பலரும் அறியாத வில்லாதி வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஒன்றல்ல இரண்டல்ல ஏறத்தாழ 70 ஆண்டுகள் திரையுலகில் நிலைப்பெற்று நடித்து பெரும் புகழ் பெற்ற வில்லாதி வில்லன், வில்லன்களுக்கு எல்லாம் வில்லன் என்று பெயர் வாங்கியவர் எம்.என். நம்பியார். திரையில் மட்டுமே கொடூரமான வில்லனாக திகழ்ந்த நம்பியார் தரையில் மிகவும் பக்திமானாகவும், அமைதியானவருமாக தான் இருந்தார்.

எம்.ஜி.ஆர்-ன் செருப்பை தைத்துக் கொடுத்த கலைவாணர் அவர்கள் - அழியாத நிகழ்வுகள்!

1919ஆம் ஆண்டு பிறந்த நம்பியார் தந்தையின் மறைவு காரணமாக ஊட்டிக்கு படிக்க சென்றார். 13 வயதிலேயே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் பிறந்து நவாப் ராஜமாணிக்கம் அவர்களது நாடக குழுவில் இணைந்தார். இவரது முதல் படம் பக்த ராமதாஸ், 1935-ம் ஆண்டு வெளிவந்தது. இவரது முதல் படத்தில் இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

இனி, வில்லாதி வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

1950,60-களில் அசோகன், வீரப்பா, மனோகர் போன்ற பல வில்லன் நடிகர்கள் இருந்தாலும் கூட, வில்லன்களுக்கு எல்லாம் வில்லனாக திகந்தவர் நம்பியார். இதற்கு இவரது தனி பாணி தான் காரணம். புருவத்தை ஏற்றிக் கொண்டு, கைகளை பிசைந்தப்படி இவர் வசனம் பேசும் போது அஞ்சாத நபர்களே இல்லை.

நம்பியார் ஆரம்பக் காலம்...

நம்பியார் ஆரம்பக் காலம்...

மஞ்சேரி எனும் ஊரில் பிறந்த நாராயணன் தான் எம்.என். நம்பியார். இவரது தந்தையின் மறைவுக்கு பிறகு ஊட்டியில் இருந்த தனது அக்காவின் கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நம்பியார், குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமல், தனது 13 வயதில் சென்னை கிளம்பிவிட்டார்.

நாடக குழுவில் சேர்ந்தார்

நாடக குழுவில் சேர்ந்தார்

சென்னை வந்தவுடன் நடிப்பில் ஆர்வம் கொண்ட நம்பியார், நவாப் ராஜமாணிக்கம் அவர்களது நாடக குழுவில் சேர்ந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடம் ஏற்று நடித்து வந்த நம்பியார் பக்த ராமதாஸ் எனும் திரைப்படத்தில் ஓர் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தை 1935-ல் துவக்கினார்.

நாடகம் டூ சினிமா

நாடகம் டூ சினிமா

முதன் முதலில் நம்பியார் வாங்கிய சம்பளம் 40 ரூபாய் என்று கூறப்படுகிறது. சின்ன சின்ன வேடங்களில் நடித்த போதிலும், ஆரம்பக் காலகட்டத்தில் நம்பியாருக்கு ஹீரோ வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனாலும், வில்லன் வேடத்தில் தான் அவர் அபரிமிதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தினர். பிறகு காலத்தின் போக்கில் அவர் முன்னணி வில்லன் நடிகராக உருவெடுத்தார்.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லன்

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லன்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்தது எம்.என். நம்பியார் அவர்கள் தான். தலைவர் படம் என்றாலே கூப்பிடு நம்பியார... என்பது போல தான் இருக்கும்.

சர்வாதிகாரி

சர்வாதிகாரி

சர்வாதிகாரி எனும் படத்தில் நம்பியாரின் வி்ல்லத்தனம் மிகவும் பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதிக் கொண்ட கத்திச் சண்டை காட்சியை பலரும் ரசித்து பார்த்தனர். இதை தொடர்ந்து, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம் என இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

மக்களின் அச்சமும், சாபமும்

மக்களின் அச்சமும், சாபமும்

தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்ததால் (திரையில்) மக்கள் நம்பியாரின் மீது நிஜமாகவே கோபம் கொண்டனர். அந்த காலத்தில் திரைப்படத்தோடு மிகவும் ஒன்றி போய் அனைத்தும் உண்மை என்று நம்பினர். எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அவரை எதிர்த்து நடிப்பதால், நம்பியாருக்கு மக்கள் சாபம் எல்லாம் விட்டுள்ளனர்.

நீங்களும் ஹீரோதான்

நீங்களும் ஹீரோதான்

இந்த சம்பவத்தை தான் இயக்குநர் வி.சேகர் தான் தயாரித்த "நீங்களும் ஹீரோதான்" என்ற படத்தில் ஒரு காட்சியாகவே வைத்தார். அதில், நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும் ஒரு படப்பிடிப்புக்காக கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு மக்கள் தங்க வீடு தராமல் விரட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மும்மூர்த்திகளுடன் வில்லன்

மும்மூர்த்திகளுடன் வில்லன்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என அன்றைய மும்மூர்த்திகளாக திரையுலகில் ஜொலித்த மூவர்களுடனும் வில்லன் வேடம் ஏற்று புகழ் பெற்றவர் நம்பியார். எம்.ஜி.ஆருடன் 75க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை சிவாஜிக்கு தம்பியாகவும் நம்பியார் நடித்திருந்தார்.

7 தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை பெற்றவர்

7 தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை பெற்றவர்

எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடங்கி, ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், விஜய் வரை 7 தலைமுறை நடிகர்களுடன் நம்பியார் நடித்துள்ளார். திரையுலகில் இதுவொரு சாதனையாகவே கருதப்படுகிறது. இவர் 1935-ல் தொடங்கி 2006-ம் வரை நடித்தார்.

குணச்சித்திர நடிகர்

குணச்சித்திர நடிகர்

80-களில் இருந்து இவர் வில்லத்தனம் மட்டுமின்றி, நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குருசாமிக்கு எல்லாம் குருசாமி

குருசாமிக்கு எல்லாம் குருசாமி

ஏறத்தாழ 65 ஆண்டுகள் தொடர்ந்து சபரி மலைக்கு மாலை அணிந்து சென்றவர் எம்.என். நம்பியார். அதனாலேயே குரு சாமிக்கு எல்லாம் குரு சாமி என்று ஐயப்பனுக்கு மாலைப் போடுவோர் நம்பியாரை புகழோடு அழைத்தனர்.

எம்.ஜி.ஆர் தரும் மாலை

எம்.ஜி.ஆர் தரும் மாலை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, நம்பியார் அவர்கள் இருமுடி கட்டிச் செல்லும்போது அவர் அனுப்பி வைக்கும் மாலையை தான், அணிவிக்கப்படுமாம். மேலும், பெரும்பாலும் திரையுலகில் இருந்து மாலை போடுபவர்கள் நம்பியாருடன் தான் மலைக்கு செல்வார்கள்.

ஐயப்பன் திருவடி சேர்ந்தார்

ஐயப்பன் திருவடி சேர்ந்தார்

ஆரம்பம் முதலே ஐயப்பன் பக்தராக இருந்த எம்.என். நம்பியார். ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் காலத்திலேயே மரணமடைந்தார். இன்று (நவம்பர் 19) அவரது 7வது நினைவு நாள் ஆகும். இவரது சீடர்கள், நம்பியார் ஐயப்பன் திருவடியே சேர்ந்துவிட்டார் என்று கருதுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Versatile Actor MN Nambiyar

Lesser Known Facts About Versatile Actor MN Nambiyar
Please Wait while comments are loading...
Subscribe Newsletter