For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள மிகவும் வினோதமான திருமண வழக்கங்கள்!

By Babu
|

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இத்தகைய திருமணம் ஒருவரின் முக்கிய மைல்கல்லாகும். அத்தகைய திருமணத்தின் போது மேற்கொள்ளும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான வழக்கங்கள் உள்ளன.

உலகில் உள்ள விநோதமான மற்றும் கொடுமையான சில கலாச்சாரங்கள்!!!

உதாரணமாக, காங்கோவில் திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் சிரிக்கவே கூடாதாம். இதுப்போன்று உலகின் சில பகுதிகளில் வினோதமான திருமண வழக்கங்கள் உள்ளது. உங்களுக்கு அந்த வித்தியாசமான திருமண வழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வில் மற்றும் அம்பு விளையாட்டு

வில் மற்றும் அம்பு விளையாட்டு

சீனாவின் யுகர் கலாச்சாரத்தில் மணமகன், மணமகளின் மீது மூன்று முறை அம்பு செலுத்த வேண்டுமாம். அந்த அம்பு கூர்மையாக இருக்காது, இருப்பினும் வலிக்கும். அப்படி மணமகளின் மீது அம்பு செலுத்திய பின், மணமகன், ஒவ்வொரு அம்பை உடைத்து, நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று உறுதியளிப்பாராம்.

இரண்டு குழந்தைகள் அவசியம்

இரண்டு குழந்தைகள் அவசியம்

தெற்கு சூடானில் உள்ள நியூர் பழங்குடியினரின் வழக்கப்படி, மணப்பெண் 2 குழந்தையை பெற்றெடுத்தால் தான் அந்த திருமணம் முழுமையடையுமாம். ஒருவேளை மணப்பெண்ணால் இரண்டு குழந்தையை பெற்றெடுக்க முடியாவிட்டால், கணவன் மனைவியை விவாகரத்து செய்யக்கூட உரிமை உள்ளதாம்.

வித்தியாசமான முதலிரவு

வித்தியாசமான முதலிரவு

ஆப்பிரிக்காவின் சில கிராம பகுதிகளில், கொடுமையான ஒரு வழக்கம் உள்ளது. அது என்னவெனில், முதலிரவின் போது படுக்கையறைக்கு ஒரு வயதான பெண் கூடவே இருந்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பாராம்.

மீன் அடி கொடுக்கப்படும்

மீன் அடி கொடுக்கப்படும்

கொரியன் திருமண சடங்குகளுக்குப் பின், மணமகனின் நண்பர்கள், மணமகனின் ஷூ மற்றும் ஷாக்ஸை கழற்றி, மீன் கொண்டு பாதங்களை அடிப்பார்களாம். அது இந்த சடங்கானது முதலிரவிற்கு மணமகனை தயார் செய்ய பின்பற்றப்படுகிறதாம்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸில் புது தம்பதியர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், முதலிரவின் போது, வீட்டிற்கு வெளியே நின்று பாத்திரத்தை தட்டி கூச்சல் போடுவார்களாம். இவர்களை அமைதிப்படுத்துவதற்கு தம்பதிகள், உணவுகள் மற்றும் பானங்களை வழங்க வேண்டுமாம்.

சிரிக்கக்கூடாது

சிரிக்கக்கூடாது

காங்கோவில் மணமகன் மற்றும் மணப்பெண் திருமணத்தின் போது சிரிக்கவே கூடாதாம். காங்கோவில் திருமணத்தின் போது, சிரிப்பது தடைவிதிக்கப்பட்டுள்ளதாம். மேலும் திருமணத்தின் போது மட்டுமின்றி, அந்நாள் முழுவதும் சிரிக்கவேகூடாது. ஏன் போட்டோ எடுக்கும் போது கூட சிரிக்கக்கூடாது. என்ன விசித்திரமான திருமண வழக்கம் என்று பார்த்தீர்களா!

Image Source

மணமகனின் ஷூவை திருடுவது

மணமகனின் ஷூவை திருடுவது

சில இந்திய திருமண வழக்கத்தில் ஒன்று தான், திருமண நாளின் போது மணமகனின் ஷூவை மணமகளின் வீட்டார் திருடி விளையாடும் பழக்கம் உள்ளது. மேலும் மணமகன் எந்த ஒரு காலணியை அணிந்தாலும், அதனை அவர்கள் திருடிவிடுவார்கள். ஒருவேளை மணமகனுக்கு காலணி வேண்டுமானால், மணமகளின் வீட்டார் என்ன கேட்கிறார்களோ அதை செய்துவிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

கழிப்பறை நேரம்

கழிப்பறை நேரம்

பிரெஞ்சு திருமண சடங்குகளில் ஒன்று, மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள், ஒரு டாய்லெட் பௌலில் ஏதேனும் ஒரு உணவுப் பொருள் அல்லது பானத்தை நிரப்பி, இருவரையும் சாப்பிட சொல்வார்களாம்.

சிறுநீர் அல்லது மலம் கழிக்க தடை

சிறுநீர் அல்லது மலம் கழிக்க தடை

வடக்கு போர்னியோவில் உள்ள டிடாங் பழங்குடியின மக்களின் திருமண வழக்கங்களில் ஒன்று, திருமணத்திற்கு பின் புதுமணத் தம்பதியர்கள் 3 பகல் மற்றும் இரவுகள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. இன்னும் மோசமாக, அந்த மூன்று பகல் மற்றும் இரவிலும் சிறுநீர் அல்லது மலம் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ன கொடுமைன்னு பாருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Bizarre Marriage Traditions Around the World

Take a look at these weird marriage traditions around the world. You will be amazed to see how these couples get married. Take a look at these traditions.
Story first published: Tuesday, July 7, 2015, 14:49 [IST]
Desktop Bottom Promotion