உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர் பட்டியலில் இடம் பிடித்த இந்திய நடிகர்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த பத்து ஆண்டுகளில், உலக சினிமாவின் கொட்டகையில் இந்திய சினிமாக்களும் தங்களது கால் தடத்தை பதித்து வருகின்றன. இதற்கு, திறமையான இயக்குனர்களும், நடிகர்களும் தான் காரணம். ஆமிர்கானின் பி.கே திரைப்படம் 750 கோடி வசூலித்து உலக திரையுலகை ஆச்சரியப்படுத்தியது. இதற்கு காரணம், இப்படம் சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளில் மட்டும் 100 கோடியை வசூலித்தது தான்.

'தி ராக்' போல உடற்கட்டு வேண்டுமா? அப்போ அவரோட ஃபிட்னஸ் ரகசியத்த தெரிஞ்சுக்குங்க!!!

இப்போது, பாகுபலி திரைப்படமும் உலகளவிலும் பெரும் புகழ்பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வகையில், உலக சினிமா எனும் பிரிவில் இந்திய சினிமாக்களும் தனது பங்கினை செம்மையாக செய்து வருகிறது என்றே கூறலாம். சினிமா மட்டுமின்றி, உலக நடிகர்கள் பட்டியலிலும் இந்திய நடிகர்கள் இப்போது சேர்ந்துவிட்டனர்.

சிறு வயதில் இருந்தே நடித்து வரும் பிரபல இந்திய நடிகர்கள்!!!

இந்திய நடிகர் இர்பான் கான் ஹாலிவுட் படங்களில் (லைப் ஆப் பை, ஜுராசிக் பார்க் - 2015) தனது திறமையால் ஜொலித்து வருகிறார். திறமை மட்டுமின்றி ஊதியத்தின் வகையிலும் நம் நாட்டு நடிகர்கள், உலகளவில் புகழ்பெற்ற நடிகர்களோடு போட்டிப் போட்டு டாப் 10 இடத்தில் இடம் பெற்றுவிட்டனர்....

நம்ம ஊர் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து நடிகரான அமிதாப் $33.5 மில்லியன் டாலர்கள் ஊதியம் பெற்று டாப் 10 வரிசையில் ஏழாவது இடத்தை பெற்றிருக்கிறார். அமிதாபின் ஷமிதாப், பிகு (Piku), பூத்நாத் ரிட்டன்ஸ் போன்ற படங்கள் உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றது.

சல்மான் கான்

சல்மான் கான்

அமிதாப் பச்சனுக்கு அடுத்து எட்டாம் இடத்தை பிடித்திருக்கிறார் சல்மான் கான், இவரது ஊதியம் $33.5 மில்லியன் டாலர்கள். இவர் கடைசியாக நடித்த படங்களில் "கிக்" மற்றும் "பஜ்ஜிறங்கி பைஜான்" போன்ற படங்கள் பெரும் லாபம் ஈட்டிக்கொடுத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

பாலிவுட்டின் அக்ஷன் கிங் என்று இவரை குறிப்பிடுவது மிகையாகாது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல், தானாக ரிஸ்க் எடுத்து நடிக்கும் துணிச்சலான நடிகர். இவர் $32.5 மில்லியன் டாலர்கள் ஊதியம் பெற்று 9வது இடத்தில் இருக்கிறார்.

அயன் மேன்நாயகன் முதலிடம்

அயன் மேன்நாயகன் முதலிடம்

ராபர்ட் டவுனி ஜுனியர், இந்த பட்டியலில் $80 மில்லியன் டாலர்கள் ஊதியம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். "எவஞ்சர்ஸ்", "அயன் மேன்" போன்ற இவரது படங்கள் உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

ஜாக்கி சான்

ஜாக்கி சான்

1980-களில் இருந்தே உலக ரசிகர்களை கவர்ந்து வரும் ஜாக்கி சான் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். இவரது ஊதியம் $50 மில்லியன் டாலர்கள்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நாயகன் வின் டீசல்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நாயகன் வின் டீசல்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ட்ரிப்பில் எக்ஸ் போன்ற படங்களின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு பரிச்சியமான வின் டீசல் $47 மில்லியன் டாலர்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

ஹேங்கோவர் நாயகன் நான்காம் இடம்

ஹேங்கோவர் நாயகன் நான்காம் இடம்

"ஹேங்கோவர்", "தி ஏ டீம்", "கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி" போன்ற திரைப்படங்கள் பிராட்லி கூப்பரை இந்திய சினிமா ரசிகர்களுக்கும் அடையாளம் காட்டியது. இவர் $41.5 மில்லியன் டாலர் ஊதியத்துடன் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

டாம் குரூஸ்

டாம் குரூஸ்

"மிசன் இம்பாசிபல்" நாயகன் டாம் குரூஸ் $40 மில்லியன் டாலர்களுடன் ஆறாவது இடத்திலும், இவருக்கு முந்திய இடத்தில், ஆடம் எனும் அமெரிக்க நடிகர் $41 மில்லியன் டாலர் ஊதியத்துடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

ராக் அண்ட் கேப்டன் ஜாக்

ராக் அண்ட் கேப்டன் ஜாக்

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (2014) படத்தில் நடித்த மார்க் பத்தாவது இடத்திலும் ($32 மில்லியன்), "தி ராக்" ட்வெயின் ஜான்சன் 11வது இடத்திலும் ($31.5 மில்லியன்) மற்றும் "பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்" புகழ் ஜானி டெப் 12வது இடத்திலும் இருக்கிறார்கள் ($30 மில்லியன்)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Actors On The Top 10 Highest Paid Actors In The World

Indian Actors On The Top 10 Highest Paid Actors In The World, take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter