For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுசேலை - சுவாரஸ்யமானக் கதை

By John
|

மகாபாரதத்தில், சூது விளையாடி தங்கள் நாடு, நிலம், சொத்து என அனைத்தும் இழந்த பாண்டவர்கள் கடைசியில் சகுனியின் சூழ்ச்சி வார்த்தைகளால் தங்களது மனைவியான பாஞ்சாலியையும் பணையம் வைத்து விளையாடி தோற்றனர்.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

அதனால் துட்சாதனன் தனது சேனை பலம் கொண்டு, பாஞ்சாலியின் சேலையை உருவத் தொடங்கினான். தோற்ற நிலையில், ஏதும் செய்ய இயலாத நிலையில் பாண்டவர்களும், வாய் மூடி நின்ற சான்றோர் பெருமக்களும் கைவிரிக்க, கடைசியாய் கண்ணனை வேண்டி, அபலையாய் நின்றால் பாஞ்சாலி.

மகாபாரதத்தில் திரௌபதியை பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

அந்நேரம் தான் கண்ணன் அருள்பாலித்து, சேலையை தந்து காத்தான் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் இது கண்ணன் செய்ய காத்திருந்த கைம்மாறு என்பது யாரும் அறிந்திராத கதை. அதுதான், கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுசேலை என்ற கதையாகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரு கதைகள்

இரு கதைகள்

கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டு சேலை என இரு கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள், ஓர் நாட்டுப்புற கலைஞனின் மனதில் எழுந்த கேள்விக்கு பதிலாக அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தியால் அறுபட்ட கண்ணன்

கத்தியால் அறுபட்ட கண்ணன்

ஓர் நாள் தனது மாளிகையில் பழங்களை அறுத்துக் கொண்டிருக்கும் போது, கண்ணனின் கையை நன்றாக பதம் பார்த்தது கத்தி. இரத்தம் அதிகமாய் கசிந்தது. இதைக் கண்ட அனைவரும் பதைபதைத்துப் போயினர்.

வேடிக்கை பார்த்த மக்கள்

வேடிக்கை பார்த்த மக்கள்

கண்ணின் கையில் இரத்தம் ஊற்றென கசிந்துக் கொண்டிருந்ததைக் கண்டு வருந்தினரே தவிர, யாவரும் ஓடி வந்து உதவவில்லை. அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாஞ்சாலி அனுதாபப்படவில்லை...

பாஞ்சாலி அனுதாபப்படவில்லை...

அந்த சமயம் அங்கு வந்த பாஞ்சாலி, மற்றவர்களை போல அனுதாபப்படவில்லை. உடனே, தான் அணிந்திருந்த பட்டு சேலையின் ஒரு பகுதியை கிழித்து கண்ணனுக்கு கட்டுப் போட்டு உதவினால்.

உடனே நின்ற இரத்தம்

உடனே நின்ற இரத்தம்

கட்டுப் போட்டவுடன் எப்படி இரத்தம் உடனே நிற்கும்? ஆம், இதுவம் கண்ணனின் விளையாட்டுகளில் ஒன்று தான், தனக்கு ஏதேனும் நேர்ந்தால், யார் முதலில் வந்து உதவுகிறார் என்று பார்க்கவே கண்ணன் இவ்வாறு சோதனை செய்தான்.

பாஞ்சாலி வென்றால்

பாஞ்சாலி வென்றால்

கண்ணனின் இந்த விளையாட்டில், மற்றவர்களை முந்தி, பாஞ்சாலி தனது அன்பினால் கண்ணனின் இந்த விளையாட்டில் வென்றால்.

அடுத்த கதை: கண்ணனின் ஆடையை பறித்த மீன்

அடுத்த கதை: கண்ணனின் ஆடையை பறித்த மீன்

மற்றுமொரு கதையில், கண்ணன் ஆறில் நீராடிக் கொண்டிருக்கும் போது, மீன் ஒன்று கண்ணின் ஆடையை கவ்வி சென்று மறைந்துவிட்டது. ஆடையின்றி கரை ஏற இயலாமல் தவித்தான் கண்ணன்.

 கண்ணனின் தவிப்பு

கண்ணனின் தவிப்பு

ஒருவேளை, ஆடையின்றி கரையேறினாலும் எவ்வாறு ஊருக்குள் செல்ல இயலும் என தவித்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

நீரிலேயே நின்ற கண்ணன்

நீரிலேயே நின்ற கண்ணன்

ஆகையால், யாரேனும் வரும் வரை காத்திருப்பது தான் கதி என்று குளிர் நீரிலேயே காத்திருந்தான் கண்ணன்.

பலரும் அவ்வழி சென்றும் உதவவில்லை

பலரும் அவ்வழி சென்றும் உதவவில்லை

அவ்வழியே சென்ற பலரும் நீரில் கண்ணன் இருப்பதை கண்டும் உதவவில்லை. உண்மையில், அவன் நிலையை அறியவில்லை.

பாஞ்சாலி அவ்வழியே வந்தால்

பாஞ்சாலி அவ்வழியே வந்தால்

அந்த சமயத்தில் அவ்வழியே வந்த பாஞ்சாலி, கண்ணனின் நிலையை உணர்ந்தால். தான் அணிந்திருந்த பட்டு புடவையின், ஒரு பாகத்தை கிழித்துக் கொடுத்து கண்ணனுக்கு உதவி, கரையேறி வரக் கூறினால்.

செய் நன்றி மறவா கண்ணன்

செய் நன்றி மறவா கண்ணன்

இந்த நன்றியை மறவாத கண்ணன். பாஞ்சாலிக்கு நன்றிகடன் செலுத்த நேரம் வரும் வரை காத்திருந்தான்.

கைமாறு செய்த கண்ணன்

கைமாறு செய்த கண்ணன்

முன்னர், பாஞ்சாலி தனக்கு செய்த உதவிக்கு கைமாறாகவே கண்ணன், சூதின் முடிவில், பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் போது, அவளது மானம் காக்க, உடனே எழுந்தருளி அவளை காத்தான்.

 நாட்டுபுற கலைஞன்

நாட்டுபுற கலைஞன்

இவ்விரு கதைகளும், நாட்டுபுற கலைஞர்களால் மாபாரத பாடல்களில் கூறப்படும் கற்பனை கதைகளென கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Panjali Saved Krishna's Honour By Her Silk Saree

We all knew, Krishana saved panjali in mahabharata, by his grace. But, do you know that panjali also done the same? Read here.
Desktop Bottom Promotion