சனி மகா தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

வேத சாஸ்திரத்தின் படி, சனி என்பது மிகவும் உமிழக் கூடிய கிரகமாகும். நம் சூரிய மண்டலத்தில் மிகவும் மெதுவாக நகரக் கூடிய கிரகமும் இதுவே. அதனால் தான் அது மிகுந்த குளிரோடு, தரிசாக, வறண்ட, ரகசியமிக்க கிரகமாக விளங்குகிறது. அதனால் மற்ற கிரகங்களை காட்டிலும், அதன் தாக்கத்தை அதிகளவிலான சக்தியுடன், நீண்ட காலத்திற்கு உணர்கிறோம்.

சுக்ரன் கிரக ஆளுமையின் கீழ் பிறந்த அனைவருக்கும் இந்த சனி கிரகம் சாதகமாக அமையும் என கூறப்படுகிறது. மறுபுறம், புதன் கிரக ஆளுமையின் கீழ் பிறந்த அனைவருக்கும் இந்த சனி கிரகம் தீங்கானதாக அமையும். சனி கிரகத்தை ஜோதிட சாஸ்திரம் ஒரு பாம்பை போல் சித்தரித்துள்ளது; இதில் ராகு தலையாகவும், கேது வாலாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சனிக்கு முந்தைய வீடுகளில் கேது வீற்றிருந்தால், அந்த நபருக்கு அது நன்மையாக அமையும்.

அதனால் சனியின் நிலைப்பாடு ஒருவரை மிகப்பெரிய வெற்றியாளராகவும் மாற்றும் அல்லது மொத்தமாக கீழே இறக்கி விடவும் செய்யவும். சனி மகாதோஷம் என்பது 19 வருட கால கடின உழைப்பையும் உறுதியையும் கொண்டதாகும். தாமதங்கள் மற்றும் கஷ்டங்களை உருவாக்கும் கண்டிப்பான ஒழுக்கம் & வேலை மற்றும் அந்த நபரின் மீது கூடுஹல் பொறுப்புகள் ஆகியவற்றை சனி வலியுறுத்தும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த காலகட்டம் ஒருவரை திடமாகவும் திறமையாகவும் மாற்ற அடித்தளம் அமைக்கும். இதனால் வரும் காலங்களில் அவர் அதன் பயனை அறுவடை செய்வார். இந்த காலகட்டத்தில் ஒருவர் அழுத்தங்களுக்கும், அவதிகளுக்கும் உள்ளாவார். சனி மிகவும் பலவீனமான இடத்தில் இருந்தால், கடுமையான மற்றும் வலியுள்ள நோய்கள், புற்றுநோய், சரும நோய்கள், பக்கவாதம், கீல்வாதம், மெலிவு, செரிமானமின்மை, பைத்தியம், ஆண்மை குறைவு, ஆஸ்துமா, சிறுநீர் தக்கவைப்பு மற்றும் குடல் அடைப்பு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

உறவுகளின் எதிர்ப்பு, உள்நாட்டு நெருக்கடி மற்றும் பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். சொத்து இழப்பு, மன அமைதியின்மை மற்றும் கண்கள் & சிறுநீரகம் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சனைகள் போன்றவைகளும் இருக்கும். கணவன் அல்லது மனைவி அவதிப்படுவார்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் வலியில் இருப்பார்கள். சனி மகாதோஷத்தின் தீமையான தாக்கங்களில் இருந்து மீண்டு வர, சில சிறந்த தீர்வுகள் உள்ளது. அவைகளை நீங்கள் முயற்சி செய்தும் பார்க்கலாம். இந்த பரிகாரங்களால் நீங்கள் மகாதோஷத்தில் இருந்து முழுமையாக வெளிவர முடியாது. இருந்தாலும் ஓரளவிற்கு அதன் தாக்கங்களை குறைக்கலாம். அந்த பரிகாரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ருத்ராபிஷேகம்

ருத்ராபிஷேகம்

சிவலிங்கத்திற்கு திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ருத்ராபிஷேகம் (தண்ணீர் அபிஷேகம்) செய்வது சனி மகாதோஷத்திற்கு ஒரு சிறந்த பரிகாரமாக அமையும்.

அனுமானை வணங்குவது

அனுமானை வணங்குவது

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அனுமானை வழிபட்டால் சனியை சற்று குளிர்விக்கலாம். மேலும் ஆஞ்சநேயர் மந்திரங்களை தினமும் உச்சரித்தால், சனியால் ஏற்படும் தீமைகள் சற்று குறையும்.

கருப்பு எள்ளு விதைகள்

கருப்பு எள்ளு விதைகள்

சிவபெருமானை வணங்கி பூஜைகள் செய்வதன் மூலம் சனி பகவானை குளிர்விக்க முடியும். பச்சை பாலில் கருப்பு எள்ளை கலந்து சிவபெருமானுக்கு தினமும், குறிப்பாக சனிக்கிழமைகளில், அபிஷேகம் செய்தால் சனி பகவானின் தீய தாக்கங்களில் இருந்து சற்று விடுபடலாம்.

கருப்பு உளுந்தை தானமாக வழங்குங்கள்

கருப்பு உளுந்தை தானமாக வழங்குங்கள்

கருப்பு உளுந்தம் பருப்பை ஏழை மக்களுக்கு தானமாக கொடுங்கள். ஓடும் நதியிலும் கொஞ்சம் தூவி விடுங்கள்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை சனிக்கிழமைகளில் தானமாக கொடுத்தால், சனி பகவானின் ஆசீர்வாதத்தை பெறலாம்.

கிச்சடி

கிச்சடி

சனிக்கிழமைகளில் அரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பில் செய்யப்பட்ட கிச்சடியை உட்கொண்டால் சனி பகவானின் அனுகூலத்தை பெற முடியும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

விரதம் இருப்பது

விரதம் இருப்பது

ஏழரை நாட்டு சனி, இரண்டரை சனி, மகாதோஷம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கீல்வாதம், முதுகு வலி மற்றும் தசை சீர்குலைவு போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம். இந்த விரதம் ஒருவரை நம்பிக்கை மிக்கவராக மாற்றி, மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும்.

எண்ணெய்

எண்ணெய்

ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் தூங்கச் செல்வதற்கு முன்பு, உடம்பு மற்றும் நகங்களுக்கு எண்ணெய் தேய்க்கவும். போதை மருந்து அல்லது அவ்வகையான வேறு ஏதேனும் பொருட்களை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள்.

கருப்பு நிற ஆடை அணியுங்கள்

கருப்பு நிற ஆடை அணியுங்கள்

சனி பகவானுக்கு உகந்த நிறம் கறுப்பாகும். அதனால் நீங்கள் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை குளிர்விக்க, சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.

சனி மந்திரம்

சனி மந்திரம்

"நீலாஞ்சனா சமபாசம் ரவிபுத்ரம்

யமக்ராஜம் சாயா மார்த்தாண்டா

சம்பூத்தம் தம் நமாமி

ஷனைஷ்யரம்"

இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் முடிந்த வரை கூறிக்கொண்டே இருங்கள். அதனை 108 முறை படிக்க முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies To Get Rid Of Shani Mahadasha

To overcome all the bad effects of Shani Mahadasha, there are a few effective remedies which you can try out. Take a look.
Subscribe Newsletter