திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை பற்றிய சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!!

Posted By: John
Subscribe to Boldsky

திருப்பதி ஏழுமலையான் உலகிலேயே பணக்கார கடவுள். தங்கம், வைரம், பட்டு, பீதாம்பரம் என செல்வ செழிப்பில் செழுமையாக இருக்கும் கடவுள். கடன் தீர்க்கவும், பாவம் போக்கவும் அருள்பாலிக்கும் கடவுள் என்பதால் உலகமெங்கும் இருந்து இவரை தரிசிக்க எண்ணற்ற அளவில் வருடம் முழுவதும் பக்தர் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.

திருவண்ணாமலை கோவிலை பற்றி பலரும் அறிந்திராத அதிசயிக்கத்தக்க ஆன்மீக தகவல்கள்!!!

தங்களின் லாபத்தில் பங்கு அளித்தது போக, இப்போது தங்கள் கம்பெனியின் ஷேர்களை எல்லாம் கூட ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள் பெரும் செல்வந்தர்கள். இவரை தரிசிக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும், அபிஷேகம் செய்ய வேண்டும் எனில் வருட கணக்கில் காத்திருக்க வேண்டும்.

ஏன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன? அறிவியல் உண்மைகள்!!!

ஆக மொத்தத்தில் ஏழுமலையான் ஏழைகளின் பசியை தீர்க்கும் கடவுள் மட்டுமல்ல, ரொம்ப பிஸியான கடவுளும் கூட. இனி திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை மற்றும் கோவிலை பற்றிய சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பற்றி காணலாம்....

பலருக்கும் தெரியாத புராணத்தில் உள்ள பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏழுமலையான் பூசிக்கும் முறை

ஏழுமலையான் பூசிக்கும் முறை

ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கும் ஏழுமலையான் சிலை

110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கும் ஏழுமலையான் சிலை

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ஸ்பெஷல் பொருட்கள்

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ஸ்பெஷல் பொருட்கள்

அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

சீனாவில் இருந்து வரும் பொருட்கள்

சீனாவில் இருந்து வரும் பொருட்கள்

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

"சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள்

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள்

பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள்

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

உளியின் அச்சு இல்லாத சிலை

உளியின் அச்சு இல்லாத சிலை

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக் கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகுப் போடப்பட்டது போல் இருக்கின்றன.

அரசர்கள் செலுத்திய காணிக்கை

அரசர்கள் செலுத்திய காணிக்கை

மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.

அரசர்கள் செலுத்திய காணிக்கை

அரசர்கள் செலுத்திய காணிக்கை

ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி. 966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.

ஆங்கிலேயர்களின் பயம்

ஆங்கிலேயர்களின் பயம்

திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப் பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

உடையின் நீளம் மற்றும் எடை

உடையின் நீளம் மற்றும் எடை

ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஏலம் விடப்படும் ஏழுமலையானின் நகைகள்

ஏலம் விடப்படும் ஏழுமலையானின் நகைகள்

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடயை நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்கு நேரமும் இல்லை. ஆகையால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

ஏழுமலையான் நகைகளின் எடை

ஏழுமலையான் நகைகளின் எடை

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

முன்னூறு ஆண்டு பழமையான ஒவியங்கள்

முன்னூறு ஆண்டு பழமையான ஒவியங்கள்

திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

வில்வ இல்லை அர்ச்சனை

வில்வ இல்லை அர்ச்சனை

வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆயுதம் இல்லாத ஏழுமலையான்

ஆயுதம் இல்லாத ஏழுமலையான்

எந்த ஒரு சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

புஷ்கரணியில் கலக்கும் ஏழுமலையான் அபிஷேக நீர்

புஷ்கரணியில் கலக்கும் ஏழுமலையான் அபிஷேக நீர்

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

வெள்ளிகிழமை விசேஷ அலங்காரம்

வெள்ளிகிழமை விசேஷ அலங்காரம்

வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்.

திருவில்லிப்புத்தூர் - டூ - திருப்பதி

திருவில்லிப்புத்தூர் - டூ - திருப்பதி

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

திருமலை திருக்கோவிலில் கல்வெட்டுக்கள்

திருமலை திருக்கோவிலில் கல்வெட்டுக்கள்

திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தை சேர்ந்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தை சேர்ந்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தை சேர்ந்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

நன்றி: திருப்பதி ஏழுமலையான் இரகசியக் குறிப்புகள்

English summary

Secrets About Tirupati Venkatesha Staue And Temple

Do you know about the secrets about tirupati venkatesha staue? Read here.
Story first published: Thursday, September 24, 2015, 12:29 [IST]