொண்டு அழைக்கப்படும் அளவு பொறுமையானவர்.

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!!

இருவருமே உலக கோப்பை தொடர்களில் தங்களது சிறந்த பங்களிப்பை இந்தியாவிற்கு அளித்தவர்கள் என்பது நிதர்சனம். ஆனால், டோனி ஒரு படி மேலே சென்று அந்த உலக கோப்பையை இந்தியாவிற்கு வாங்கி வந்தவர் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெருமையாக எண்ணும் விஷயம் ஆகும்.

கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!

ஜூலை 7 "தல" டோனியின் பிறந்தநாள், ஜூலை 8 "தாதா" கங்குலின் பிறந்தநாள்.... இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இரண்டு நாளாக முகப்புத்தகத்தில் இவர்களை பற்றிய நினைவுகளோடு கொண்டாடி வரும் வேளையில், இவர்களது தலைமை பற்றிய சிறு புள்ளி விபரங்கள் உங்களுக்காக....

சச்சின் டெண்டுல்கரின் சில க்யூட்டான ஹேர் ஸ்டைல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பாடு

டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பாடு

கங்குலி மொத்தம் விளையாடிய 49 போட்டிகளில் 21 வெற்றியும், 13 தோல்வியும், 15 முடிவற்ற போட்டிகள் என 42.6% வெற்றி சதவீதம் ஆகும். டோனி மொத்தம் விளையாடிய 60 போட்டிகளில் 27 வெற்றி, 18 தோல்வி, 15 முடிவற்ற போட்டிகள் என 45% வெற்றி சதவீதம் ஆகும்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பாடு

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பாடு

கங்குலி கேப்டனாக விளையாடிய 147 போட்டிகளில் 76 வெற்றி, 66 தோல்வி, 5 முடிவற்றவை என 51.7% வெற்றி சதவீதத்தில் இருக்கிறார். டோனி கேப்டனாக விளையாடிய (*இன்னும் விளையாடி வருகிறார் ) - சராசரியாக 178 போட்டிகளில் 101 வெற்றி,63 தோல்வி, 4 டிரா, 11 முடிவற்ற போட்டிகள் என 56.74% வெற்றி சதவீதத்தில் இருக்கிறார்.

உலக கோப்பையில் செயல்பாடு

உலக கோப்பையில் செயல்பாடு

கங்குலி மொத்தம் உலக கோப்பையில் 11 போட்டிகள் விளையாடியுள்ளார் 9 வெற்றி, 2 தோல்வி, கோப்பை வென்றதில்லை என 81.8% வெற்றி சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கிறார். டோனி இதுவரை மொத்தம் உலக கோப்பையில் 17 போட்டிகளில் விளையாடியதில் 14 வெற்றி. 1 டிரா, 2 தோல்வி என 82.4% வெற்றி சதவீதமாக தன்வசம் வைத்திருக்கிறார்.

உலக கோப்பையில் சிறந்த செயல்பாடு

உலக கோப்பையில் சிறந்த செயல்பாடு

உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி சென்றதில் சிறந்த செயல்பாடாக கங்குலி 2003ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் ஃபைனல் வரை வழிநடத்தி சென்றார். டோனி 2011ஆம் ஆண்டின் கோப்பையும், 2015ஆண்டு அரையிறுதி வரையிலும் வழிநடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் ட்ரோப்பி

சாம்பியன்ஸ் ட்ரோப்பி

கங்குலி மற்றும் டோனி இருவரும் சாம்பியன்ஸ் ட்ரோப்பியை தலா ஒருமுறை வென்றுள்ளனர். இதில் கங்குலி கடந்த 2003 ஆம் ஆண்டு கோப்பையை இலங்கை அணியுடன் பகிர்ந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு போட்டிகள் - டெஸ்ட்

வெளிநாட்டு போட்டிகள் - டெஸ்ட்

வெளிநாட்டு போட்டிகளில் கங்குலின் செயல்பாடு மேலோங்கி உள்ளது. 28 போட்டிகளில் 11 வெற்றி, 10 தோல்வி, 7 டிரா என 39.3% வெற்றி விகிதத்தில் இருக்கிறார். டோனி 30 போட்டிகளில் 6 வெற்றி, 15 தோல்வி, 9 டிரா என 20% மட்டுமே வெற்றி விகித்ததில் இருக்கிறார்.

வெளிநாட்டு போட்டிகள் - ஒருநாள் போட்டிகள்

வெளிநாட்டு போட்டிகள் - ஒருநாள் போட்டிகள்

கங்குலி 111 போட்டிகளில் 58 வெற்றி, 48 தோல்வி, 5 முடிவற்றவை என 52.3% வெற்றி விகிதம் வைத்திருக்கிறார். டோனி 105 போட்டிகளில் 54 வெற்றி, 40 தோல்வி, 3 டிரா, 8 முடிவற்றவை என 51.4% வெற்றி விகிதத்தில் இருக்கிறார்.

டாஸ் வென்றதில்

டாஸ் வென்றதில்

கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 21முறையும், ஒருநாள் போட்டிகளில் 74 முறையும் டாஸ் வென்றுள்ளார். டோனி டெஸ்ட் போட்டிகளில் 26 முறையும், ஒருநாள் போட்டிகளில் 82 முறையும் டாஸ் வென்றுள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

கேப்டனாக கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 2,561 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5,104 ரன்களும் எடுத்துள்ளார். டோனி டெஸ்ட் போட்டிகளில் 3,454 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6,022 ரன்களும் எடுத்துள்ளார் (இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்..)

அதிகபட்ச ரன்

அதிகபட்ச ரன்

கங்குலி ஒரே போட்டியில் அதிகபட்ச ரன்னாக டெஸ்டில் 144, ஒருநாள் போட்டியில் 144 ரன்கள் விளாசியுள்ளார். டோனி டெஸ்டில் 224, ஒருநாள் போட்டியில் 139* ரன்கள் விளாசியுள்ளார்.

புதிய வீரர்களை அறிமுகம் செய்த எண்ணிக்கை

புதிய வீரர்களை அறிமுகம் செய்த எண்ணிக்கை

கங்குலி கேப்டனாக இருந்து, டெஸ்டில் 19 வீரர்களையும், ஒருநாள் போட்டியில் 30 வீரர்களையும் அறிமுகம் செய்துள்ளார். டோனி, டெஸ்டில் 25, ஒருநாள் போட்டியில் 25 வீரர்களை அறிமுகம் செய்துள்ளார். (* இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்)

மறக்க முடியாத நினைவு

மறக்க முடியாத நினைவு

கங்குலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்லும் தருவாயில் இருந்த போது டோனி தான் கேப்டனாக இருந்தார். ஆனால், இந்தியா போட்டியை வெல்ல போகிறது என்பது ஊர்ஜிதம் ஆகும் தருணத்தில் கங்குலியை கேப்டன் பொறுப்பு ஏற்கும்படி செய்தார். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sourav Ganguly vs MS Dhoni as captains

Do you know about the statistical comparison of Sourav Ganguly and MS Dhoni as Captains? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter